-

22 ஜன., 2026

அநுரவின் காட்சி அரசியலும் இலங்கையின் மாயாஜாலமும்! பனங்காட்டான்

www.pungudutivuswiss.com

தேர்தல் காலங்களில் தமிழர் தாயகத்தில் ரஜினிகாந்தாக மேடைகளில் தோன்றிய அநுர குமர இப்போது காட்சி அரசியல் செய்து செல்பிகளின் நாயகராகியுள்ளார். தமது பதவிக்காலம் முடிந்து அமெரிக்கா திரும்பும் அந்நாட்டின் தூதுவர் ஜுலி சங்இ இலங்கையில் உண்மையில் மாயாஜாலம் உள்ளதென்று கூறியுள்ளார். இது யாரைக் குறிக்கிறது?

தமிழ் நாட்காட்டியில் தை மாதம் பிறக்கும்போது தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தமிழர்கள் நம்பிக்கை கொள்வது வழக்கம். இதனை வாழ்த்தாகவும் கூறிக்கொள்வர். 

பெரும்புயல் சீற்றத்தில் பேரழிவைக் கண்ட தீவு அதிலிருந்து மீள்வதற்கான சகல ஏற்பாடுகளையும் எடுத்து வருகிறது. சர்வதேசம் தாராளமாக அள்ளிக்கொடுக்கிறது. 

தைப்பொங்கல் தமிழருக்கான பெருநாள் என்பதை முன்வைத்து வடபகுதிக்கு தமது விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமர இங்கு அம்மண்ணின் மைந்தனாகத் தம்மை காட்டிக்கொண்டு நிகழ்ச்சிகளில் பங்குபற்றினார். ஆனால்இ தை பிறந்தும் தையிட்டி மக்களுக்கு எந்த விடிவும் கிடைக்கவில்லை. மக்களுக்காக போராடிய மக்கள் சிலர் நீதிமன்ற படிகளில் ஏற்றப்பட்டுள்ளனர். 

அநுர குமரவின் வடபகுதி விஜயத்தின் எதிர்பார்ப்புகள்இ வாக்குறுதிகள்இ மக்கள் வழங்கிய வரவேற்பு ஆகியவைகளுக்குள் செல்வதற்கு முன்னர் இவர் தலைமையிலான ஆட்சியின் அரசியற் செயற்பாடுகளை கவனிக்க வேண்டும். இவர்களது பிரதமர் ஹரிணி அமரசூரியவை மையப்படுத்தி விரிக்கப்பட்டுள்ள வலை சற்று தொய்ந்து காணப்படுகிறது. 
ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்படவிருந்த புதிய கல்வித்திட்டத்தை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்த எதிரணியினர்இ பாடப்புத்தகத்தில் திட்டமிட்டு நுழைக்கப்பட்ட பாலியல் தொடர்பான விடயங்களை முன்னிலைப்படுத்தி ஆட்சியை அலுப்புத்தட்ட வைக்க அங்கலாய்க்கின்றனர்.  ஏற்கனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட விமல் வீரவன்சஇ உதய கம்மன்பில போன்றவர்கள் தங்களை மீண்டும் மேடையேற்ற இதனை வாய்ப்பாக்குகின்றனர். ஆசிரிய சங்கங்கள் போர்க்கொடி தூக்கி நிற்கின்றன. பௌத்த பிக்குகளும் இதற்குள் இழுத்து விடப்பட்டுள்ளனர். 

மக்கள் குரலுக்கு மதிப்பளிக்கும் போக்கில் புதிய பாடத்திட்டத்தை ஆரம்பிப்பதை அரசு ஒரு வருடத்துக்கு பின்போட்டுள்ளது. எனினும் இதற்குப் பொறுப்பாகவுள்ள கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையை எதிரணியினர் கைவிடவில்லை. இதே கோரிக்கையுடன் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்த விமல் வீரவன்ச தம்மால்தான் பாடத்திட்டம் பின்போடப்பட்டதாகக் கூறி சத்தியாக்கிரகத்தை (இப்படிக் கூறுவதே பொருத்தமாகத் தெரியவில்லை) கைவிட்டார். நீதிமன்ற வழக்கொன்றுக்கு அன்று செல்லாவிட்டால் பிடியாணை பிறப்பிக்கப்படுமென்ற அச்சத்தினாலேயே இவர் சத்தியாக்கிரகத்தை கைவிட்டதாக ஆட்சித்தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். 

