மதிப்புக்குரிய ஆறுமுகம் அரியரத்தினம் அவர்களின்,70வது பிறந்த தினத்தை புங்குடுதீவு மடத்துவெளி சனசமுகநிலையம்-கனடா கிளை வாழ்த்திக் கௌரவித்தது.
-
15 நவ., 2013
யாழ். நூலகத்திற்கு முன்பாக பதற்றம் - அனைத்துலக பிரசன்னத்தின் முன் கண்ணீர் மல்க காத்திருந்த மக்கள் மீது காட்டுமிராண்டித்தனம்!
கே.பியிடம் விசாரணை நடத்த இலங்கையிடம் உத்தியோகபூர்வ பதிலை எதிர்பார்த்திருக்கும் சி.பி.ஐ!- இந்துஸ்தான் டைம்ஸ்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையுடனான தொடர்புகள் பற்றி கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடம் முறையான விசாரணைகளை நடத்த இந்திய மத்திய விசாரணை பிரிவினர் (சி.பி.ஐ) இலங்கையின் உத்தியோகபூர்வமான பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ்
எனது தனிப்பட்ட பார்வையில் நல்ல கவி வீச்சு ,கரு ப்பொருள், கோர்ப்பு ,பொருள் கூறல் ,பா வம் ,காலத்துக்கு ஏற்ற படைப்பு போன்ற அம்சங்கள் இருந்தும் எனக்கு பிடிக்காத ஊடக நாகரீகம் குறைவாக இருக்கிறது.விதிவிலக்காக இந்த கவிஞனின் ஆற்றலுக்கு மதிப்பளித்து சேர்த்துக் கொள்கிறேன்
முள்ளிவாய்க்கால் முற்றம் அதிலென்ன குற்றம்!
ஆக்கம்: அ.பகீரதன்
இடித்தவன் தலையில்
இடி வீழாதோ-சிறை
பிடித்தவன் அரசின்
முடி தாழாதோ?
படைத்தவன் இல்லையோ-இல்லை
பார்ப்பனர் தொல்லையோ
உடைத்தவன் உதிரத்தை
குடித்தால் தகுமோ?
அம்மா..
முற்றத்தை இடித்தாயோ–உன்
முகத்திரையை கிழித்தாயோ?
சுற்றத்தை வெறுத்தாயோ-உன்
சுகத்தை நினைத்தாயோ?
முந்தானை விரித்து-அரசியலில்
முன்னுக்கு வந்தவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
மு.க.வின் மாளிகையா?
பல் இளித்து பாவாடை குறுக்கி
சினிமாவில் வென்றவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
சினிமா செற்றா
அம்மா
வாஸ்த்து பார்த்தீரோ
வைகோவை வாயடைக்கப் பார்த்தீரோ
நுனிநாக்கால் தீர்மானம் போட்டுவிட்டு
சனிநாக்கால் தமிழ்மானம் கெடுத்தீரோ
பார்ப்பனரே…
பல்லக்கில் பவனிவந்த
தமிழன் இன்று
உங்கள் சொல்கேட்டு
பள்ளத்தில் வீழ்ந்தானே
முல்லைக்குத் தேர் கொடுத்த
தமிழ் வம்சத்துப் பெண்பிள்ளைக்கு
முள்ளிவாய்க்காலில் மூடிமறைக்க
ஒருதுண்டு துணியில்லை
வாழ வழியின்றி வந்தேறு குடிகளிற்கு
வீடுநிலமும் விதைநிலமும்
கொடுத்த தமிழனுக்கு
நினைவுக்கல் நாட்ட நிலமில்லை
நன்றி.
அ.பகீரதன்
முள்ளிவாய்க்கால் முற்றம் அதிலென்ன குற்றம்!
ஆக்கம்: அ.பகீரதன்
இடித்தவன் தலையில்
இடி வீழாதோ-சிறை
பிடித்தவன் அரசின்
முடி தாழாதோ?
படைத்தவன் இல்லையோ-இல்லை
பார்ப்பனர் தொல்லையோ
உடைத்தவன் உதிரத்தை
குடித்தால் தகுமோ?
