புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 நவ., 2023

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தம்! - ஐசிசி முடிவு.

www.pungudutivuswiss.com
உடன் அமுலுக்கு வரும் வகையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை செய்துள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை செய்துள்ளது.

ICCயின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கை கிரிக்கெட் தனது கடமைகளை கடுமையாக மீறுவதாக நேற்று சபை கூடி தீர்மானித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் செயல்பாடு, சுதந்திரம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் அரசின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் மேலும் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் பணிப்பாளர் சபை இலங்கையில் கிரிக்கெட் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றை இணையத்தளத்தின் ஊடாக நடத்தியதன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பேரவையின் சிறப்புக் கூட்டம் நவம்பர் 18-21 திகதிகளில் இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ad

ad