ஹரிணி அமரசூரிய மீதான நம்பிக்கையீன பிரேரணை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 22ம் 23ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இருதரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருகின்றனர். இதற்கிடையில் ஹரிணி எந்தப் பதவியிலிருந்தும் நீக்கப்பட மாட்டாரென்றும்இ அமைச்சரவை மாற்றமெதுவும் கிடையாதென்றும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. ஆனாலும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கைவிடும் நிலையில் எதிரணிகள் இல்லை. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல தமிழ் கட்சிகளும் ஹரிணிக்கு ஆதரவாக நிற்கின்றன. இதற்காக அவர்களுக்கு நன்றி கூறுவதைப் போன்று அலரிமாளிகையில் பல்வேறு மதத்தலைவர்களையும் அழைத்து பொங்கல் விழாவை ஹரிணி அமரசூரிய கோலாகலமாக செய்து காட்டியுள்ளார். 
அண்மைய நாட்களில் இவரைப் போன்று ஊடகங்களில் இன்னொரு முக்கிய பெண்மணி முக்கியத்துவம் பெற்றிருக்கிறார். நான்கு வருடங்கள் இலங்கையில் அமெரிக்காவின் தூதுவராகக் கடமையாற்றிவிட்டு கடந்த 16ம் திகதி தமது நாட்டுக்குத் திரும்பியிருக்கும் ஜுலி சங்இ தமது பதவிக்காலம் முடிந்து நாடு திரும்புவதற்கு முன்னர் சில முன்னாள் ஜனாதிபதிகள்இ தற்போதைய ஜனாதிபதி உட்பட பல முக்கியஸ்தர்களை நேரில் சந்தித்து பிரியாவிடை பெற்ற பின்னர் தமது எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார். 

இலங்கையர்கள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் தங்கள் புருவத்தை உயர்த்தும் வகையில் இவரது வாசகம் அமைந்துள்ளது. இலங்கையில் உண்மையிலேயே மாயாஜாலம் உள்ளது என்பது இந்த வாசகம். வுhநசந ளை ளழஅநவாiபெ வசரடல அயபiஉயட யடிழரவ ளுசi டுயமெய என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நிறுத்தாதுஇ  இனி என்ன நடக்கப்போகிறது என்பதில் நம்பிக்கை கொள்கிறேன் என்றும் புரிந்துகொள்ள முடியாத நடையில் பதிவிட்டுள்ளார். 

மாயாஜாலம் உள்ளது என்று இவர் குறிப்பிட்டது எதுவாக இருக்கலாம் என்பது அவரவர் கற்பனைக்கும் சர்ச்சைக்கும் உரியது. காலிமுகத்திடலில் இடம்பெற்ற அறகலைய போராட்டத்தின் இயக்குனராக இவரே இயங்கியதாக அப்போது பெருமளவில் பேசப்பட்டது. அறகலைய போராட்டக்காரர்களுக்கு காலிமுகத்திடலுக்கு அருகிலிருந்த ஹோட்டலிலிருந்து இரவு பகலாக சுவையான உணவுகள் விநியோகிக்கப்பட்டதற்கும் இவரே ஏற்பாடு செய்ததாக சில ஊடகங்களில் எழுதப்பட்டும் இருந்தது. 

அப்படியென்றால்இ கோதபாய நாட்டைவிட்டு தப்பியோடி பதவி துறந்ததுஇ மகிந்த ராஜபக்ச பதவி இறக்கப்பட்டு இரவோடிரவாக ஹெலியில் கொழும்பை விட்டுப் பறந்ததுஇ ராஜபச்சக்கள் கூண்டோடு அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டதுஇ ரணில் விக்கிரமசிங்க பிரதமராகி ஜனாதிபதியானதுஇ ஜே.வி.பி.யின் அடையாளமான தேசிய மக்கள் சக்தி கடந்த மூன்று தேர்தல்களிலும் வெற்றியைப் பெற்று ஜனாதிபதியாகவும்இ நாடாளுமன்றமாகவும்இ உள்ளாட்சிச்; சபைகளைக் கைப்பற்றியதும் என்று எதனை இவர் மாயாஜாலம் எனக்குறிப்பிட்டார் என்பது இதுவரை எவருக்கும் புரியவில்லை. அந்தகன் யானையைத் தடவிய கதையாக மாயாஜாலக் கதை நீண்டகாலத்துக்கு தொடரும் சாத்தியமுண்டு. 

