கூடாரங்கள் அனைத்தையும் அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் போராட்டத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
போராட்டப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, காவி உடைகளைப் பயன்படுத்திக் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றையும் அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
ஜனாதிபதி செயலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துறவிகளிடம், பொலிஸார் நீதிமன்ற உத்தரவை வாசித்துக் காட்டி ஒப்படைத்துள்ளனர்.
மேலும் அறிக்கையில் பெயர் உள்ள 54 பேரையும் அங்கிருந்து செல்லுமாறு குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகம் முன் அதிரடியாக களமிறங்கிய பொலிஸ் பேருந்துகள்! பிக்குகளின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி | Restraining Order Issued 54 Indivi Sumangala Thero
அங்குள்ள சில கூடாரத்தை பொலிஸார் அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து நீதிமன்ற அறிக்கையை பிக்குகள் சுருட்டி வீசியுள்ளனர்.
மகாசங்கத்தின் போராட்டத்தின் காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பின் காலி வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலக வளாகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தங்கியிருப்பதைத் தடுக்கும் நோக்கில், உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த நபர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்தில் தங்கியிருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அன்றாட நடவடிக்கைகளுக்கும் இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிரடி உத்தரவு
பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி செயலகம் முன் அதிரடியாக களமிறங்கிய பொலிஸ் பேருந்துகள்! பிக்குகளின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி | Restraining Order Issued 54 Indivi Sumangala Thero
அதிஉயர் பாதுகாப்பு வலயமான ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.