26 மே, 2016


கலைஞருக்கு இரா.சம்பந்தன் வாழ்த்து!


இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் - இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன்,  தி.மு.கழகத் தலைவர் கலைஞர் 13-வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அனுப்பியுள்ள கடிதம்:

’’தாங்கள் 13ஆவது முறையாக தமிழ்நாட்டின் சட்டசபைக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறீர்கள்.  இதுவொரு சாதாரண சாதனையல்ல.  எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய ஒரு சாதனை யாகும்.  ஆட்சியை கைப்பற்றாவிட்டாலும் பலமான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றிருக் கின்றீர்கள்.  உங்களுக்கு இலங்கை வாழ் தமிழ் மக்கள் சாபில் என வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  

இலங்கைத்தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வை பெறுவதற்கு உங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பு தொடர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்’’என்று குறிப்பிட்டுள்ளார்