அநுர குமரவின் வடபகுதிக்கான விஜயம் சற்று நோக்கப்பட வேண்டியது. கடந்த மூன்று தேர்தல் காலத்திலும் தமிழ் பகுதிகளுக்கு இவர் மேற்கொண்ட விஜயங்களுக்கும் இந்த விஜயத்துக்கும் வேறுபாடு காணப்படவில்லை. மழையோ வெய்யிலோ புகமுடியாத அலங்காரக் கூடாரங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆசனங்களில் அமர்த்திருந்தனர். வேலணை ஆலயம் ஒன்றின் முன்றலில் பொங்கல் பானையில் இவரே அரிசியிட்டு தைப்பொங்கலை ஆரம்பித்து வைத்தார். மூத்தோர்இ இளையோர் என ஆண் பெண் இருபாலாரும் திரண்டிருந்தனர். தமிழர் பாரம்பரிய முறைப்படி அநுர குமர வரவேற்கப்பட்டார். நடன நங்கைகள் மலர்ந்த முகத்துடன் அவரது கரத்தை இறுக்கிப்பிடித்த ஒளிப்படங்கள் இணையங்களில் பரவிக்கிடக்கின்றன. செல்பி எடுத்தவர்கள் இன்னொரு தொகையினர். 

யாழ்ப்பாண நாகவிகாராதிபதியும்இ நயினாதீவு விகாராதிபதியும் இவரது கைகளில் மந்திரிக்கப்பட்ட நூல்களை கட்டி வாழ்த்தினர். மறந்தும்கூட தமிழர் பிரச்சனை தீர்வு பற்றி எதுவும் கூறவில்லை. தமது அரசின் சில செயற்திட்டங்களை வழமையான பாணியில் எடுத்துக்கூறி கைதட்டலை பெற்றுக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் தமக்கு எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை - மக்களே எனது கவசம் என்பதைக் காட்டுவதைப்போல பொதுவீதியொன்றில் அரைக்காற்சட்டையுடன் நடைப்பயிற்சி செய்த காட்சி பிரபலமாகியுள்ளது. இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் சீருடையில் இவர் அருகில் செல்வதாகக் காட்டப்பட்டது. 

இன்னொரு ஒளிப்படம் இவர் உணவருந்துவது. தரையில் தடுக்கொன்றில் சப்பாணி கட்டி வேட்டியுடன் அமர்ந்தவாறு தலைவாழையிலையில் வைக்கப்பட்டிருந்த மூங்கில் குழல் பிட்டை குழம்புக் கறியுடன் கைகளால் பிசைந்து அவர் சாப்பிடும் காட்சி இந்த விஜயத்தின் கிளைமாக்ஸ். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் சிம்பிளாக வந்து எம்மவரில் ஒருவராக காட்சி கொடுத்து பிரபல்யமானதுபோல அநுர குமரவின் இம்முறை விஜயம் நன்கு திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது. இதனை இவரது காட்சி அரசியல் என்று குறிப்பிட்டால் தவறிருக்காது. இதன் அறுவடையைப்  பொறுத்தே வெற்றியைக்காண சில காலம் பொறுத்திருக்க வேண்டும். 

சாவகச்சேரி தொகுதியிலுள்ள மீசாலை என்ற இடத்தில் அமைந்துள்ள பாடசாலை  வளவில் குடும்ப வீடமைப்புத் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். இவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இளங்குமரனின் தொகுதி இதுவென்று சொல்லப்படுகிறது. தமிழரசுக் கட்சி சுமந்திரனின் வலது கரமான சயந்தனின் தொகுதியும் இதுதான். அதனால்தான் இந்த இடத்தை அநுர தரப்பினர் தெரிவு செய்திருக்கலாம் என்று வதந்தியும் உண்டு. 
இத்தொகுதியிலுள்ள நாவற்குழி என்ற இடத்தில் 1980களில் பிரதமராகவிருந்த பிரேமதாச (சஜித்தின் தந்தை)இ கம்உதாவ வீடமைப்புத் திட்டத்தின் கீழ் பெருமளவு வீடுகளை நிர்மாணித்தார். 1983 யூலை இனஅழிப்பின் பின்னர் ராணுவத்தினரின் குடியிருப்பாக இது மாற்றமடைந்தது. இப்போது பௌத்த விகாரையுடன் சிங்கள மக்களின் குடியேற்றத்திட்டமாகியுள்ளது. மீசாலை வீடமைப்புத் திட்டமும் அவ்வாறு மாற்றம் பெறாதிருக்கப் பார்த்துக் கொள்வது தமிழ்த் தேசிய கட்சியினர் என்று கூறிக்கொள்பவர்களின் பாரிய கடமை.

