புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2024

யாழ். செல்லும் அனுர - தமிழ்க் கட்சிகளை சந்திக்கமாட்டார்!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்திற்கு நாளை செல்லவுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க,அரசியல் கட்சிகளுடன் எந்தவொரு சந்திப்புக்களையும் நடத்த மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு நாளை செல்லவுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க,அரசியல் கட்சிகளுடன் எந்தவொரு சந்திப்புக்களையும் நடத்த மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 4 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை நிறுவனங்களின் மாநாடு தனியார் விடுதியில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அனுரகுமார திஸாநாயக்க, யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார்.

இலங்கையில் ஒரு தெளிவான நிதிக் கட்டமைப்பை உருவாக்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் அதில் பங்கேற்குமாறு நிதி விவகாரங்களை கையாளும் புத்திஜீவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள அரசியல் கட்சிகளுக்கு இடையில் இந்த நிலையில் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் யாழ்ப்பாணத்திலுள்ள அரசியல் கட்சிகளுக்கும் இடையில் தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளாக கூறப்பட்ட போதிலும் எந்தவொரு சந்திப்புக்களும் ஏற்பாடு செய்யப்படவில்லையென தேசிய மக்கள் சக்தி கூறியுள்ளது.

ad

ad