-

19 அக்., 2026

www.pungudutivuswiss.com
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு: மரண தண்டனை கைதி சோமரத்ன ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி


செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கிரிசாந்தி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொள்ள யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது

வழக்கில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

அதேவேளை குற்றப்புலனாய்வு பிரிவினரால் இரு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அத்துடன் கிரிசாந்தி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதி கோரினர்.

அதற்கு அனுமதி வழங்கிய மன்று , எதிர்வரும் நவம்பர் மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள செம்மணி புதைகுழி வழக்கு தொடர்பான நிர்வாக குழு கூட்டத்தில் ஆராய்ந்து மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என மன்று அறிவித்துள்ளது

ad

ad