அநுர குமரவின் வடபகுதி விஜயத்தை தமிழரசுக் கட்சி புறக்கணித்தது. இது கட்சியின் முடிவு என சுமந்திரன் முதலில் அறிவித்திருந்தார். கட்சிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லையெனவும் தவிசாளர்களுக்கு மட்டும் அழைப்பு வந்ததாகவும் அதனை அவர்கள் பகிஸ்கரித்துவிடடதாகவும் பின்னர் சொன்னார். 

இவரை பதில் செயலாளராக்குவதற்காக தமது பதவியை இராஜினாமா செய்த சத்தியலிங்கம் வேறொரு விளக்கம் கொடுத்துள்ளார். ஜனாதிபதியின் மீது தாங்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும்இ முன்னையவர்கள்போல இவரிடம் கொடூர முகம் இல்லையெனவும்இ இவரது வருகை பற்றி தாங்கள் அறிந்திருந்ததாகவும்இ ஆனாhல் தங்களுக்கு அழைப்பு வரவில்லையென்றும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அழைப்பு வந்திருந்தால் தாங்கள் போயிருப்போம் என்பது போன்றுள்ளது சத்தியலிங்கத்தின் கூற்று. 

அநுரவின் வடபகுதி விஜயத்தையும் தமிழரசுக் கட்சியின் கருத்துகளையும் பார்க்கும்போது இவ்விடயத்தில் இவர்கள் குழம்பியிருப்பதுபோல தெரிகிறது. கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்குமோ தெரியாது. 

சுவிஸ் புறப்பட்ட டிரம்பின் விமானத்தில் கோளாறு: மீண்டும் அமெரிக்காவில் தரையிறங்கியது!

www.pungudutivuswiss.co


சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸில் தற்போது உலகப் பொருளாதாரப் பேரவைக் 

21 ஜன., 2026

சுமந்திரன் வீட்டில் சங்கு கூட்டணி செய்த ரகசிய டீல்: வெளியே தெரியாத விடயம்!

www.pungudutivuswiss.com
தமிழரசுக்கட்சி பதில் செயலாளர் MA சுமந்திரன், பதில் தலைவர் CVK சிவஞானம், EPRLF தலைவர் சுரேஷ்பிரமச்சந்திரன், TELO தலைவர்

ரஷ்ய மீது உக்ரைன் சரமாரி ட்ரோன் தாக்குதல்: பற்றி எரிந்த வாகனங்கள் - குழந்தைகள் உட்பட பலர் படுகாயம்! (VIDEO) by SS - 21 January

www.pungudutivuswiss.com


ரஷ்ய குடியிருப்பு கட்டிடங்கள் மீது உக்ரைன் சரமாரி ட்ரோன் தாக்குதல்: பற்றி எரிந்த வாகனங்கள் - குழந்தைகள் உட்பட பலர் படுகாயம்!

ரத்தமா போகுதுப்பா, என்னை விட்ராதப்பா.." - மாணவியின் கடைசி நிமிடக் கதறல்!

www.pungudutivuswiss.com0


உயிரையே பறித்த 'வெங்காரம்'! "ரத்தமா போகுதுப்பா, என்னை விட்ராதப்பா.." - மாணவியின் கடைசி நிமிடக் கதறல்!

