தி.மு.கழக கூட்டணியில் தே.மு.தி.க இடம் பெற வாய்ப்பு ஏற்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
-
26 டிச., 2013
பூநகரி வலைப்பாட்டில் இராணுவம் வெறியாட்டம்! இந்தியப்பிரஜை கைது, சிறீதரன் எம்பி உள்ளிட்ட மூவர் 6 மணித்தியாலங்களாக தடுக்கப்பட்டு விடுவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உள்ளிட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் முழங்காவில் பிரதேசத்தில் இருக்கின்ற பொன்னாவெளி,வேரவில்,வலைப்பாடு ஆகிய கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்கென
சிறீதரன் எம்.பி கைது செய்யப்பட்டு 6 மணித்தியால விசாரணையின் பின் விடுதலை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை ஆகியோர் கிளிநொச்சி- கிராஞ்சி கிராமத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டு மாலை 5 மணியளவில் விடுதலை செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
25 டிச., 2013
கபொத உயர்த்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள் - ஜனாதிபதி சந்திப்பு
கல்வி பொதுத் தராதர உயர்த்தரப் பரீட்சையில் அதிக் கூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அண்மையில் அலரி மாளிகையில் சந்தித்தனர்.மாணவர்களை அன்புடன் வரவேற்ற ஜனாதிபதி எதிர்கால கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க ஆசி வழங்கினார்.
எதிர்க்கட்சியில் அமரவும் தயங்கமாட்டோம்! – அரசாங்கத்தை எச்சரிக்கிறது ஹெல உறுமய
மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற முடியும் என்றால் எதிர்க்கட்சியில் அமரத் தயார் என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை
வடமாகாண செயலருக்கு கொலை அச்சுறுத்தல்; வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு
வடமாகாண பிரதான செயலாளர் ரமேஷ் விஜயலட்சுமிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரிசிறி தெரிவித்துள்ளார்.
நாமே கிழக்கை கைப்பற்றினோம் என்கிறார் ரணில் விக்கிரமசிங்க
ராஜபக்ச அரசாங்கம் விடுதலைப் புலிகளைத் தனியே வன்னியில் இருந்து மட்டுமே அழித்ததே தவிர, அவர்களை கிழக்கில் இருந்து விரட்டி, கடற்புலிகளின் முதுகெலும்பை முறித்தது தாமே என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுவிஸில் ரகசிய கமெராவில் பெண்களை படமெடுத்த பொலிஸ் ஊழியரின் அயோக்கிய செயல் அம்பலமாகியுள்ளது.
சுவிஸில் பேர்ண் எம்மேந்தால் பிராந்திய பகுதியில் அமைந்திருக்கும் வாசன்(3457 Wasen ) நகரில் இருக்கும் உடற்பயிற்சி மையம் ஒன்றில் உடைமாற்றும் அறையிலும், குளியலறையிலும் ரகசிய கமெராக்கள் பொருத்தப்பட்டு படமாக்கப்பட்டது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது என பல ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்பதுடன் இதனூடாக நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதனால் அக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கு பற்றாது என்று கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.இந்த விசேட கூட்டத்தின் போது, வடக்கு கிழக்கில் இடம்பெறும் பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.காணி அபகரிப்பு, இராணுவம், பெண்கள் விவகாரம் குறித்து பல விடயங்கள் பரிமாறப்பட்டன.
இதேவேளை ஜனாதிபதியினால் அண்மையில் விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. தற்போது அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என தெரிவிக்கப்பட்டதன் அடிப்டையில் இதன் மூலம் நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதே அனைவரது கருத்தாகவும் இருந்தது.
அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடமில்லை: ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மந்திரிசபையில் காங்கிரசை சேர்க்க மாட்டோம், முந்தைய காங்கிரஸ் அரசின் ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய வீடியோ படம் வெளியிடப்பட்டது.
நடிகர் மோகன்பாபுவின் பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் :மத்திய அரசுக்கு ஐதராபாத் ஐகோர்ட் உத்தரவு
நடிகர் மோகன்பாபு திருப்பதியில் உள்ள ரங்கம்பேட்டை பகுதியில் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது சிறந்த கல்வி சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2007–ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.கவுரவித்த விருதை நல்வழியில் பயன்படுத்தாமல் அரசியல் ஆக்குவதால் அந்த விருதை திரும்ப
காங்கிரஸ் தனித்துவிடப்பட்டுள்ளது: ப.சிதம்பரம் வருத்தம்
தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனித்துவிடப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் ப.சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போதுபேசிய அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடமில்லை: ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மந்திரிசபையில் காங்கிரசை சேர்க்க மாட்டோம், முந்தைய காங்கிரஸ் அரசின் ஊழல் மந்திரிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய வீடியோ படம் வெளியிடப்பட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இடம்பெறுவது யார்? முதல் பட்டியல் வெளியானதாக தகவல்!
