ADVERTISEMENT
-
16 ஆக., 2026
14 ஆக., 2026
13 ஆக., 2026
12 ஆக., 2026
11 ஆக., 2026
www.pungudutivuswiss.com
| செம்மணிப் புதைகுழியில் நேற்றும் 9 எலும்புக்கூடுகள் அடையாளம்! [Tuesday 2026-08-11 08:00] |
![]() யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் திங்கட்கிழமை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டன. |
www.pungudutivuswiss.com
| செம்மணி புதைகுழி அருகே எழுமாற்றாக தோண்டிய குழியில் தலையற்ற எலும்புக்கூடு! [Tuesday 2026-08-11 08:00] |
![]() செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிக்களுக்குள் இருந்து தலையில்லா முண்டமான என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. |
10 ஆக., 2026
www.pungudutivuswiss.com
| கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொலை! [Monday 2026-08-10 17:00] |
![]() கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், பாதாள உலகக் கும்பலின் முக்கிய புள்ளியான 'கஞ்சிபானி இம்ரான் என்பவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. |
இனந்தெரியாத ஆயுததாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான பகைமையினால் இக்கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், மாளிகாவத்தை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். |
www.pungudutivuswiss.com
| சாகர காரியவசம் கைது! [Monday 2026-08-10 17:00] |
![]() ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் தொடர்பாக ஒரு வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (10) வந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார். |
9 ஆக., 2026
www.pungudutivuswiss.com
| தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில் இணைய கஜேந்திரகுமாருக்கு ஹக்கீம் அழைப்பு! [Sunday 2026-08-09 09:00] |
![]() தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில் இணைந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதற்கான உத்தியோகபூர்வ அழைப்பை அனுப்பி வைக்குமாறும், தமது மத்திய குழுவில் ஆராய்ந்து தீர்மானத்தை அறிவிப்பதாகவும் பதிலளித்துள்ளார். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




