புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2012


இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்‌ஷவின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயற்படும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை விசாரணை ஒன்றுக்கு ஆஜராகுமாறு அவசர அழைப்பாணை ஒன்றை அனுப்பிவைத்திருக்கின்றது.
கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகத்தில் நாளை சனிக்கிழமை ஆஜராகுமாறு இந்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியவந்திருக்கின்றது. கொழும்பிலுள்ள கஜேந்திரகுமாரின் இல்லத்தில் இந்த அழைப்பாணை நேற்று வியாழக்கிழமை மாலை கையளிக்கப்பட்ட
இலங்கை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரித்தானிய குடியுரிமை கொண்ட தமிழரை பிரித்தானிய சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போதே பிரித்தானிய குடியுரிமை கொண்ட தமிழரை பிரித்தானிய சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பில்; பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 

சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் தொடர்பில் சரியான தீர்வை முன்வைக்கத் தவறினால், மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளின் அல்லது அவர்களைப் பின்பற்றுபவர்களின் ஆட்சேர்ப்பு முகவராக மாறும் நிலை ஏற்படும். இவ்வாறு எச்சரித்துள்ளார் பி.பி.சி. முன்னாள் செய்தியாளர் பிரான்ஸிஸ் ஹரிசன்.

“தி ஏசியன் ஏஜ்” ஊடகத்துக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பாலியல் தேடலில் இலங்கையர்களுக்கு முதலிடம்
கூகுல் இணைய தளத்தில் பாலியல் தொடர்பான தேடலில் அதிகம் ஈடுபடுவோர் இலங்கையர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

"பிரபாகரன் படத்தை வைத்திருக்கவில்லை" ! ஹத்துருசிங்கவின் குற்றச்சாட்டை கைதாகியுள்ள மாணவர்கள் மறுப்பு
மாணவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை வைத்திருந்ததுடன், அந்த அமைப்பை மீண்டும் உருவாக்கும் வகையில் செயற்பட்டதாகவும் யாழ். இராணுவ தளபதி ஹத்துருசிங்க பீடாதிபதிகளிடம் கூறியிருந்த குற்றச்சாட்டை கைதாகியுள்ள மாணவர்கள் மறுத்துள்ளனர்.


‘கைய்ய கால உடைச்சுடுவேன்’
-ராமதாஸ் கூட்டத்தில் பத்திரிக்கையாளருக்கு மிரட்டல்

 

 சேலம் எல்.ஆர்.என் ஹோட்டல் அரங்கத்தில் ராமதாஸ் தலைமையில் 'அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை' ஆலோசனை கூட்டம் நடந்தது.  இதில் பல்வேறு அமைப்பினரும் பங்கேற்க செய்தி சேகரிக்கவும்,புகைப்படம் எடுக்கவும் பத்திரிக்கையாளர்கள் சென்றனர்.

மாணவி புனிதாவை கற்பழித்து கொன்ற ரவுடி சுப்பையா
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகள் புனிதா (வயது 13). பள்ளி மாணவியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரவுடி சுப்பையாவால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.


அழகிரி மகனிடம் 100 கேள்விகள் கேட்டுஅதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை 
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

27 டிச., 2012


வைகோவின் தலைமையில் எழுச்சிமிகு போராட்டம்


தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 12.12.2012 அன்று தமிழகத்தின் கடலோர கிராமங்களில் ஒன்றான உவரியில் இருந்து மதுரையை

பொலிஸ் மீது முன் நாள் இராணுவச் சிப்பாய் துப்பாக்கிச் சூடு: தானும் தற்கொலை செய்தார் 
காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் இராணுவப் படை சிப்பாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அறியப்படுகிறது. அரலகங்வில சிறிபுர பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ரி56 துப்பாக்கியைப்

