படிக்கும் போதே நாடகம், சினிமா மீது விருப்பம் கொண்ட இயக்குநர் கே.பாலச்சந்தர்
தியாகராஜ பாகவதரின் படங்களால் ஈர்க்கப்பட்ட அவர். சினிமா மற்றும் நாடகங்களுக்கு அடிக்கடி சென்றார். இதனால் அவர் மனதில் சினிமா ஆசை வளர்ந்தது. பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., (விலங்கியல்) படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போதும் கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது போன்ற திறமைகளை வளர்த்துக் கொண்டார்.