அம்மா..
முற்றத்தை இடித்தாயோ–உன்
முகத்திரையை கிழித்தாயோ?
சுற்றத்தை வெறுத்தாயோ-உன்
சுகத்தை நினைத்தாயோ?
முந்தானை விரித்து-அரசியலில்
முன்னுக்கு வந்தவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
மு.க.வின் மாளிகையா?
பல் இளித்து பாவாடை குறுக்கி
சினிமாவில் வென்றவரே
முள்ளிவாய்க்கால் முற்றமென்ன
சினிமா செற்றா
அம்மா
வாஸ்த்து பார்த்தீரோ
வைகோவை வாயடைக்கப் பார்த்தீரோ
நுனிநாக்கால் தீர்மானம் போட்டுவிட்டு
சனிநாக்கால் தமிழ்மானம் கெடுத்தீரோ
பார்ப்பனரே…
பல்லக்கில் பவனிவந்த
தமிழன் இன்று
உங்கள் சொல்கேட்டு
பள்ளத்தில் வீழ்ந்தானே
முல்லைக்குத் தேர் கொடுத்த
தமிழ் வம்சத்துப் பெண்பிள்ளைக்கு
முள்ளிவாய்க்காலில் மூடிமறைக்க
ஒருதுண்டு துணியில்லை
வாழ வழியின்றி வந்தேறு குடிகளிற்கு
வீடுநிலமும் விதைநிலமும்
கொடுத்த தமிழனுக்கு
நினைவுக்கல் நாட்ட நிலமில்லை
நன்றி.
அ.பகீரதன்
மனித உரிமை மீறல் தொடர்பில் நடவடிக்கை எடுக்க இலங்கையை நிர்ப்பந்திக்க வேண்டும்: கொமன்வெல்த் நாடுகளுக்கு வலியுறுத்து
இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்நாட்டை கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் நிர்ப்பந்திக்க வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மெக்ரேயை மங்கள சந்தித்தமையானது டி.எஸ்.சேனநாயக்கவின் கன்னத்தில் அறைந்ததுக்கு சமம்: அரசாங்கம்
இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக பிரசாரம் செய்யும் கெலும் மெக்ரேயை ஐ.தே.கட்சி எம்.பி மங்கள சமரவீர அக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் சந்தித்தமையானது தேசப்பற்று கொண்ட டி.எஸ்.சேனநாயக்கவின் 'கன்னத்தில் அறையும்" செயலாகும்
14 நவ., 2013
மும்பை டெஸ்ட்: ரசிகர்கள் ஆரவாரத்துடன் களமிறங்கிய சச்சின்!
மும்பையில் இன்று நடந்த மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட்டை இழந்து 157 ரன்கள் எடுத்தது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின் களம் இறங்கி 38 ரன்களுடன் ஆட்டம் இழக்கமால் உள்ளார்.
மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு மறைக்க முயற்சி ; சர்வதேச மன்னிப்பு சபை
பொது சமூகத்தில் காணப்படுகின்ற அச்சுறுத்தல்களை நீக்கி அதனை முடிவுக்கு கொண்டு வர பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.
பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் இன்று மாலை 4.20 அளவில் சிறப்பு விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தார்.
இளவரசர் சார்ள்ஸ் அவரது மனைவி கமிலா பாக்கர் ஆகியோருடன் 56 அரச பிரதிநிதிகளும் இலங்கை வந்துள்ளனர் என எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
1973 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சகல பொதுநலவாய நாடுகளின் மாநாடும் பிரித்தானிய மகா ராணி இரண்டாவது எலிச பெத் தலைமையிலேயே நடைபெற்றன. அவர் கலந்து கொள்ளாத முதல் மாநாடு கொழும்பில் நடைபெறும் மாநாடாகும்.
