புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2020

ஆனோல்ட்டுக்கு மணி அணி ஆதரவு?

www.pungudutivuswiss.com
நாளை நடைபெறவுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இமானுவல் ஆனல்ட், மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் அணி ஆதரவளிக்கலாமென தகவல்கள் வெளிவ்ந்துள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற கூட்டத்தில் முதல்வர் தெரிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இமானுவல் ஆனல்ட் என முடிவெடுக்கப்பட்டதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அறிவித்திருந்தார்.

ad

ad