-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

30 நவ., 2026

அரச சேவையின் அனைத்து ஊழியர்களும் நாளைய தினம் சுகயீன விடுமுறைப் போராட்டம்! [Sunday 2026-11-29 20:00]

www.pungudutivuswiss.com


அரச மற்றும் மாகாண அரச சேவையின் அனைத்து ஊழியர்களும் நாளைய தினம் சுகயீன விடுமுறைப் போராட்ட தொழிற்சங்க நடவடிக்கையில் இணையவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அரச மற்றும் மாகாண அரச சேவையின் அனைத்து ஊழியர்களும் நாளைய தினம் சுகயீன விடுமுறைப் போராட்ட தொழிற்சங்க நடவடிக்கையில் இணையவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது

இத்தொழிற்சங்க நடவடிக்கையை முறியடிப்பதற்காக அரசாங்கம் பல்வேறு தந்திரோபாயங்களைக் கையாண்டு வருவதாக அதன் பிரதிநிதி தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே தம்மிக்க முனசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இப்போது மாத்தளை மாவட்டத்தில், மாத்தளை பிரதேச சபையின் தவிசாளர் அனைத்து ஊழியர்களும் நாளை பணிக்குச் சமூகமளிக்க வேண்டும் என அறிவித்தலொன்றை ஒட்டியுள்ளார்.

இவற்றை நாம் மொட்டு அரசாங்கம் இருந்தபோது பார்த்தோம். இவற்றை நாம் வாரிசு ஜனாதிபதியாக ரணில் இருந்தபோதும் பார்த்தோம்.

இப்போது தொழிற்சங்கத் தலைவர்கள் எனக் கூறிக்கொள்ளும் அரசாங்கத்திற்கு உள்ளேயும் இவ்வாறுதான் நடந்துகொள்கிறார்கள். நாளை அமைச்சுக்களில் விசேட குழுக் கூட்டங்கள் போடப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.

ஆகவே மன்னிக்கவும், என்னதான் இருந்தாலும் நாளைய தினம் எந்தவொரு அரச ஊழியரும் பணிக்குச் சமூகமளிக்க மாட்டார்கள். சுகயீன விடுமுறைப் போராட்ட தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

எனவே, எவ்வித தயக்கத்தையும் வைத்துக்கொள்ள வேண்டாம். தகுதிகாண் காலத்தில் (Probation) உள்ள, நிரந்தரமாக்கப்படாத இந்த அனைத்து ஒட்டுமொத்த அரச ஊழியர்கள் மற்றும் மாகாண அரச ஊழியர்களுக்காகவும் இந்த அனைத்து சங்கங்களும், தொழிற்சங்கங்களும் நிச்சயமாக முன்னிற்போம்.

நாளைய தினத்திற்குள் இதற்குத் திட்டவட்டமான பதிலொன்றை வழங்காவிட்டால், டிசம்பர் 14ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தை மாபெரும் போராட்டத்திற்கு மத்தியிலேயே நிறைவு செய்ய நேரிடும் என்பதை நாம் அரசாங்கத்திற்கு வலியுறுத்திக் கூறுகிறோம் என தெரிவித்துள்ளார்.

ad

ad