மூன்று நாள் அரச முறை பயணமாக இலங்கை வந்துள்ள இளவரசர் சார்ள்ஸ், பிரித்தானிய மகா ராணிக்கு பதிலாக பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதுடன் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தங்கியிருக்கும் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கண்டி, நுவரெலியா ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
அத்துடன் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளும் சில தலைவர்களை சந்திக்க உள்ள இளவரசர் முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.
அதேவேளை கொழும்பில் உள்ள தேசிய அரும்பொருட் காட்சியகம், பிரிட்டிஷ் கவுன்சில் ஆகியவற்றும் இளவரசர் தம்பதி விஜயம் செய்ய உள்ளது.
நெடுந்தீவின் விவசாய, சூழற் பாதிப்புக்கள் குறித்து அமைச்சர் பொ.ஐங்கரநேசன் களஆய்வு
நெடுந்தீவின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, நீர்ப்பாசனம், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் இவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் அறிந்து கொள்ளும் நோக்குடன் மேற்படி துறைகளுக்குப் பொறுப்பான வடக்கு மாகாண அமைச்சர் பொ.ஜங்கரநேசன் இன்று நெடுந்தீவில் பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்துக்
காமன்வெல்த் மாநாட்டுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசியின் வீடியொ செய்தியாளர் குழு, அங்கு படம்பிடிப்பதில் சிக்கல்களைச் சந்தித்துள்ளது.
மாநாட்டு வைபவத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை படம்பிடிக்க அவர்கள் அருகில் செல்ல முயல, இலங்கை அதிகாரிகள் எமது செய்தியாளர் குழுவை தடுத்துள்ளார்கள்.
எங்கள் ஊடக சுதந்திரத்தில் ஏன் தலையிடுகின்றீர்கள் என்று எமது செய்தியாளரான ஜேம்ஸ் றொபின்ஸ் திரும்பத் திரும்பக் கேட்டும் இலங்கை அதிகாரிகள் அவர்களை தடுத்துள்ளார்கள்.
இது குறித்த காணொளியை நேயர்கள் இங்கு காணலாம்.
இன்றைய மூன்றாம் நாள் போராட்டத்திலும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தாண்டி நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்..
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கஜதீபன், சித்தார்த்தன், ஆகியோரும் , பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செ.கஜேந்திரன் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்.
அதிமுக பிரமுகரை ஓட ஓட விரட்டி கொல்ல முயற்சி; அதிர வைக்கும் காட்சிகள் (வீடியோ இணைப்பு) |
பிரிட்டன் பிரதமர் கமருனுக்கு இலங்கை ஊடக அமைச்சர் கண்டனம்! நாட்டின் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது!– அரசாங்கம் [ பி.பி.சி ]
13 நவ., 2013
இசைப்பிரியாவின் காணொளி குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும்! தீபக் ஒப்ராய் வலியுறுத்து
சனல் - 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட இசைப்பிரியாவின் காணொளி தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும். என்று கனேடிய வெளிவிவகார அமைச்சு மற்றும் சர்வதேச மனித உரிமை விவகார நாடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய்
ஸ்ரீகொத்தாவிற்கு அருகில் பதற்றம்! ரணிலின் வாகனத்தின் மீது தாக்குதல்- படையினரே தாக்குதல் நடத்தினர்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவிற்கு அருகில் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு சூதாட்ட மையத்துடன் அமைச்சர்களின் மனைவியருக்கு உண்டான தொடர்பு அம்பலப்படுத்தப்பட வேண்டும்
அண்மையில் கொழும்பில் சுற்றி வளைக்கப்பட்ட சூதாட்ட மையத்துடன் அமைச்சர்களின் மனைவியருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இது தொடர்பில் அரசாங்கம் அம்பலப்படுத்தப்பட வேண்டுமென கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கோரியுள்ளது.
