புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2013

22 வயதான யுவதியை கடத்தி நிர்வாணப் படம் எடுத்த நபருக்கு விளக்கமறியல்!
உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்காக மஹர பெண்கள் பாடசாலையில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த 22 வயதான யுவதியை கடத்திச் சென்று ஆடைகளை அவிழ்த்து புகைப்படம் எடுத்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வீதியில் நடந்தது சென்ற யுவதியை பலவந்தமாக முச்சக்கர வ

கொழும்பு, மட்டக்குளி கெமுனுபுர பகுதியில் சுமார் 30 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. வீடொன்றில் இருந்த குப்பி விளக்கொன்று கீழே விழுந்து தீ பரவியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
எனினும் தற்போது இராணுவத்தினரை தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

நவிப்பிள்ளைக்கும் அருண் தம்பிமுத்துவிற்கும் இடையில் காரசார விவாதம்

விடுதலைப்புலிகள் தனது தாய் மற்றும் தந்தையை பட்டபகலில் படுகொலை செய்த போது இலங்கை மீது போர் குற்றம் சுமத்தும் தரப்பினர் அமைதியாக இருந்தனர் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு

ஐநா அலுவலகத்தின் உள்ளே அரச “CID” திணறிய ஊடகவியலாளர்கள்!! பதறிய நவிப்பிள்ளை??

ஐநா அலுவலகத்தின் உள்ளேயும் புலனாய்வாளர்கள் – ஊடக அமைப்பின் பிரதிநிதிகளுடனான சந்திப்பை குழப்பினர் கொழும்பில் உள்ள ஐக்கியநாடுகள் சபை அலுவலகத்தில் பணியாற்றும் அரசாங்க அதிகாரிகள் கடுமையாக செயற்படுவதாக இன்றைய சந்திப்பு ஒன்றில்
சென்னையில் இருந்து  ஐதராபாத் புறப்பட்ட விமானத்தில் கோளாறு:
165 பயணிகள் உயிர்தப்பினர்

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை ஐதராபாத்துக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட்டது. அதில் 165 பயணிகள் இருந்தனர்.
பெற்ற மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய்க்கு41 ஆண்டு சிறைத்தண்டனை
பெற்ற மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புதுச்சேரி தாயாருக்கு 41 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வவுனியாவில் கிழக்கு மாகாண எம்.பிகள் உச்சகட்ட பிரசாரத்தில்!- பாவற்குளத்தில் அரியம் எம்.பி தீவிர பிரசாரம்
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெற இருக்கும் வடமாகாண சபைக்கான தேர்தலின் பிரசார நடவடிக்கைகள் தீவிரம் அடைந்திருக்கும் இவ்வேளையில, கிழக்கு மாகாண ஜனநாயக போராளிகளும் வடக்கு பிரசார போர் முனையில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

அஜங்கனின் தந்தையை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு! நெஞ்சு வலியென்று வைத்தியசாலையில் தஞ்சம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜனின் தந்தையான இராமநாதனை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதிவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பிரபாகரன் படம் ஒவ்வொரு தமிழனுக்கும் உந்துசக்தியாக அமையும்! - பழ. நெடுமாறன்
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று படம், ஒவ்வொரு தமிழருக்கும் உந்து சக்தியாக அமையும் என பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த வீடியோ பேட்டி:
வரலாற்றில் மிகப்பழமையும் மிகப்பெருமையும் மிக்க புரட்சி யுகத்தை பூக்கச்செய்த பெருமை தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு.
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை அவசியம்: ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில்,, சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர், ஜனாதிபதி உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சு!- சில சம்பவங்கள் தனிப்பட்டவை: ஜனாதிபதி மஹிந்த
இலங்கைக்கு ஒரு வாரகால உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்திததார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரி மாளிககையில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
நவநீதம்பிள்ளையை இழிவுபடுத்திப் பேசிய சிங்கள அமைச்சருக்கு வைகோ கண்டனம்
நீதிக்காகவே வாழ்கின்ற மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்கிறேன் என்ற சிங்கள அமைச்சர் மேர்வின் சில்வாவின் திமிர்ப் பேச்சுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய சூப்பர் கிண்ணத்தைபயேர்ண் மியூனிச்  அபாரமாக ஆடி கடைசி  செக்கன் வரை போராடி   வென்றது 