டெல்லியில் ஆட்சி அமைக்கும் ஆம்ஆத்மி கட்சியில் யார், யார் அமைச்சரவையில் இடம்பெறுவர் என்பது குறித்த முதல் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதல் அமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால். அமைச்சரவையில் மணீஷ்சிசோடியா, சோம்நாத்பாரதி,
24 டிச., 2013
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
வடக்கு மாகாணசபை புதிய திணைக்களங்களை உருவாக்க ஆளுனர் சந்திரசிறி பச்சைக்கொடி? |
வடக்கு மாகாணசபை இரண்டு புதிய திணைக்களங்களை உருவாக்குவதற்கு முன்வைத்துள்ள யோசனைகளுக்குத் தேவையான, ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்குமாறு, சிறிலங்காவின் நிதியமைச்சிடம் வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, கோரியுள்ளார். |
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 26வது நினைவு தினம் இன்று. சென்னை மெரினா கடற் கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் ஜெயலலிதா.
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நடந்தது. முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக கழக நிர்வாகிகளும், பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட னர்.
இன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 25 ஆம் ஆண்டு நினைவுதினம்!
தனது அண்ணன் சக்ரபாணி வீட்டில், நடிப்புலக வாழ்க்கையை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் முதலில் மேடை நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். 1947 இல் வெளிவந்த ராஜகுமாரி படம் அவருக்கு நல்ல நடிகர் அந்தஸ்துக்கு உயர்த்தியது. பின்னர் 1950 களில் திரையுலகம் எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக்கி கொண்டாடியது. 1954 இல் வெளிவந்த மலைக்கள்ளன்
எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்[
- சதிலீலாவதி -1936
- இருசகோதரர்கள் -1936
- தட்சயக்ஞம் -1938
- வீர ஜெகதீஸ் -1938
- மாயாமச்சேந்திரா -1939
எம்.ஜி.ஆர்
என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.
நாட்டை ஆண்ட கட்சிகளையே நெட்டித் தள்ளி, நாட்டின் தலைநகரில் 27 லட்சம் வாக்குகளைத் தனியாகக் கூட்டிப்பெருக்கி இருக்கிறது, ஆம் ஆத்மி கட்சி.
ஆமாம்...! "ஆம் ஆத்மி' (சாமானிய மக்கள்) எனும் பெயரின் எளிமையும் ’துடைப்பம்’ சின்னத்தின் வலிமையும் உடன்வர, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலின் தன்னாட்சி என்கிற பிரச்சாரம், இந்த வெற்றியைச் சாதித்துள்ளது
தளபதி பதுமனை வைத்து அரசு ராஜதந்திர காய் நகர்த்தல் -இன்னும் புலிகள் இருக்கிறார்கள் அதனால் இராணுவம் தேவை என காட்ட அரசுக்கெதிராக தாக்குதல்கள் நாடகம் நடக்கலாம்
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் கொழும்பு வந்திருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் பதுமன் ஒரு வார காலமாக காணாமல் போயுள்ளதாக கொழும்பின் செய்தி நிறுவன முகவர் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
23 டிச., 2013
தேவயானிக்கு ஐ.நா. தூதருக்கான அடையாள அட்டை! கூடுதல் பாதுகாப்பு கிடைக்க வாய்ப்பு!
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில், துணை தூதராக
நில மோசடி புகார்! சோனியா காந்தி மருமகன் மீது விசாரணை கமிஷன் அமைக்க பா.ஜ.க. எம்.பி.க்கள் கடிதம்!
