-

31 ஆக., 2026

www.pungudutivuswiss.com
ஏக்கியராச்சிய வரைவை நிராகரிப்பதாக அறிவிப்பு!

 ஒற்றையாட்சிக்குட்பட்ட 13, ம் திருத்தம் மற்றும்  நல்லாட்சிகாலத்தில் (2015-2019) தயாரித்த “ஏக்கியராச்சிய” வரைவை நிராகரிப்பதாக இன்று(30/08/2026) சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் யாழ்ப்பாணம் செல்வநாயகம் மண்டபத்தில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

www.pungudutivuswiss.com
பாஜகவுடன் கை கோர்க்க போகும் ஸ்டாலின்?
[Sunday 2026-08-30 17:00]

திமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. குறிப்பாக அடுத்து மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரப்போகும் நிலையில், அதில் திமுகவும் பங்கெடுக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே திமுக- பாஜக இடையே கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கூறியிருக்கிறார். தமிழகத்திலும் சரி, தேசியளவிலும் சரி இப்போது அரசியல் களம் வேகமாக மாறி வருகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து அனைத்து கட்சிகளும் வெளியேறிவிட்டன.

நீதி கோரிய போராட்டம் பொறுப்புக்கூறலின் ஆழமான தோல்வியைப் பிரதிபலிக்கிறது!
[Sunday 2026-08-30 16:00]

வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு நீதி கோரிய போராட்டம் இலங்கையில் பொறுப்புக்கூறலின் ஆழமான தோல்வியைப் பிரதிபலிக்கிறது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிரிதி சிங் தெரிவித்தார்.

வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கு நீதி கோரிய போராட்டம் இலங்கையில் பொறுப்புக்கூறலின் ஆழமான தோல்வியைப் பிரதிபலிக்கிறது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் ஸ்மிரிதி சிங் தெரிவித்தார்

www.pungudutivuswiss.com
சற்றுமுன்னர் யாழில் ஆரம்பமான நீதிக்கான நீள் பயண சர்வதேச மாநாடு
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு,
www.pungudutivuswiss.com
இனிவருங்காலங்களில் உண்மையை அறியாமல் எவரும் உயிரிழக்கக் கூடாது!
[Sunday 2026-08-30 16:00]

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் முறையான நம்பகமான ஆதாரங்கள் உள்ள போதிலும், அவற்றை அரச அதிகாரிகள் மறுப்பதை நாம் வலுவாக எதிர்க்கிறோம் என வலிந்து காணாமலாக்கப்படலகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் உறுப்பினர் அனா லொரெனா டெல்கடில்லோ பேர்ஸ் தெரிவித்தார்.

30 ஆக., 2026

www.pungudutivuswiss.com
உக்ரைனில் வெடிமருந்துக்கிடங்கு மீது தாக்குதல்! 38 பேர் உயரிழப்பு!!

உக்ரைனின் தலைநகரான கீவ் அருகே ரஷ்யா நடத்திய தாக்குதலால் 
www.pungudutivuswiss.com
மணல்காட்டில் பற்றியெரியும் சவுக்கம் காடு- ஹெலி மூலம் தீயை அணைக்க முயற்சி!
[Saturday 2026-08-29 16:00]

யாழ்ப்பாணம், மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், தீ மேலும் பரவக்கூடிய அபாயமும் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணம், மருதங்கேணி, மணற்காட்டுப் பகுதியில் உள்ள சவுக்குக்காட்டில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்து தொடர்ந்து எரிந்து வருகின்ற நிலையில், பெருமளவிலான சவுக்கு மரங்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், தீ மேலும் பரவக்கூடிய அபாயமும் காணப்படுகின்றது

www.pungudutivuswiss.com
கோதுமை மா விலை 17 ரூபாவினால் அதிகரிப்பு!- பாண் விலையும் உயரும்?பரோட்டா, இடியப்பம், ரொட்டி விலைகள் அதிகரிப்பு!
[Saturday 2026-08-29 16:00]
www.pungudutivuswiss.com
காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என தமிழரசுக் கட்சி அறிவிப்பு!
[Saturday 2026-08-29 16:00]

