-

16 அக்., 2026

www.pungudutivuswiss.com
ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி ஜனாதிபதி செயலகம் முன் இரவிரவாக போராட்டம்!
[Friday 2026-10-16 06:00]

ஜனாதிபதி அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து, கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே இரவிரவாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து, கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே இரவிரவாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான எதிர்கட்சி அரசியல் குழுக்கள் உள்ளிட்ட பலர் நள்ளிரவில் கலைந்து சென்றுள்ளனர். கண்டி தலதா மாளிகையில் இருந்து வந்த குழுவினரே தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக அமர்ந்து தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

தொடர்ந்தும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது கஸ்ஸப்ப தேரர் கூறுகையில், எங்கள் குழுவில் இதுவரை 03 பேரை கைது செய்துள்ளனர். சிறைச்சாலை இருப்பது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கவே. முடிந்தவரை கைது செய்யுங்கள் ஆனால் எங்கள் போராட்டத்தை முடக்க முடியாது.

இறப்பதற்கு பயமில்லை. புத்த சாசனத்தை அழிக்க கலிங்கன் வந்தான் , எல்லாளன் வந்தான் இறுதியாக பிரபாகரன் உள்ளிட்ட எத்தனையோ தரப்பு செயற்பட்டு வந்தது. ஆனால் அனைத்தையும் தோற்கடித்துள்ளோம்.

தற்போது அநுர குமார திசாநாயக்கவாலும் பௌத்த மதத்தை அழிக்க முடியாது. அதற்கு ஒருபோதும் இடமளியோம். ஞானசார தேரரின் விடுதலைக்கும் எமது காவி உடையை காக்கவும் எங்கள் பௌத்த மதத்தை காக்கவும் உயிரை கொடுத்தேனும் போராடுவேன்.

ஞான சார தேரரை சிறையில் கொலை செய்வார்களாயின் நாங்கள் உயிரோடு இருந்து பயனில்லை. அவ்வாறாயின் எங்களையும் கொலை செய்யுங்கள் என்றார்.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக வீதி முழுமையாகத் திறக்கப்பட்டுள்ள நிலையில், தேரர்கள் குழுவினர் பிரித் பாராயணம் ஓதி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களே பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ad

ad