1-1 என்ற சமநிலையில் மேலதிக நேரம் 30 நிமிடத்தில் இரண்டாவது கோலை போட்ட செல்செயை எதிர்த்து கடைசி வினாடி வரை கள மாடிய மியூனிச் தனது 40 மில்லியன் வீரர் மாற்றினஷ் மூலம் விளையாட்டு முடிய 4 செக்கன்களே இருக்கும்போது கோலை அடித்து மீண்டும் சமநிளையாக்கி பனால்டி உதய் வெற்றி நிர்ணயிப்புக்கு இழுத்து சென்றது .இரண்டு பக்கமுமே நட்சத்திர பந்துக்காப்பலர்களை நம்பி இருக்க மியூனிச் காப்பாளே நோயர் 5 வது பந்தை பிடித்து தனது அணிக்கு வெற்றியை தேடி தந்தார் .மியூநிசுக்கு இந்த பருவ காலத்தில் கிடைக்கும் 5 வது கிண்ணம் இதுவாகும் (ஐரோப்பிய சம்பியன்,ஐரோப்பிய சூப்பர் கிண்ணம்,ஜேர்மனிய கிண்ணம்,ஜேர்மனிய சம்பியன்,ஜேர்மனிய சூப்பர் கிண்ணம் )

30 ஆக., 2013

எமது இணையத்தின் செய்தியாளர்கனின் கருத்துக்கணிப்பின்படி  வட  மாகாண  சபை தேர்தலின் தற்போதைய நிலவரப்படி 
கூட்டமைப்பின் வேட்பாளர்களின் வெற்றி பெறுவோர் வரிசையில் விருப்பு வாக்குகள் பின்வரும் நிலையில் உள்ளதாக  அறிகிறோம் 

1.விக்கினேஸ்வரன் 
2.ஆனந்தி சசிதரன் (எழிலன் )
3.கஜதீபன் 
4.சித்தார்த்தன் 
5.தம்பிராசா 
6.ஐங்கரநேசன் 
சென்னை அணி கிண்ணத்தை வெல்லும்: அஷ்வின் நம்பிக்கை

சாம்பியன்ஸ் லீக்ஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சென்னை அணி கிண்ணத்தை வெல்ல உதவுவோம் என சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்ய போர்க் கப்பல்கள் விரைந்தன

சிரியாவின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்ய போர்க் கப்பல்கள் விரைந்துள்ளன.

இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை திட்டமிட்ட ரீதியில் செயற்பட்டு வருகின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று மெழுகுவர்த்திப் போர்; நவநீதம்பிள்ளையின் கவனத்தை ஈர்க்க காணாமற்போனோரின் உறவுகள் திரள்வர் 
சர்வதேச காணாமற்போனோர் தினமான இன்று வெள்ளிக்கிழமை இரவு காணாமற் போனோரின் உறவுகள் ஒன்றிணைந்து மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.
பிரபல அரசியல் பிரமுகரின் மருமகனுடன் நடிகை அஞ்சலி ரகசிய திருமணம்?
நடிகை அஞ்சலிக்கு ரகசிய திருமணம் நடந்ததாகவும் கணவருடன் அமெரிக்காவில் குடியேறி விட்ட தாகவும் தெலுங்கு பட உலகில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு! துன்பங்களை வெல்வதுதான் வாழ்வின் சுவை! ஜெயலலிதா பேச்சு!
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், வீட்டு வசதி மற்றும் நகரப்புற வசதித்துறை அமைச்சருமான ஆர்.வைத்தியலிங்கம் மகன் பிரவுக்கும், மதுரை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் மகன் கே.பி. சிவசுப்பிரமணியனுக்கும் திருமணம் நடந்தது. இதில் அதிமுக பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஜெயலலிதா,


அறநெறிப்படி வாழ்பவர் வாணுலகத்தில் வாழும் தேவர்களுள் ஒருவராக வைத்து மதிக்கப்படுவார் என்கிறது வள்ளுவம்.

ad

ad