-
25 நவ., 2026
தீபத்தூண் மோதலில் திணறும் தவெக அரசு!
[Wednesday 2026-11-25 15:00] |
![]() மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தின் பரபரப்பு இன்னும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.. இந்த பரபரப்பு இந்த ஆண்டுடன் முடிந்துவிடுமா? அடுத்த கார்த்திகை தீபத்தின்போதும் இதே பிரச்சினை வருமா? இந்த வருடம் மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான நிலை என்ன என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இங்கே சுருக்கமாக ஆராய்வோம்..!! ஒருபக்கம் நீதிமன்றத்தில் தொடரும் வழக்கு, இன்னொரு பக்கம் கோயில் நிர்வாகத்தின் நிலைப்பாடு. இதற்கிடையே சட்டப்பேரவையில் மெஜாரிட்டி தொடர்பான ஆதரவு கணக்குகளையும் கவனிக்க வேண்டிய நிலையில் விஜய் தலைமையிலான தவெக அரசு இருக்கிறது. |
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: தமிழக அரசு எதிர்கொள்ள இருக்கும் பெரிய நெருக்கடி! [Wednesday 2026-11-25 07:00
[Wednesday 2026-11-25 07:00] |
![]() திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்புகள் கோரிய தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இப்படி இருக்கையில் தமிழக அரசு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள இருக்கிறது என வலதுசாரி அமைப்புகள் எச்சரித்துள்ளன. 150 ஆண்டுகளுக்கும் மேல் வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் தூணில்தான் நேற்றும் தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால், இந்து அமைப்புகள் கோரிய தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவாகும். |
சுரேஷ் சலேயும், அசாத் மௌலானாவும் ஒரே ஹோட்டலில் தங்கிய ஆதாரம் சிக்கியது!
[Wednesday 2026-11-25 17:00] |
![]() உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் முக்கிய சந்தேகநபரான சுரேஷ் சலேயும், பிள்ளையானின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானாவும்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது |
வன்னியில் வனவளத் திணைக்களத்தினால் மக்களின் காணிகள் அபகரிப்பு!
[Wednesday 2026-11-25 17:00] |
![]() வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களால் வன்னியில் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார் |
பயணத்தடையை நீக்க கோரிய கோட்டாவின் மனு நிராகரிப்பு!
[Wednesday 2026-11-25 17:00] |
![]() உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையைக் கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று நிராகரித்துள்ளார் |
ரஷ்ய ஆண்களின் ஒரு தலைமுறையையே அழிக்கும் உக்ரைன் போர்! [Tuesday 2026-11-24 16:00]
![]() போர் நீடிக்க நீடிக்க, உயிரிழப்புகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொடுத்துள்ள போர், ரஷ்ய ஆண்களின் ஒரு தலைமுறையையே அழித்துக்கொண்டிருப்பதாகவே கூறப்படுகிறது. உக்ரைன் போர், ரஷ்யாவின் மக்கள் தொகை சரிவைத் தடுப்பதற்காக புடின் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கே ஊறு விளைவிப்பதாக அமைந்துள்ளது. வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், பிப்ரவரி 2022 மற்றும் செப்டம்பர் 2026 இல் ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்திற்கு இடையிலான போரின் காரணமாக குறைந்தது 490,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் |
சுவிட்சர்லாந்துக்கு வடகொரியா விடுத்துள்ள மிரட்டல்! [Tuesday 2026-11-24 16:00]
![]() வடகொரியாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட சுவிஸ் தூதரக அலுவலகத்தை மூடிவிடுவோம் என வடகொரிய தரப்பு மிரட்டியுள்ளது. வடகொரியாவில் சமீபத்தில்தான் சுவிஸ் தூதரக அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டது. இந்நிலையில், அதை மூடிவிடுவோம் என வடகொரிய ஜனாதிபதியின் சகோதரி மிரட்டல் விடுத்துள்ளார். இம்மாதம், அதாவது, நவம்பர் மாதம் 4ஆம் திகதி, வடகொரியாவிலுள்ள Wonsan நகரில் முகாம் ஒன்று நடத்தப்பட்டது. |
தையிட்டி சட்டவிரோத விகாரை காணிகளை மீளக் கையளிக்க கோரி போராட்டம்! [Tuesday 2026-11-24 20:00]
![]() தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (24) இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்க பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது! [Wednesday 2026-11-25 08:00]
![]() பேரினவாத அரசு எம்மை அடிமைகளாகவே வைத்திருக்கிறது என்றும் பயங்கரவாத தடைச் சட்டம் என கொண்டு வந்து எங்கள் மாவீரர்களின் அஞ்சலிகளை செலுத்த விடாமல் தடுத்து கொண்டே வருகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார் |
24 நவ., 2026
மாவீரர் வார நினைவேந்தல்: மானிப்பாய் கோட்டத்தில் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோருக்கு மதிப்பளிப்பு
மாவீரர்களுக்கு சபையில் அஞ்சலி! [Tuesday 2026-11-24 07:00]
![]() மாவீரர் வாரத்தில் எமது இனத்துக்காக குரல் கொடுத்து உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கமாவது தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார் |
பலாலி வந்த விமானம் தரையிறங்க முடியாமல் சென்னை திரும்பியது! [Monday 2026-11-23 18:00]
![]() சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விமானம், யாழ்ப்பாணத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது. |
23 நவ., 2026
கோப்பாயில் மாவீரர் நினைவாலயம்! [Monday 2026-11-23 06:00]
![]() கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது |
ன்னாரில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு- ஆயரும் பங்கேற்பு! Top News [Sunday 2026-11-22 18:00]
![]() மன்னார் மாவட்ட மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஒழுங்கமைப்பில் மாந்தை மேற்கு, மன்னார் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 55 கிராமங்களில் இருந்து 500 க்கு மேற்பட்ட பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (21) மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது. |
நல்லூரில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் திறந்து வைப்பு! Top News [Sunday 2026-11-22 07:00]
![]() யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உள்ள பகுதிகளில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. |
கொளத்தூர் இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக? [Sunday 2026-11-22 18:00]
![]() கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஎஸ் பாபு உயிரிழந்து இரண்டு நாட்களே ஆகியுள்ளதாக கூறிய அவர், தேர்தலை அதிமுக சந்திக்குமா என்பது குறித்தும் விளக்கமளித்தார். தமிழகத்தில் கொளத்தூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த விஎஸ் பாபு மறைவு தவெகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
22 நவ., 2026
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்குள் மோதல்- 5 பேர் காயம், 21 பேருக்கு விளக்கமறியல்! [Saturday 2026-11-21 16:00]
![]() சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், வெட்டுக் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். |















.jpg)
.jpg)