சரீர பிணையில் வெளியே வந்த இளங்குமரன் எம்.பி

www.pungudutivuswiss.com

கடந்த நவம்பர் மாதம் இறுதியில் பேரிடர் சமயம் கிளிநொச்சியில் நிவாரணப்

நிலக்கரி கொள்வனவில் மோசடி- முழு அமைச்சரவையும் சிறைச் செல்ல நேரிடும்! [Wednesday 2026-01-21 06:00]

www.pungudutivuswiss.com

தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பில் வலுசக்தி அமைச்சருடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட தயார். நிலக்கரி கொள்வனவு விவகாரத்தில் முழு அமைச்சரவையும் எதிர்காலத்தில் சிறைச் செல்ல நேரிடும்  என்று  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வி சானக தெரிவித்தார்.

தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பில் வலுசக்தி அமைச்சருடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட தயார். நிலக்கரி கொள்வனவு விவகாரத்தில் முழு அமைச்சரவையும் எதிர்காலத்தில் சிறைச் செல்ல நேரிடும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வி சானக தெரிவித்தார்.

    

தமிழக சட்டப்பேரவையில் உரையை வாசிக்காமல் வெளியேறினார் ஆளுநர்:

www.pungudutivuswiss.com
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல்

19 ஜன., 2026

ஸ்பெயினில் அதிவேக தொடருந்து மோதிய விபத்தில் குறைந்தது 39 பேர் பலி!

www.pungudutivuswiss.com

உள்வீட்டு விவகாரங்களில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை! [Monday 2026-01-19 16:00]

www.pungudutivuswiss.com


தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான ஸ்ரீதரன் சுமந்திரன் தொடர்பில் கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.  யாழ். கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று  நடத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான ஸ்ரீதரன் சுமந்திரன் தொடர்பில் கட்சியின் உள்வீட்டு விவகாரங்களில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ். கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயர்தரத்தில் 3s எடுத்த மாணவி யாழ். மருத்துவபீடத்தில் கல்வி பயின்றது அம்பலம்! [Monday 2026-01-19 16:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த தென்னிலங்கை மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த தென்னிலங்கை மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

18 ஜன., 2026

ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த பதிலடி உறுதி: ட்ரம்பிற்கு மேக்ரான் மிரட்டல்! [Sunday 2026-01-18 06:00]

www.pungudutivuswiss.com

கிரீன்லாந்தின் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த நேட்டோ கூட்டாளிகள் மீது வரிகளை விதித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டலுக்கு, உடனடியாகவே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கிரீன்லாந்து விவகாரத்தில் ஆதரவளிக்காத நாடுகளின் மீது வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் ஆகியோர் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

கிரீன்லாந்தின் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த நேட்டோ கூட்டாளிகள் மீது வரிகளை விதித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டலுக்கு, உடனடியாகவே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கிரீன்லாந்து விவகாரத்தில் ஆதரவளிக்காத நாடுகளின் மீது வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் ஆகியோர் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு "விஜய் கட்சியால் விழுந்த 2வது விக்கெட்

www.pungudutivuswiss.com
விஜய்யின் ‘ஆபரேஷன் 2026’: தவெகவில் ஐக்கியமான அதிமுக மாவட்டச் செயலாளர்! அடுத்த விக்கெட் யாரு? அதிரும் தமிழக அரசியல்!

தையிட்டி சட்டவிரோத விகாரை விகாரதிபதியை முன் வரிசையில் அமர்த்தி அழகு பார்த்த ஜனாதிபதி

www.pungudutivuswiss.com


தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி தற்போதைய

தமிழரசில் இருந்து வெளியேற்றியதாக அரியநேத்திரனுக்கு கடிதம் அனுப்பினார் சுமந்திரன்! [Sunday 2026-01-18 08:00]

www.pungudutivuswiss.com


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரனுக்கு கட்சியில் நீக்கப்பட்டதாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரனுக்கு கட்சியில் நீக்கப்பட்டதாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

சுயாதீனமான அரசியலமைப்பு சபையில் சிறிதரனுக்கு நெருக்கடி! [Sunday 2026-01-18 08:00]

www.pungudutivuswiss.com


நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை, தற்போது அரசியலமைப்பு பேரவை பதவியில் இருந்து விலக வேண்டும் என அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருப்பது தொடர்பில் அறியக் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை, தற்போது அரசியலமைப்பு பேரவை பதவியில் இருந்து விலக வேண்டும் என அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருப்பது தொடர்பில் அறியக் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்

