-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

30 நவ., 2026

புலனாய்வுத் தகவல்கள் எனக்கு அறிவிக்கப்படவில்லை! [Sunday 2026-11-29 20:00]

www.pungudutivuswiss.com


2019 உயிர்த்த ஞாயிறு தினத் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னர் தொடர்ச்சியாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அவை தனக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு தினத் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னர் தொடர்ச்சியாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அவை தனக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், 2019 ஏப்ரல் 4ஆம் திகதி முதல் தாக்குதல் இடம்பெற்ற ஏப்ரல் 21ஆம் திகதி வரை புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததாகவும், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் அவற்றைத் தனக்கு அறிவிக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தாக்குதல்களைத் தடுப்பதற்கு ஜனாதிபதி அல்லது பிரதமரின் அனுமதி அவசியமில்லை எனவும், கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்புத் தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தனக்கு வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் பின்னர் ஸஹ்ரானின் வீட்டில் பொலிஸாரின் கைத்துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டமை முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களுக்குப் பின்னர் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுகள் மேற்கொண்ட விசாரணை அறிக்கைகள் எங்கே உள்ளன எனவும் கேள்வி எழுப்பிய அவர், ஸஹ்ரானின் தொலைபேசி மதர்போர்டு தனது அனுமதியின்றி அமெரிக்க புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும், தாக்குதல் குழுவினருக்குப் பின்னால் வெளிநாட்டுத் தொடர்புகள் இருந்ததாகத் தான் நம்புவதாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்

ad

ad