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான நாளை (30) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளுக்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எந்தவொரு அமைப்பு அழைப்பு விடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

28 ஆக., 2026

www.pungudutivuswiss.com
நேபாளத்தின் உயிரிழப்பு 589 ஆக உயர்ந்துள்ளது!! 900க்கு மேற்பட்டோரைக் காணவில்லை
www.pungudutivuswiss.com
நேபாளத்தில் காணாமல் போன 644 வெளிநாட்டவரில் இலங்கையர் யாரும் இல்லை!
[Thursday 2026-08-27 18:00]

நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட வெளிநாட்டினரில் இலங்கை நாட்டவர் எவரும் இல்லை என நேபாள சுற்றுலா திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 ஆக., 2026

www.pungudutivuswiss.com
கெஹெல் பத்தரபத்மேவின் கைபேசியில் 13 சிறை அதிகாரிகளின் இலக்கங்கள்- மொடல் அழகிகள், அரசியல்வாதிகளின் படங்கள்.
[Wednesday 2026-08-26 09:00]

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால்  தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கோரலகமகே மனுதின பத்மசிரிபேரேரா எனும் கெஹெல் பத்தரபத்மேவின் கைத்தொலைப்பேசியிலிருந்து  13 சிறைச்சாலை உத்தியோகத்தகர்களின் தொலைபேசி இலக்கங்களும் மோடல் அழகிகள் உட்பட 7 அரசியல்வாதிகளின் புகைப்படங்களும் காணப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (25)  கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கோரலகமகே மனுதின பத்மசிரிபேரேரா எனும் கெஹெல் பத்தரபத்மேவின் கைத்தொலைப்பேசியிலிருந்து 13 சிறைச்சாலை உத்தியோகத்தகர்களின் தொலைபேசி இலக்கங்களும் மோடல் அழகிகள் உட்பட 7 அரசியல்வாதிகளின் புகைப்படங்களும் காணப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (25) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியிருந்தனர்

24 ஆக., 2026

www.pungudutivuswiss.com
உக்ரைன் மொத்தமாக துண்டாடப்படும்: கோரிக்கையை நிராகரித்த ஜெலென்ஸ்கி!
[Monday 2026-08-24 07:00]

உக்ரைன் துண்டாடப்படும் அபாயம், போர்க்காலத் தேர்தல்களை நிராகரித்த ஜெலென்ஸ்கி. ரஷ்யாவின் படையெடுப்பை உக்ரைன் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், தேர்தலை நடத்துவது மிகவும் ஆபத்தானது என்று எழுந்துள்ள கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதிலளித்துள்ளார். தேர்தலை முன்னெடுக்க வேண்டும் என்று அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் விடுத்த அழைப்பைத் தொடர்ந்தே ஜெலென்ஸ்கி பதிலளித்துள்ளார்.

உக்ரைன் துண்டாடப்படும் அபாயம், போர்க்காலத் தேர்தல்களை நிராகரித்த ஜெலென்ஸ்கி. ரஷ்யாவின் படையெடுப்பை உக்ரைன் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், தேர்தலை நடத்துவது மிகவும் ஆபத்தானது என்று எழுந்துள்ள கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பதிலளித்துள்ளார். தேர்தலை முன்னெடுக்க வேண்டும் என்று அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் விடுத்த அழைப்பைத் தொடர்ந்தே ஜெலென்ஸ்கி பதிலளித்துள்ளார்

www.pungudutivuswiss.com
ஹார்முஸ் நீரிணையில் சேவைக் கட்டணங்களை அறிவித்த ஈரான்!
[Monday 2026-08-24 07:00]

ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும் அங்கீகரிக்கப்பட்ட கப்பல்களுக்கான சேவைக் கட்டணங்களை ஈரான் அறிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் கப்பல்கள் இனி சேவைக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இந்த முடிவின் வரம்பை விவரித்த ஈரானின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் எப்ராஹிம் ரெசாய், இந்தக் கட்டணங்கள் கடல்சார், சுற்றுச்சூழல் மற்றும் தளவாடங்கள் சார்ந்த பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியிருக்கும் என்று தெரிவித்தார்.

