-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

30 நவ., 2026

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த ஐ.நா. உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்! [Sunday 2026-11-29 20:00]

www.pungudutivuswiss.com


நாட்டில் உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாத நிலை தொடர்வதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது.

நாட்டில் உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாத நிலை தொடர்வதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, நாட்டில் பல தசாப்தங்களாக நீடிக்கும் தண்டனையிலிருந்து விலக்களிக்கும் போக்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பணிப்பாளர் ஸ்மிருதி சிங், நாட்டில் சர்வதேச சட்டங்களின் கீழான குற்றங்களுக்கு தீர்வு காண்பதில் முன்னேற்றம் இல்லாததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகள் இன்னும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

2009ஆம் ஆண்டு முடிவடைந்த உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் விருப்பமின்றிச் செயற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சிறுவர்கள் உட்பட 583க்கும் மேற்பட்டோரின் எலும்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்ட செம்மணி போன்ற இடங்களில் மனிதப் புதைகுழிகள் தொடர்ந்து அடையாளம் காணப்படுகின்றமை, குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை நீடிப்பது குறித்த கவலையை அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொறுப்புக்கூறல் இல்லாமையும், தொடர்ச்சியான தண்டனை விலக்கும் ஏனைய நாடுகளில் சர்வதேச சட்டங்களை மீறுவோருக்கு ஊக்கமளிக்கக்கூடும் எனவும், இதனைத் தடுப்பதற்கு தொடர்ச்சியான சர்வதேச கண்காணிப்பு அவசியம் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கைக்கான பொறுப்புக்கூறல் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதுடன், சர்வதேச நியாயாதிக்கக் கோட்பாடுகள் உள்ளிட்ட வழிமுறைகள் மூலம் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த ஐ.நா. உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ad

ad