புனர்வாழ்வுபெற்ற 28 முன்னாள் போராளிகள் வடமராட்சியில் கடந்த வாரம் மீண்டும் கைது! – பதற்றத்தில் உறவினர்கள்
யாழ். வடமராட்சி பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முன்னாள் போராளிகள் 28 பேர் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில்  கடல் கொந்தளிப்பாக இருக்கின்றது. அலையின் வேகமும் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். 
யாழ் கடலில் பரவலாக எல்லா இடங்களிலும் இத்தகையை கொந்தளிப்பு நிலை காணப்படுகின்றது கடந்த சில நாட்களாகவே யாழ் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகின்றது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 8 வருடங்கள் நிறைவடைந்துள்ளமையால் யாழ்ப்பாணத்தில் கரையோரங்களைச்சேர்ந்தவர்கள் கடலையே இன்றுக்காலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவுஸ்திரேலியா மெல்பர்ன் கிரிக்கட் மைதானத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் உணர்வார்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். யுத்தக் குற்றச் செயல்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், அரசாங்கத்திற்கும் எதிராக ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டோர் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் மஹகெலேகம சுதர்சனாராம விகாரையைச் சேர்ந்த பிக்குவை அடுத்தமாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 15 வயதான சிறுமியை மருத்துவ பரிசோதனைக்குட்பட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர், விலகி கொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதியை வற்புறுத்துமாறு கனேடிய சட்டத்தரணிகள் சங்கம், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜோன் பேயார்ட்டிடன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
டிசம்பர் 21 ஆம் திகதி கனேடிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அரச சட்டத்தரணி ரொபர்ட் சீ. பிரவுண் வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இறந்த உறவுகளுக்காக தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 
இறந்த உறவுகளுக்காக தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பட்டதாரி பயிலுனர்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்வதற்கான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

தமிழர்களும், முஸ்லிம்களும் தங்களுக்கு என்று சொந்த தலைநகரங்களை வடக்கிலும், கிழக்கிலும் உருவாக்கி கொள்ள வேண்டும் என்று இவர்கள் சொல்கிறார்களா? தமிழர்கள் கைவிட்டு விட்ட, முஸ்லிம்கள் நினைத்து பார்த்திராத பிரிவினை பாதையை இவர்கள் இன்று தூண்டிவிடுகிறார்களா?
எந்த ஒரு நாட்டிலும் அந்நாட்டின் தலைநகரம், அந்நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களுக்கும் பொதுவானது. நாட்டின் தலைநகரில் தமிழ் பேசும் மக்கள் வாழ்வதை இனவாத கண்ணோட்டத்துடன் பார்க்கின்றவர்கள் சொல்ல வருவதுதான்  என்ன? தமிழர்களும், முஸ்லிம்களும் தங்களுக்கு என்று சொந்த தலைநகரங்களை

             து ஒரு விலை மதிக்க முடியாத கைதாகத்தான் இருக் கும் என்பது அரசாங்கத்தின் கணக்காக இருந்தது. கிரானைட் மோசடி வழக்கிற்குள்ளான துரை தயாநிதிதான் தேடப்பட்டவர். தி.மு.க.வின் தலைமைக் குடும் பத்தின் உறுப்பினர். மத்திய அமைச்சரின் மகன். மதுரையின் செல்வாக்கான புள்ளி. அதனால் இந்த வழக்கு, மீடியாக்களின் கவனத்திற்குரியதாக இருந்தது. போலீஸில் சிக்காமல் 127 நாட்கள் தலைமறைவாக இருந்து, நீண்ட சட்டப் போராட்டத் திற்குப் பிறகு முன்ஜாமீன் பெற்றி ருக்கிறார் துரை தயாநிதி.நன்றி  நக்கீரன்

ஏன் இந்த குற்ற உணர்ச்சி? ஏன் இந்த தலைமறைவு? எங்கே பதுங்கியிருந்தார்? எல்லாக் கேள்விகளுக்கும் நக்கீரனிடம் தான் முதன்முதலாக மனம் திறந்தார் துரை தயாநிதி.

நக்கீரன் : உங்கள் மீது வழக்குப் பாய்ந்ததும் என்ன மனநிலைக்கு ஆளானீர்கள், சொல்லுங்கள்?

துரை தயாநிதி : அதுதான் ஊர் உலகத்துக்கே தெரியுமே. என் மீது போடப்பட்டது பொய் வழக்கு. அந்த ஒலிம்பஸ் கம் பெனியிலிருந்து 2008-ஆம் ஆண்டே விலகிவிட்டேன். அது போக நான் அப்ப இருந்த சினிமா பிஸியில், இந்த கம் பெனியில் எனக்கு என்ன நடக் குது என்றுகூட



          ""ஹலோ தலைவரே...…அது நடந்து ஒரு வருசம் ஓடிப்போச்சி. அதுக்கப்புறம் என்னென்னவோ நடந்து போயிடிச்சி.''

           நூலிழையில் "தல' தப்பிய அந்த படக் காட்சிகளைப் பார்த்தவர்கள் பதைபதைத்துப் போயிருக்கிறார்கள்.

"பைக் ரேஸ், கார் ரேஸ் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வது... உங்களின் துணிச்சலைக் காட்டலாம். ஆனால் உங்களை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதனால் இப்படிப்பட்ட "ரிஸ்க்'கை இனிமேல் எடுக்காதீர்கள்' என தயாரிப்பாளர் கேயார் ஒருமுறை சொன்னபோது...

ad

ad