வடமாகாண உறுப்பினர் ரவிகரனுடன் கொழும்பு சென்ற மக்களை பலவந்தமாக திருப்பியனுப்பிய இராணுவம்
கொழும்பில் மனித உரிமை ஆர்வலர்கள் ஏற்பாட்டில் நடைபெற இருந்த மனித உரிமைகள் தொடர்பிலான கண்காட்சி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன், சென்றிருந்த காணாமல் போனோரின் உறவினர்கள் மதவாச்சியில் வைத்து தடுக்கப்பட்டு பலவந்தமாக
புலிகள் செய்த போர் குற்றங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்!- கெலும் மக்ரே
இலங்கை இராணுவத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர் குற்றங்கள் தொடர்பாக மட்டுமே விசாரணை நடத்த வேண்டும் என தாம் கூறவில்லை, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போர் குற்றங்கள் தொடர்பிலும் உடனடியாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என சனல் 4 தொலைக்காட்சியின்
பொலிஸ் முற்றுகையில் முள்ளிவாய்க்கால் முற்றம்! [ விகடன் ]
கொமன்வெல்த்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேறியது
கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். பெயரளவில் கூட இந்தியா கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு, தலைமைச் செயலக சட்டப்பேரவை மன்ற மண்டபத்தில் தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில், கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். பெயரளவில் கூட இந்தியா கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா.
அந்த தீர்மானத்ததில் உள்ள வாசகம் வருமாறு:-
இந்தக் கூட்டத்தில், கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். பெயரளவில் கூட இந்தியா கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா.
தலைவர் மற்றும் அதன் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தவிடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினரை கைது செய்ய நடவடிக்கை
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்ட, விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் முன்னணி உறுப்பினர் எனக் கூறப்படும் தம்பி அண்ணா என்பவரை கைது செய்வதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக
யாழ். வலி. வடக்கில் இராணுவம் குவிக்கப்பட்ட நிலையிலும் எமது போராட்டம் தொடர்ந்தது தொடரும்: சிறீதரன் பா.உ
வலி. வடக்கு பகுதியில் பாரிய இராணுவம் குவிக்கப்பட்ட நிலையிலும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டதுடன் எமது நில மீட்பு தொடர்பில் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் எமது தாயகமான வட-கிழக்கு பகுதியில் இன்று ஆரம்பமாகியுள்ளது இது தொடரும் என தமிழ்
12 நவ., 2013
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி புதுவையில் பந்த் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் ஸ்ரீதர் தலைமையில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இன்று காலை 11 மணிக்கு புதுவை ரெயில் நிலையத்துக்கு திரண்டு வந்தனர்.
குர்ஷித் இலங்கை பயணம்: ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம்: ஜெயலலிதா
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு, தலைமைச் செயலக சட்டப்பேரவை மன்ற மண்டபத்தில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில், காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். பெயரளவில் கூட
ஆளுநர் உரையினை பகிஸ்கரித்து விட்டு வெளியேறிய உறுப்பினர்கள் மூவரும் விருந்தினர் அறையினுள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.அங்கு கருத்து வெளியிட்ட அனந்தி சசிதரன் தான் ஏற்கனவே கூறியவாறு சந்திரசிறி ஒரு போர்க்குற்றவாளி.
அவர் யாழ்ப்பாணத்தினில் இராணுவத்தளபதியாகவிருந்த வேளையினிலேயே ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் காணாமல் போயிருந்தனர்.அதற்கு பதிலளிக்க வேண்டியவர்.
அவர் யாழ்ப்பாணத்தினில் இராணுவத்தளபதியாகவிருந்த வேளையினிலேயே ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் காணாமல் போயிருந்தனர்.அதற்கு பதிலளிக்க வேண்டியவர்.
அது தவிர இவரை இணைப்பாளராக நியமித்த வேளையினிலேயே வவுனியா தடுப்பு முகாம்களினிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வடிகட்டப்பட்டு காணாமல் போகவும் செய்யப்பட்டிருந்தனர்.நடந்து முடிந்த தேர்தலினில் இந்த மக்களது வாக்கினைப்பெற்றுத்தான நாம் வெற்றி பெற்றோம்.இனி மௌனமாக இருக்க முடியாதென தெரிவித்தார்.
