புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2023

நாளை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்!

www.pungudutivuswiss.com


தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நாளை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நாளை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. எனவே அது தொடர்பில் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இறுதி முடிவெடுப்பது என அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

ad

ad