-

9 செப்., 2026

www.pungudutivuswiss.com
AfD கட்சியின் வெற்றிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
Thousands of people took to the streets across Germany after the AfD paty's election win: AfD கட்சியின் வெற்றிக்கு எதிராக ஜேர்மனியில் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஜேர்மன் கட்சிகள் பலவும், பொதுமக்களில் ஒரு பிரிவினரும் பயந்ததுபோலவே, ஜேர்மன் மாகாணமொன்றில் நடைபெற்ற தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஒன்று அமோக வெற்றி பெற்றுவிட்டது.
புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி அமோக வெற்றி
ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்தில் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி, தேர்தல் நடைபெற்றது.
அந்தத் தேர்தலில் வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன.
AfD கட்சியின் வெற்றிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் | Thousands Of People Protest After Afd Election Winதம் 6ஆம் திகதி, தேர்தல் நடைபெற்றது.
அந்தத் தேர்தலில் வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன.
AfD கட்சியின் வெற்றிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் | Thousands Of People Protest After Afd Election Win
வழக்கமாக இந்த விடயத்தில் கருத்துக்கணிப்புகள் பொய்யாகும் நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக, 44 சதவிகித வாக்குகளைப் பெற்று AfD கட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
நடந்தேவிட்டது... மாகாணத் தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி அமோக வெற்றி
நடந்தேவிட்டது... மாகாணத் தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி அமோக வெற்றி
ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், ஜேர்மனியில் பல்வேறு நகரங்களில் AfD கட்சியின் வெற்றிக்கு எதிராக பொதுமக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
AfD கட்சி, ரஷ்ய ஆதரவுக் கட்சியான BSW கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அப்படி, AfD கட்சி ஆட்சி அமைக்குமானால், Saxony-Anhalt மாகாணம், தீவிர வலதுசாரி, புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி ஆளும் முதல் ஜேர்மன் மாகாணமாகிவிடும்.
AfD கட்சியின் வெற்றிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் | Thousands Of People Protest After Afd Election Win
ஆக, ஒரு தீவிர வலதுசாரிக் கட்சி ஆட்சி அமைப்பதைப் பார்த்துக்கொண்டு மக்கள் அமைதியாக இருந்துவிடக்கூடாது என்கிறார்கள் ஆர்பாட்டங்களில் பேசுபவர்கள்.
AfD கட்சி, கடுமையான புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட கட்சி ஆகும்.
புலம்பெயர்ந்தோரை மட்டுமின்றி, புலம்பெயர்தல் பின்னணி கொண்ட ஜேர்மன் குடிமக்களையும் நாடுகடத்துவது போன்ற தீவிரக் கொள்கைகள் அக்கட்சிக்கு உண்டு.
அத்துடன், AfD கட்சியினரில் பலர் ரஷ்ய ஜனாதிபதியான புடினுக்கு நெருக்கமானவர்கள்.
AfD கட்சியின் வெற்றிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் | Thousands Of People Protest After Afd Election Win
ஆக, AfD கட்சி அரசு அமைக்குமானால், அரசு, உளவுத்துறை தொடர்பான தகவல்களைப் பெற முயற்சிக்கலாம்.
அப்படி முக்கிய தகவல்களை அணுக AfD கட்சி அரசுக்கு அனுமதி கிடைக்கும் நிலையில், அது நாட்டுக்கு பாதுகாப்பானதாக அமையுமா என ஏற்கனவே பாதுகாப்புத்துறை மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

ad

ad