புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மே, 2016

கனேடிய உயர்மட்ட குழு விரைவில் இலங்கை விஜயம்

கனடாவின் உயர்மட்ட நாடாளுமன்ற குழுவின் தலைமையிலான 135 பேர் விரைவில் இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிகின்றது.

கனேடிய வெளிவிவகார மற்றும் மனிதநேய உதவிகளுக்கான அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவினரே இலங்கை விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் இவர்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு உள்ளிட்ட இடங்களை நேரில் சென்ற பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் கனடாவில் வியாபாரத்துறையிலுள்ள தமிழ் முதலீட்டாளர்களும் இணைந்து கொள்ளவுள்ளனர்.
தேர்தல் காலத்தின்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை சம்பந்தமாக லிபரல் கட்சி கொடுத்த வாக்குறுதிகளில் சிறிய அளவையாவது நிறைவேற்ற வேண்டும் என்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவரும் இந்த சூழ்நிலையில், இதற்கு செவி சாய்த்துள்ள கனேடிய அரசு, இலங்கை மக்களுக்கு நிவாரண பணிகளில் எவ்வாறு உதவ முடியும் மற்றும் போரின் போது அங்க அவயவங்களை இழந்தவர்களுக்கான உதவிகளை மேற்கொள்ளல் குறித்து தகவல்கள் சேகரிக்கவுள்ளது.

ad

ad