-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

26 நவ., 2026

நெடுந்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள்! [Thursday 2026-11-26 17:00]

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன

இரண்டு எரிபொருள் பவுசர் வாகனங்களில் கொண்டு வரப்பட்ட எரிபொருள் தொகுதி, யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இருந்து கடல் மார்க்கமாகக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் மூலம் மிகவும் பாதுகாப்பாக அத்தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டதன் ஊடாக இது சாத்தியமாகியுள்ளது.

நெடுந்தீவை நிலையான சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் நிறுவப்பட்டதுடன், இதன் மூலம் நெடுந்தீவின் போக்குவரத்துச் சேவைகளைக் திறம்பட முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மேலும், புதிதாக நிறுவப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குத் தேவையான எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுசர் வாகனங்களைக் காங்கேசன்துறைத் துறைமுகத்திலிருந்து நெடுந்தீவுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் பணியை வடக்குக் கடற்படைக் கட்டளையைச் சேர்ந்த இலங்கைக் கடற்படைக் கப்பலான 'ரணகஜ' மேற்கொண்டது.

அதற்கமைய 13,200 லீற்றர் டீசல், 19,800 லீற்றர் மண்ணெண்ணெய், 6600 லீற்றர் பெற்றோல் என்ற அளவுகளில் கொண்டுவரப்பட்டு நிர்மானிக்கப்பட்ட கிடங்குகளில் நிரப்பப்பட்டுள்ளது.

இந்த நிரப்பு நிலையத்தின் ஊடாக நெடுந்தீவு மக்களுக்கான எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்தி எளிதாக்கும் முக்கியமானதொரு படியை இது எட்டியுள்ளது எனக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது

ad

ad