சனி, ஆகஸ்ட் 30, 2014

8 வயது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொன்று வீட்டுக்குள்ளேயே புதைத்த தந்தைக்கு மரண தண்டனை
எட்டு வயதான மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீட்டுக்கு உள்ளேயே புதைத்த  தந்தை ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளை உயர் நீதிமன்ற நீதவான் தேவிகா அபேரட்ன இந்தத் தண்டனையை விதித்துள்ளார்.
அவிசாவளை மானியம்கம என்னும் இடத்தைச் சேர்ந்த 56 வயதான குடாபொலகே நிமால் ஜயசிங்க என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்துள்ளார்.
சிறுமியை பல தடவைகள் குறித்த நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இறுதியில் சிறுமியைக் கொன்று வீட்டுக்கு உள்ளேயே புதைத்து விட்டு, சிறுமியை காணவில்லை என பொலிஸ் நிலையததில் முறைப்பாடு செய்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் போது தந்தை குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
2007ம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டுக்குள் புதைக்கபபட்ட சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனை நடத்திய சட்ட வைத்திய அதிகாரி, சிறுமி நீண்ட காலமாக பாலியல் ரிதியாக துன்புறுத்தப்பட்டதை உறுதி செய்துள்ளார்.