புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜன., 2021

சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் படைத்த சாதனை

www.pungudutivuswiss.com
ஜப்பான் நாட்டில் இடம்பெற்ற முதலாவது இதோசு ரியூ இணையவழி மூலம் நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் சுவிஸ் நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் சாதனையை படைத்துள்ளனர்.

ஜப்பான் நாட்டில் இடம்பெற்ற முதலாவது இதோசு ரியூ இணையவழி மூலம் நடைபெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் 18 நாடுகளில் இருந்து சுமார் 400 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

ஈழத்தமிழர் சார்பில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த சர்வதேச போட்டியில் பங்குபற்றிய மாணவர்களில் 10 போட்டியாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

அந்தவகையில் 2 தங்கப்பதக்கமும், 6 வெள்ளிப்பதக்கங்களும், 2 வெண்கல பதக்கங்களும் பெற்றுக்கொண்டனர்.

ஜப்பான் நாட்டில் இருந்தே முடிவுகளை அறிவித்தார்கள், இந்த ஈழத்தமிழர்களுக்கு வாழ்த்துகள் குவிந்தவண்ணமே இருக்கிறது

ad

ad