14 ஜன., 2026

"திருமண ஆசையில் விபரீதம்: யாழ். நகைக்கடையில் 10 கோடி தங்கம் அபேஸ்

www.pungudutivuswiss.com

டக்ளஸ் இணைப்பு செயலாளர் கைது

www.pungudutivuswiss.com

இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் - மூன்று இளைஞர்கள் கைது

www.pungudutivuswiss.com


இந்தியாவில் இருந்து புறாக்களை கடத்தி வந்த நெடுந்தீவை சேர்ந்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பெண் பொலிஸ் அதிகாரியுடன் சிக்கிய உதவி பொலிஸ் அத்தியகட்சகர்

www.pungudutivuswiss.com
லஞ்சம் பெற்று குற்றச்சாட்டில் ஆண் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகளை இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினை சேர்ந்த அதிகாரிகள்

ஆசிரியர் சேவைக்கு 23,344 பட்டதாரிகள் நியமனம்! விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

www.pungudutivuswiss.com

நாட்டில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், 23,344 பட்டதாரிகளை ஆசிரியர்

13 ஜன., 2026

வேலணையில் அனுர! : எழுவைதீவில் காணி பிடிப்பு

www.pungudutivuswiss.com
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15
ஆம் திகதி தைப்பொங்கல் தினமன்று யாழ்ப்பாணத்திற்கு

இரானில் தீவிரமடையும் போராட்டம் முந்தைய போராட்டங்களை விட எவ்வாறு மாறுபட்டது?

www.pungudutivuswiss.com
பல நிபுணர்கள் மற்றும் நேரடி சாட்சியங்களின் கூற்றின்படி இரானில்
அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டங்கள், இஸ்லாமிய

விஜய்யுடன் நாங்க கூட்டணி வெச்சா என்ன தப்பு? டிடிவி தினகரன் அதிரடி! பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்!

www.pungudutivuswiss.com

புத்தளத்தில் கோர விபத்து - 3 பேர் பலி! [Monday 2026-01-12 15:00]

www.pungudutivuswiss.com


முந்தலம் – நவதன்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்றும் வானும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.புத்தளம்-கொழும்பு பிரதான சாலையில் உள்ள நவதன்குளம் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
காரில் பயணித்த இரண்டு பெண்களும், ஆண் ஒருவரும் உயிரிழந்தனர். குறித்த விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முந்தலம் – நவதன்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்றும் வானும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.புத்தளம்-கொழும்பு பிரதான சாலையில் உள்ள நவதன்குளம் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காரில் பயணித்த இரண்டு பெண்களும், ஆண் ஒருவரும் உயிரிழந்தனர். குறித்த விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாடொன்றில் அரங்கேறிய பகீர் சம்பவம்: கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்ட மனித தலைகள்! [Monday 2026-01-12 19:00]

www.pungudutivuswiss.com

ஈக்வடோர் நாட்டில் உள்ள கடற்கரையொன்றில் 5 பேர் கொடூரமாக கொல்லப்பட்டு, அவர்களின் தலைகள் கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (11) ஈக்வடோரின் மனாபி (Manabi) மாகாணத்தில் உள்ள புவேர்ட்டோ லோபஸின் (Puerto Lopez) சிறு மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள சுற்றுலா கடற்கரையிலேயே இந்தத் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஈக்வடோர் நாட்டில் உள்ள கடற்கரையொன்றில் 5 பேர் கொடூரமாக கொல்லப்பட்டு, அவர்களின் தலைகள் கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (11) ஈக்வடோரின் மனாபி (Manabi) மாகாணத்தில் உள்ள புவேர்ட்டோ லோபஸின் (Puerto Lopez) சிறு மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள சுற்றுலா கடற்கரையிலேயே இந்தத் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளன

ஹரினி மீதான நம்பிக்கையீன பிரேரணையும் சிறீதரன் மீதான நடவடிக்கைக் கடிதமும்! பனங்காட்டான்

www.pungudutivuswiss.com

வெள்ளியன்று சந்திக்கும் தமிழரசு- சங்கு கூட்டணி! [Sunday 2026-01-11 18:00]

www.pungudutivuswiss.co


மாகாணசபைத் தேர்தலை இவ்வருடத்துக்குள் தேர்தலை நடாத்துவதற்கான அழுத்தங்களை எவ்வாறு  பிரயோகிப்பது என்பது குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சியும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் கூடி ஆராயவுள்ளன.