ராபர்ட் வதேரா இதற்காக பணம் எதையும் செலவு செய்யவில்லை. ரியல் எஸ்டேட் நிறுவனங்களே முன்பணம் கொடுத்துள்ளன என்றும், குறிப்பாக ராஜஸ்தானிலும், அரியானாவிலும், டெல்லியிலும் இத்தகைய பரிவர்த்தனைகள்
ஆளுநர் சந்திரசிறிக்கு எதிராக இணைகிறது வடக்கு, கிழக்கு! - அடுத்த கட்ட நகர்வுக்காக 24ஆம் திகதி வவுனியாவில் கூடுகின்றது கூட்டமைப்பு
-சுடரொளி
வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் தன்னிச்சையான - மாகாணசபை சட்டங்களை மீறிய செயற்பாடுகளால் அங்கு எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் அடுத்த கட்ட நகர்வுக்கான முடிவை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு,
-சுடரொளி
வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் தன்னிச்சையான - மாகாணசபை சட்டங்களை மீறிய செயற்பாடுகளால் அங்கு எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் அடுத்த கட்ட நகர்வுக்கான முடிவை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு,
மன்னாரில் மனிதப் புதைகுழி - சிறிலங்கா அரச இனப்படுகொலையின் சாட்சியம்? |
சிறிலங்காப் படைகள் தமிழ்ப் புலிகளைத் தோற்கடித்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது முதன்முதலாக சிறிலங்காவின் முன்னாள் போர் வலயத்தில் மிகப் பெரிய மனிதப் புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவற்துறை ஞாயிறன்று அறிவித்துள்ளது. |
டுபாய் விமான நிலையத்தில் திருடிய சிறிலங்கா அதிபரின் ஒளிப்படப்பிடிப்பாளர் – வகையாக மாட்டினார் |
சிறிலங்கா அதிபருடன் சென்றிருந்த அவரது அதிகாரபூர்வ படப்பிடிப்பாளர், டுபாய் அனைத்துலக விமான நிலையத்தில், மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான ஒளிப்பதிவுக் கருவியைத் திருடிக் கொண்டு சென்ற போது, பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். |
காணாமற்போனோரை தேடும் குழுவின் தலைவருக்குப் பொலிஸ் அச்சுறுத்தல்; பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு
திருகோணமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் தலைவர் சுந்தரம் மகேந்திரன், பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
தேவயானி விவகாரம்! கூடுதல் பாதுகாப்பு கோரி ஐ.நா.,விற்கு இந்தியா கடிதம்! அமெரிக்காவே முடிவு செய்யும்?
இதனைதொடர்ந்து, தேவயானியை, ஐ.நா.,விற்கான தூதரக அதிகாரியாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், தேவயானியை, ஐ.நா.,வுக்கான தூதரக அதிகாரியாக நியமித்து அதற்குரிய அந்தஸ்தை வழங்குமாறு, ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு, ஐ.நா.,வுக்கான இந்திய தூதர்
இந்நிலையில், தேவயானியை, ஐ.நா.,வுக்கான தூதரக அதிகாரியாக நியமித்து அதற்குரிய அந்தஸ்தை வழங்குமாறு, ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு, ஐ.நா.,வுக்கான இந்திய தூதர்
திமுகவுடன் கூட்டணி சேர முடியாது என்றால் அதிமுகவுடன் பேசுவதற்கே தகுதி இல்லை: ஆ.ராசா
கூட்டத்தில் மாவட்ட செயலரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், நகர அவைத்தலைவர் நாராயணன், துணைச் செயலர் பூங்காவனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
22 டிச., 2013
பெருந்தெரு 401-கிழக்கு கலெக்ரர் பாதைகள் டவ்ரின் வீதியிலிருந்து அலன் வீதிவரைக்கும் பூரணமாக வார இறுதிநாட்களில் கால நிலை இடம் கொடுக்குமாயின் மூடப்பட்டு இருக்குமென அறிவிக்கப்பட்டது.ன் வீதி யோர்க்டேல் வழியாக வெளியேற வேண்டும்.
பியர்சன் விமான நிலைய வழி ஞாயிறு இரவும் திங்கள்கிழமை அதிகாலையும் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. வருடத்தின்
மஹிந்தவை போர்க் குற்றவாளியாக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் - பழ.நெடுமாறன்
ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேசப் போர்க் குற்றவாளியாக அறிவித்து தீர்மானம் கொண்டுவர வேண்டும் என
தென் சூடான் செல்பவர்களுக்கு எச்சரிக்கை
தொழில் வாய்ப்புகளுக்காக தென் சூடானுக்கு செல்வது தொடர்பில் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கேட்டுள்ளது.
கிளி.மாவட்டத்தில் ஒரு வயதிலேயே அன்னையை இழந்த பிரதா தெய்வேந்திரம்பிள்ளை சாதனை

கிளிநொச்சி மாவட்டத்தில் க. பொ. த உயர்தரப் பரீட்சையில் பிரதா தெய்வேந்திரம்பிள்ளை என்ற மாணவி மாவட்ட ரீதியாக முதலிடத்தை பிடித்துள்ளார்.