தேர்தலினில் இந்த மக்களது வாக்கினைப்பெற்றுத்தான நாம் வெற்றி பெற்றோம்.இனி மௌனமாக இருக்க முடியாதென தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவது சட்டவிரோதமானதா?! குடிவரவுச் சட்டங்களை இலங்கை துஷ்பிரயோகம் செய்கிறது!- ஐதேக குற்றச்சாட்டு-BBC
இலங்கை அரசாங்கம் நாட்டின் குடிவரவுத்துறை சட்டங்களை தவறாகப் பயன்படுத்தியே தான் விரும்பாத சர்வதேச நபர்களை நாட்டிலிருந்து வெளியேற்றி வருவதாக இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டுகின்றது.
11 நவ., 2013
இராணுவத்தை அகற்றுவதில் மாற்றமில்லை! மாவீரர் நாளில் எமது செயற்பாட்டை யாரும் தடுக்க முடியாது: அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சூளுரை
இராணுவம் எமது நிலங்களில் இருந்து விலக முடியாது என்றாலும் நாம் வெளியேற்றுவதற்கு சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பதை யாரும் தடுக்க முடியாது. எமது விடுதலை வீரர்களாம் மாவீரர்களின் நாளில் எமது வடமாகண தேசிய மரநடுகையை யாரும் தடுக்க முடியாது என்கிறார் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்.
சுவிஸிலும் லண்டனிலும் மக்கள் முன் உறுதிபூண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள்
ஈழத்தமிழ் மக்களின் அடிப்படை அரசில் பெருவிருப்பின் ஜனநாயகப் போராட்ட வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராண்டாம் தவணை அரசவைக்கு தேர்வாக மக்கள் பிரதிநிதிகளின் அறிமுக நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்று வருகின்றன.
வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியின் உரையை எதிர்த்து அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம், சுகிர்தன் ஆகிய மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் சபையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று வட மாகாண சபையின் அமர்வு ஆரம்பித்த போது ஆளுநர் சந்திரசிறி
வடக்கு மாகாணசபையின் நாளைய பேரவை அமர்வில் சந்திரசிறீயின் உரையை புறக்கணிக்க அனந்தி சசிதரன் முடிவு
வடக்கு மாகாணசபையின் நாளைய பேரவை அமர்வின் போது இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ள ஆளுநர் சந்திரசிறியினது சிறப்புரையினை புறக்கணிக்க தான் முடிவு செய்திருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு அனந்தி தெரிவித்துள்ளார்.குடாநாட்டில்திட்டமிட்டசிங்களக்குடியேற்றத்திற்கதூபமிடப்படுகிறது-தர்மலிங்கம் சித்தார்த்தன்
உயர் பாதுகாப்பு வலயங்களாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை குடாநாட்டின் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் வகையில் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு பயன்படுத்த தூபமிடப்படுகின்றது.
இதனை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும் என புளொட் அமைப்பின் தலை
தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆஸி, நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுதலை

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லீ றியான்னொனும், நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் லொஜ்ஜியும் இலங்கையின் குடிவரவு சட்டங்களை மீறினார்கள்என குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்தியப் பிரதமரின் முடிவால் எமக்கு பாதிப்பு ஏற்படாது - ஜி.எல். பீரிஸ்

இலங்கை பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளாதது தமக்கு தோல்வி இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உலக அழகியாக வெனிசுலா நாட்டின் கேப்ரியேலா இஸ்லர் தேர்வு
62வது உலக அழகி போட்டியில், 25 வயதான ‘மிஸ் வெனிசுலா’ பட்டம் வென்ற கேப்ரியேலா இஸ்லர் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய அழகியாக தேர்வான மானசி மோகே உள்பட 86 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
வலி வடக்கு நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நாளை மறுதினம் கவனயீர்ப்பு போராட்டம்! - மாவை எம்.பி

வலி வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்தை தடுப்பது, அம் மக்களின் வாழ்விடங்களை அடாத்தாக இடித்தழிப்பது என்பவற்றைக் கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சோ சேனாதிராசா தலைமையில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)