-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

ad

11 ஜூன், 2020

கூட்டமைப்பு யாழ் வேட்பாளரில் சரவணபவனுக்கு ஆதரவு உச்சம் .விருப்புவாக்கில் முதலிடம் அடையும் சாத்தியம் 
கூட்டமைப்பின் வேட்ப்பாளர் பட்டியலில் 4 ஆம் இலக்க   வேட்பாளரும் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினரும் உதயன் உரிமையாளருமான சரவணபவனுக்கு  யாழ் மாவட்த்தில் மக்களிடையே  செல்வாக்கு அதியுச்சமாக  வளர்ந்துள்ளதாக   அரசியல் விமர்சகர்கள் கருது வெளியிட்டுள்ளனர் . கடந்த காலங்களில் தீவகம் வலிகாமம் வடமராட்சி என  பல்வேறு பிராந்தியங்களாலும் திடடமிட்டு அபிவிருத்தி நடவடிக்கைளை கொரோனா நிவாரண உதவிகள் என  மக்களோடு ஒட்டி உறவாடி இந்த செல்வாக்கை அடைந்துள்ளார் .   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களிமும் இப்போதைய புதிய வேட்பாளர்களினதும்  வரிசையில் செல்வந்தராக திகழ்பவர் இவர் .அண்மைக்காலமாக தமிழரசுக்கட்சியின்  மகளிர் அணி வாலிப முன்னணி  அமைப்புகளும் இவரோடு ஒத்துழைத்து அவர்களின் சிபாரிசுகளை நிறைவேற்றுவதில் முழுமூச்சாக உழைத்தமை  அறிந்ததே கொரோன காலத்தில் வயது ,வசதி, சுகாதாரம் என கண்டுகொள்ளாது  இரவு பகலாக மக்கள் மத்தியில் தன்னை பிரபலப்படுத்தி வெற்றி கண்டுள்ளார் .இறுதி ஆயுதமாக சுமந்திரனின்  சிங்கள ஊடகத்துக்கான  பேட்டியை   கையில் தூக்கி சுமந்திரனின் மீது  வெறுப்பான மக்களை தன்பக்கம் ஈர்த்துள்ளார்

விளம்பரம்