2013ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தி
2013ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தி
ஜெ. ஓட்டும் ரயில் டெல்லிக்கு போகவில்லை: தென்காசிக்கு போகிறது: பிளாட் பாரத்தில் 2 பேர்: டி.ஆர்.பாலு பேச்சு
டி.ஆர்.பாலு பேசுகையில், பால் குடித்து விஷம் கக்கும் நல்லபாம்புகள் இல்லை. பசும் புல்
கனடாவின் கிழக்கு பகுதிகளில் இந்த வார இறுதி நாட்களில் அதிகளவு பனிப்பொழிவு இருக்கும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
நேற்று முதன் பனிக்காலம் ஆரம்பித்து விட்டதால், பனிப்பொழிவு வழமையை விட அதிகளவு உள்ளது.இந்நிலையில் கனடாவின் கிழக்கு பகுதிகளில் வார இறுதி நாட்களில் இல்லாத அளவு அதிகளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புலிகளின் பொலிஸாரை விட சிறந்தவர்கள் என நிரூபிக்க வேண்டும்! தமிழ்ப் பொலிஸாரிடம் இலங்கக்கோன் வேண்டுகோள்
இதுவரை வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் அறிந்து வைத்திருந்த புலி பொலிஸாரை விடவும் எமது இலங்கை பொலிஸார் வித்தியாசமானவர்கள், நல்லவர்கள் என நிரூபிக்க வேண்டுமென பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தரப்பொன்று வழங்கிய இரகசியமான கடிதம் ஒன்று அவர்களுக்கு கிடைத்துள்ளது.
அரசாங்கம் முஸ்லிம் மக்களை கவனிப்பதில்லை எனவும் அரசாங்கத்தினால் முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகளும், இடையூறுகளும் ஏற்படுத்தப்படுவதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
21 டிச., 2013
நெடுந்தீவில் ஈ.பி.டி.பி.யின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் திடீர் சோதனை! சட்டவிரோத ஆயுதங்கள் மீட்ப
நெடுந்தீவில் இருந்த ஈ.பி.டி.பி. கட்சி அலுவலகங்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களது வீடுகளில் சட்டவிரோத ஆயுதங்கள் உள்ளனவா என அறியும் நோக்குடன், விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருவதாக யாழ்.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிமால் பெரேரா தெரிவித்தார்.
20 டிச., 2013
யாழ் இந்துக் கல்லூரியை சேர்ந்த 18 மாணவர்களுக்கு கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகள்
இந்த வருடம் நடைபெற்ற கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் 18 பேர் 3A சித்திகளைப் பெற்றுள்ளனர். இதில் 13 மாணவர்கள் கணிதத் துறையிலும், 2 மாணவர்கள் உயிரியல் துறையிலும், 3 மாணவர்கள் வர்த்தகத்துறையிலும் 3A
நிதியுதவிகள் தமிழ் சமூகத்திற்கு செல்லும் என எண்ணியே புலம்பெயர் தமிழர்கள் புலிகளுக்கு நிதி வழங்கினர்!- அமெரிக்காவிடம் கோத்தபாய தெரிவிப்பு
அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் தமிழர்களிடம் விடுதலைப் புலிகள் நிதி சேகரிப்பதை அனுமதித்தால் விடுதலைப்புலிகளின் வன்முறைக்கு ஆதரவான நிலை தொடரும் என முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்த முயன்ற சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டார்
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வழங்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவில் சிறைவாசம் இருந்து வந்த சிங்கப்பூர் தமிழர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.51 வயதான பாலாஜி நாயுடு என்பவரே அமெரிக்க டலாஸ் சிறையில் இருந்து சிங்கப்பூரூக்கு நாடு கடத்தப்பட்டார்.
நடிகர் விஜய் தன்னை வைத்து படம் தயாரித்த5 தயாரிப்பாளர்களுக்கு தலா 5 லட்சம் வழங்கினார்
நடிகர் விஜய் திரைத்துறைக்கு வந்து 22-வருடங்கள் ஆகிவிட்டது. இவர் தற்போது தனது 56-வது படமாக ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பொங்கல் வெளியீடாக வருகிறது. இந்நிலையில், விஜய் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகும்போது
பாராளுமன்ற உறுப்பினர் பியசேன உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்கிறார் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன்
அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக அளித்த வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினரான பியசேன இன்று கூட்டமைப்பு பற்றி பேசுவது வேடிக்கையாகவுள்ளது. முடிந்தால் கூட்டமைப்பிலிருந்து இராஜினாமா செய்துவிட்டு
இந்தோனேசியா சிறையில் வாடும் ஈழ உறவுகள்., அர்த்தமற்ற அமைப்புக்களும்… அனாதையான அகதிகளும்..!
இந்த ஆண்டு ஆரம்ப மாதங்களில் 28.03 2013 அன்று அறுபத்தி ஆறு பேருடன் தமிழகத்தில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஈழ உறவுகள், கடல் சீற்றம் காரணமாக இந்தோனேசியாவில் உள்ள ஈராமி தீவுக்குச் சென்று தஞ்சமடைந்தார்கள்.அங்கு “பென்குழு” என்ற இடத்தில் ஒரு மாத காலம் தங்கியிருந்த ஈழ உறவுகள் அனைவரும் தரம் பிரிக்கப்பட்டு இருபத்தியொரு பேர் ஜகார்த்தாவில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டார்கள். மீதமுள்ள நாற்பத்தைந்து பேரின் நிலமை இன்றுவரை என்னவென்று தெரியவில்லை!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)