மாகாணசபைத் தேர்தலை இவ்வருடத்துக்குள் தேர்தலை நடாத்துவதற்கான அழுத்தங்களை எவ்வாறு பிரயோகிப்பது என்பது குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சியும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் கூடி ஆராயவுள்ளன.

12 ஜன., 2026

சற்று முன்னர் கிளிநொச்சியில் பரபரப்பு.. பேருந்துடன் கார் மோதியதில் இருவர் பலி

www.pungudutivuswiss.com










சற்று முன்னர், கிளிநொச்சி - ஏ35 வீதியில் கார் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். 

முரசுமோட்டை பகுதியில் நடந்த குறித்த சம்பவத்தில் காரில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

11 ஜன., 2026

ஓனர் வெளிநாட்டில் வீட்டை வாடகைக்கு எடுத்து ஒரே மஜா யாழ்ப்பாணத்தில்

www.pungudutivuswiss.com

வலுவிழந்த தாழமுக்கம்- மீனவர்களுக்கான எச்சரிக்கை நீக்கம்! [Sunday 2026-01-11 06:00]

www.pungudutivuswiss.com


மன்னார் வளைகுடாப் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழமுக்கப் பகுதி தொடர்ந்தும் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தொகுதியின் ஊடாக நாட்டின் வானிலையில் ஏற்படும் தாக்கம் மேலும் குறைவடைந்து வருவதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மன்னார் வளைகுடாப் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழமுக்கப் பகுதி தொடர்ந்தும் வலுவிழந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தொகுதியின் ஊடாக நாட்டின் வானிலையில் ஏற்படும் தாக்கம் மேலும் குறைவடைந்து வருவதாகவும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

    

மலையுச்சியில் இருந்து 100 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த சிறுமி- உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்! [Sunday 2026-01-11 06:00]

www.pungudutivuswiss.com


பதுளை - எல்ல பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லிட்டில் எடம்ஸ் பீக் மலையிலிருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு சிறுமி ஒருவர் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதுளை - எல்ல பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லிட்டில் எடம்ஸ் பீக் மலையிலிருந்து தவறி வீழ்ந்த வெளிநாட்டு சிறுமி ஒருவர் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    

வடக்கு ஐரோப்பாவை தாக்கிய கோரெட்டி புயல்: ஜேர்மனி, பிரான்ஸ் கடும் பாதிப்பு! [Saturday 2026-01-10 07:00]

www.pungudutivuswiss.com

வடக்கு ஐரோப்பாவை கோரெட்டி (Goretti) புயல் தாக்கியதால், பல நாடுகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீசுகிறது. இதில், ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. ஜேர்மனியில், பலத்த பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்சில், பலத்த காற்று வீச்சு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகள் உள்ளன.

வடக்கு ஐரோப்பாவை கோரெட்டி (Goretti) புயல் தாக்கியதால், பல நாடுகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீசுகிறது. இதில், ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. ஜேர்மனியில், பலத்த பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்சில், பலத்த காற்று வீச்சு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகள் உள்ளன

இரான் மக்கள் அரசுக்கு எதிராகப் போராடுவது ஏன்? உண்மையில் என்ன நடக்கிறது?

www.pungudutivuswiss.com
மஷாதில் ஒரு குழுவாகத் திரண்ட போராட்டக்காரர்கள்பட மூலாதாரம்,
SOCIAL MEDIA

10 ஜன., 2026

Oreshnik' ஏவுகணையால் புதின் நடத்திய 'Revenge Strike'! கிடுகிடுக்கும் ஐரோப்பா

www.pungudutivuswiss.com


ரஷ்ய அதிபர் புதினின் இல்லத்தையே உக்ரைன் குறிவைத்ததாக கிளம்பிய புகாரைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை உக்ரைன் மீது ரஷ்யா தனது

ஹரிணிக்கு எதிரான அவதூறு ஏற்றுக்கொள்ளவே முடியாதது! [Saturday 2026-01-10 17:00]

www.pungudutivuswiss.com


கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு  எதிராக தற்போது அவருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக தற்போது அவருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

