புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜன., 2021

கூட்டமைப்பு தலைவர்களுடன் ஜெய்சங்கர் ஆலோசனை

www.pungudutivuswiss.com
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் அலுவலகத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் அலுவலகத்தில் இன்று  காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது புதிய அரசியலமைப்பு வரைபு மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக தமிழில் டுவிட்டர் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், “திரு.இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்களை சந்தித்தமையிட்டு மகிழ்வடைகின்றேன். அபிவிருத்தி மற்றும் அதிகாரப் பரவலாக்கம், மாகாண சபைகளின் வகிபாகம் ஆகியவை குறித்து கலந்துரையாடினோம்.” என்று குறிப்பிடடுள்ளார்.

அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஆகியோரையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் தலைவர்களையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேசியுள்ளார்.

ad

ad