புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2020

கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சின் கொரோனாத் தொற்று அறிக்கை! அபாயத்தின் அறிகுறி


கடந்த 24 மணி நேரத்திற்குள் பிரான்சில் மீண்டும் கொரோனாத் தொற்றுக்களும் சாவுகளும் அதிகரித்துள்ளன.

கடந்த 24 மணிநேரத்திற்குள் 35.641 பேரிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது வரை பிரான்சில் 1.364.525 (ஒரு மில்லியன் மூன்று இலட்சத்து அறுபத்திநாலாயிரத்து ஐநூற்றி இரபத்தியைந்து பேர்) பேரிற்குத் தொற்று ஏறப்ட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 224 பேர் சாவடைந்துள்ளனர்.

மொத்தமாக 36.788 பேர் பிரான்சில் சாவடைந்துள்ளனர்.

2.448 தொற்றுத் தொகுதி வலயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 649 முதியோர் இல்லங்கள் தொற்றிற்கு உள்ளாகி உள்ளன.

வைத்தியாசாலைகளில் 23.103 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 3.443 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிராபத்தான் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனனர்.

ad

ad