9 ஜன., 2026

எல்லி புயல்: ஜேர்மனியில் பனிப்புயல் எச்சரிக்கை

www.pungudutivuswiss.com
எல்லி (Elli) புயல் காரணமாக ஜேர்மனியில் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

8 ஜன., 2026

66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார் டிரம்ப்

www.pungudutivuswiss.com


பலதரப்பு ஒத்துழைப்பிலிருந்து வாஷிங்டன் பின்வாங்குவதை விரைவுபடுத்தும்
 வகையில், முக்கிய ஐ.நா. நிறுவனங்கள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளில் 

மக்களுக்கு அவசர எச்சரிக்கை! மாலை 5.30 மணிக்கு பிறகு நாட்டிற்குள் நுழையவுள்ள தாழமுக்கம்

www.pungudutivuswiss.com
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது நாட்டிற்குள் நுழையும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்

வெனிசுலா ரெய்டு எதிரொலி: பிரிட்டனில் குவிந்த அமெரிக்க போர் விமானங்கள்!

www.pungudutivuswiss.com
வெனிசுலா மற்றும் கிறீன்லாந்து விவகாரங்களில் டொனால்ட் ட்ரம்ப் தலையிட்டதால் உலக அளவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,

இரு கட்சிகள் இணைப்பு:சிறிகொத்தவில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்

www.pungudutivuswiss.com
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (07.01.2026) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் பல சிறப்புத்

முதலில் அமெரிக்க படையை சுடுவோம்- அப்புறம் பேசுவோம் டென்மார் பதிலடி !

www.pungudutivuswiss.com
"கிரீன்லாந்து மீது அமெரிக்கா கை வைத்தால், நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்" என்று டென்மார்க் பாதுகாப்பு அமைச்சகம் (Danish Defence Ministry) உலகத்தையே

பேராபத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் - யாழ்ப்பாணத்தில் இதுவரையில்லாத பாதிப்பு ஏற்படும்! [Wednesday 2026-01-07 18:00]

www.pungudutivuswiss.com


தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என எச்சரித்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா இதன் தாக்கம் யாழ் மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு  பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என எச்சரித்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா இதன் தாக்கம் யாழ் மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்

சாரா ஜஸ்மின் இறக்கவில்லை- அரசாங்கம் அதிர்ச்சி அறிவிப்பு! [Wednesday 2026-01-07 18:00]

www.pungudutivuswiss.com


2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்றும் அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்துவிடவில்லை என்பது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால , பாராளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார்.

2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்றும் அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்துவிடவில்லை என்பது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால , பாராளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார்

தையிட்டி விவகாரம் பொலிஸார் மீது சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல் குருபரன் சட்டநீதியான குற்றச்சாட்டை மன்றில் முன்வைத்தார்.

www.pungudutivuswiss.com
ஆர்ப்பாட்டங்களை பொதுத்தொல்லைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது.. பொலிஸார் மனித உரிமைகள் மீறல்லை நீதிமன்ற கட்டளை மூலம் செய்கிறார்கள்

7 ஜன., 2026

கஜேந்திரகுமாருக்கு எதிரான அர்ச்சுனாவின் கடும் விமர்சனம்! இடத்தை மாற்றுமாறு சபையில் குழப்பம்

www.pungudutivuswiss.com

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறும் வகையில்

விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஒப்புக்கொண்டார்களா டிடிவி, ஓபிஎஸ், பிரேமலதா, ராமதாஸ்? அமைகிறது மெகா கூட்டணி?

www.pungudutivuswiss.com
விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஒப்புக்கொண்டார்களா டிடிவி, ஓபிஎஸ், பிரேமலதா, ராமதாஸ்? அமைகிறது மெகா கூட்டணி?

4 ஜன., 2026

வெறும் 2 மணி 20 நிமிடங்களில் மதுரோவை பிடித்த அமெரிக்கா - ஒரு வீரரை கூட இழக்காமல் செய்து முடித்தது எப்படி?

www.pungudutivuswiss.com
மாதக்கணக்கில், அமெரிக்க உளவாளிகள் வெனிசுவேலா அதிபர்
நிக்கோலஸ் மதுரோவின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வந்தனர்.

ad

ad