புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2021

நான் ரெடி ! நீங்க ரெடியா? முதல்வரின் சவாலை ஏற்ற மு.க. ஸ்டாலின்

www.pungudutivuswiss.com

ஊழல் பற்றி தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என நேற்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி திமுக தலைவர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சவாலை ஏற்ற ஸ்டாலின், இது தொடர்பாக அறிக்கை.ஒன்றினை வெளியிட்டார், மேலும் அந்த அறிக்கையில் பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியின் ஊழல்கள், 2021 மே மாதத்திற்கு பிறகு முழுமையாக தெரியும் என்று கூறியுள்ளார்.

சவாலை ஏற்பதற்கு முன்பு முதல்வரின் சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு விதித்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு வாங்குமாறு ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் அமைச்சர்கள் மீது கொடுத்துள்ள ஊழல் புகார்களை விசாரிக்க அனுமதி வழங்குமாறு, தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் ஒப்படைக்குமாறும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்ததாக தன் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாரின் விசாரணைக்கு உத்தரவிடுமாறு, ஆளுநருக்கு கடிதம் எழுதுமாறும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதையெல்லாம் செய்துவிட்டு விவாதத்திற்கு தேதி குறித்து இடம் சொல்லுங்கள், அந்த இடத்திற்கு வருகிறேன் என்று அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதற்கெல்லாம் நான் ரெடி நீங்க ரெடியா எனவும் ஸ்டாலின் கேட்டுள்ளா

ad

ad