-

18 நவ., 2026

www.pungudutivuswiss.com
ஞானசார தேரருக்கு 4 வருட சிறைத்தண்டனை உறுதி!
[Wednesday 2026-11-18 18:00]

இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த குற்றச்சாட்டில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த குற்றச்சாட்டில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

  

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் தனக்கு கடந்த 2024ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து தன்னை விடுவித்து, விடுதலை செய்யுமாறு கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கிருலப்பனையில் கடந்த 2016 மார்ச் 30ஆம் திகதி, நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூரகல விகாரை தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராக, சட்டமா அதிபரால் தண்டனைச் சட்டக்கோவையின் 291ஆவது பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகவும், பல்வேறு இனங்கள் மற்றும் மதச் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்குப் பாதகமான கருத்துக்களை வெளியிட்டதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இவ்வழக்கு விசாரணையின் முடிவில், அவரைக் குற்றவாளியாகக் கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம், கடந்த 2024ஆம் ஆண்டு அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது. குறித்த தீர்ப்பு மற்றும் தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டையே மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்போது நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

ad

ad