www.pungudutivuswiss.com
.jpg) மூதூர் கிழக்கு, சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன |
திருகோணமலை மாவட்டம், மூதூர் கிழக்கு சம்பூர் – ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களை நினைவுகூர்ந்து ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று மாலை 6.05 மணியளவில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாவீரர் குடும்பத்தினர், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இதன்போது, மாவீரர்களின் நினைவாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அவர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர்களின் நினைவுகளைப் போற்றும் வகையிலும், அவர்களின் தியாகங்களை நினைவில் கொள்ளும் வகையிலும் சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இந்நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. |
 |
|