www.pungudutivuswiss.com
 மலேசியாவின் பிந்துலு(Bintulu) பகுதிக்கு வடக்காக ஒரு காற்றுச் சுழற்சி புதன்கிழமை (25.11.2026) உருவாகியுள்ளது. இது வெள்ளிக்கிழமை (27.11.2026) மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து அந்தமான் தீவுகளுக்கு தெற்காக நகரும். அதன்பின் மத்திய வங்காள விரிகுடாவிற்கு வரும்போது அது புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு மாலைதீவு இட்ட 'கானி( Kaani)' என்ற பெயர் வழங்கப்படும் |
இந்த புயல் எதிர்வரும் 05.12.2026 அன்று இரவு திருகோணமலையின் ஊடாக ( கொட்டியாரக்குடாவுக்கு வடக்காக) கரையைக் கடந்து அதன் பின் மேற்கு நோக்கி நகர்ந்து, வவுனியாவை ஊடறுத்து மன்னார் மற்றும் புத்தளத்தினூடாக அரபிக் கடலை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலின் முழுப் பாதிப்பு வலயத்திற்குள் இலங்கை முழுவதும் உள்ளடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இது இன்றைய நிலையில் இந்த நேரத்தில் மாதிரிகள் காட்டும் பாதை. இதில் மாற்றங்கள் நிகழலாம். இந்த பாதை அமையக்கூடாது என்பதே எனது விருப்பமும். சில மாதிரிகள் தமிழ்நாட்டில் கரையைக் கடக்கும் எனவும் காட்டுகின்றன. ஆனால் இந்த பதிவின் நோக்கம், இலங்கை போன்ற ஒரு வளரும் நாட்டிற்கும் மக்களுக்கும் ஒரு புயலின் கரை கடத்தலைத் தயார்ப்படுத்த கால அவகாசம் தேவை. நாம் தயாராக இருந்து, இலங்கையின் எந்த பகுதியின் ஊடாகவும் புயல் கரையைக் கடக்காது விட்டால் எமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இதற்கு நல்ல உதாரணம் அண்மையில் 'அக்வான்' புயல் ஆந்திராவில் கரையைக் கடக்கும் என தயார்ப்படுத்திய போதும் புயல் ஒடிசாவில் கரையைக் கடந்தது. இதனால் ஆந்திராவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இந்த புயல், அது கரை கடக்கும் இடம், மற்றும் அதனால் ஏற்படும், சாத்தியமான பாதிப்புக்கள் தொடர்பில் உரிய அரச திணைக்களங்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். சாத்தியமான பாதிப்புக்கள் தொடர்பில் மக்களை விழிப்பூட்ட வேண்டும். மக்களும், அரசும் தயாராக இருந்து புயல் வராவிட்டால் எந்தப் பாதிப்புக்களும் இல்லை. வந்தால்......... ஏனெனில் கடந்த ஆண்டு நிகழ்ந்த 'டித்வா' வின் பாதிப்புக்களிலிருந்தே நாம் இன்னும் முழுமையாக மீளவில்லை. அன்புக்குரிய இலங்கை வாழ் மக்களே... இது உங்கள் அனைவரினதும் பாதுகாப்பிற்கானது. இது தொடர்பான முக்கிய விபரங்கள் அவ்வப்போது வழங்கப்படும். நாகமுத்து பிரதீபராஜா |