பிரித்தானியாவில் சைபர் தாக்குதல்: மின் உற்பத்தி நிலையத்தை முடக்கிய ஈரான்!
[Sunday 2026-08-23 17:00]

பிரித்தானிய மின் உற்பத்தி நிலையத்தை ஈரான் ஹேக்கர்கள் முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள ஒரு சிறிய மின் நிலையம் மீது ஈரான் ஹேக்கர்கள் நடத்திய சைபர் தாக்குதல் காரணமாக அந்த நிலையம் நான்கு நாட்கள் செயலிழந்தது. டெலிகிராப் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இது பிரித்தானியாவில் இதுவரை நடந்த மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமான சைபர் தாக்குதலாக கருதப்படுகிறது.

22 ஆக., 2026

அவசரமாக டுபாயிக்கு பறந்த CCIB அதிகாரிகள் குழு! இலங்கைக்கு அழைத்து வரப்போகும் பெரும் ஆபத்தான நபர்..!

www.pungudutivuswiss.com
மத்திய குற்றப்புலனாய்வு பணியக (CCIB) அதிகாரிகள் குழுவொன்று திடீரென டுபாய் நோக்கி புறப்பட்டுச்சென்றுள்ளனர்.
www.pungudutivuswiss.com
கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் சிக்கி குழந்தை மரணம்!
[Saturday 2026-08-22 10:00]

கிளிநொச்சி, முரசுமோட்டைப் பிரதேசத்தில் 3 வயது குழந்தை ஒன்று நேற்று  இரவு உழவு இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. 
உயிரிழந்த குழந்தை அவரது சகோதரரும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் இழுவை பகுதியில் (Trailer) ஏறி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.  இதன்போது உறவினர் ஒருவர் அந்த உழவு இயந்திரத்தை இயக்கி, பிள்ளைகள் இழுவை பகுதிக்குள் இருக்கும்போதே முன்றலில் திருப்புவதற்கு முற்பட்டுள்ளார்.

கிளிநொச்சி, முரசுமோட்டைப் பிரதேசத்தில் 3 வயது குழந்தை ஒன்று நேற்று இரவு உழவு இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தை அவரது சகோதரரும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் இழுவை பகுதியில் (Trailer) ஏறி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது உறவினர் ஒருவர் அந்த உழவு இயந்திரத்தை இயக்கி, பிள்ளைகள் இழுவை பகுதிக்குள் இருக்கும்போதே முன்றலில் திருப்புவதற்கு முற்பட்டுள்ளார்.

www.pungudutivuswiss.com
செல்வச்சந்நிதியில் வெற்றிலை மென்ற 5 பேருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம்!
[Saturday 2026-08-22 10:00]

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

www.pungudutivuswiss.com
சோமரத்ன ராஜபக்ஷ காட்டும் இடங்களில் அகழ்வு செய்ய வேண்டும்!
[Saturday 2026-08-22 10:00]

செம்மணி மனிதபுதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் இதயச்சுத்தியுடன் வெளிப்படையாக செயற்பட வேண்டும். இருப்பினும் அரசாங்கம் மந்தகரமாகவே செயற்படுகிறது. செம்மணி மனித புதைகுழியின் மதிலை தாண்டிய பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது.நீதிமன்ற உத்தரவுடன் சோமரத்ன ராஜபக்ஷவை செம்மணிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு அவர் காண்பிக்கும் இடங்களில் அகழ்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் பல விடயங்கள் வெளிவரும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தினார்.

அதிக செறிவுள்ள செயற்கை ஒளியினாலேயே 400 பேருக்கு கண்பாதிப்பு!
[Saturday 2026-08-22 10:00]

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு  பிரான்பற்று முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய நிபுணர் மலரவன் தனது மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ad

ad