![]() அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அமெரிக்க படைத்தளம் மீது புதிய தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரான் நாட்டின் முக்கிய துறைமுக நகரான பந்தர் அப்பாஸில் அமைந்துள்ள இராணுவ தளம் மீது நேற்று அதிகாலை வான்வழித் தாக்குதலை அமெரிக்க ராணுவம் நடத்தியது. அமெரிக்காவின் தாக்குதலில் பந்தர் அப்பாஸ் நகரில் அமைந்துள்ள ஈரானின் தரைக்கட்டுப்பாடு மையம் தான் முதன்மை இலக்காக இருந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தகவல் பகிர்ந்துள்ளார். |
-
29 மே, 2026
பந்தர் அப்பாஸ் நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்: அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த பதிலடி! [Friday 2026-05-29 07:00]
பருத்தித்துறையில் 2 படகுகளுடன் 4 மீனவர்களைக் காணவில்லை! [Friday 2026-05-29 09:00]
![]() பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ள நிலையில் அதில் சென்ற தந்தை, மகன் உள்ளிட்ட மீனவர்கள் நால்வர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். |
"தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்" - புஸ்ஸி ஆனந்த்! [Thursday 2026-05-28 16:00]
புதிதாக தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம் என்று அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் உறுதி தெரிவித்துள்ளார். தவெகவில் புதிதாக இணைபவர்களிடம் எந்த பாகுபாட்டையும் காட்ட மாட்டோம் என்று கூறிய புஸ்ஸி ஆனந்த், தவெகவினர் புதியவர்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு பின் தவெக விஸ்வரூபம் எடுத்துள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை பிடித்துள்ளதோடு, அக்கட்சியின் கட்டமைப்பையும் வலுப்படுத்தி வருகிறது. ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த 4 சிட்டிங் எம்எல்ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் ஐக்கியமாகி இருக்கின்றனர். |
"29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது" - மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி! [Friday 2026-05-29 07:00]
அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவ்ர்கள் பழைய பொறுப்புகளை கொண்டு விளம்பரப்படுத்தி கொள்ள கூடாது என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலமாக எஸ்பி வேலுமணி, அன்பழகன், காமராஜ் உள்ளிட்டோருக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்படாது என்பதை மறைமுகமாக எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதாக பார்க்கப்படுகிறது. சட்டசபைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அதிமுக இழந்த நிலையில், அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. |
27 மே, 2026
நீதிமன்றில் தனியாக நின்ற பாதிக்கப்பட்ட சிறுமி! சந்தேகநபரான தேரருக்காக 20 சட்டத்தரணிகள்..
26 மே, 2026
'மூடிய அறை' சந்திப்புக்களில் கலந்து கொள்ளமாட்டோம்! [Tuesday 2026-05-26 06:00]
![]() தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராயும் கலந்துரையாடல்களைப் பொறுத்தமட்டில் 'மூடிய அறை' சந்திப்புக்களில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் சட்டத்தரணிகள் பேரவை உறுப்பினர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற சந்திப்பு வேளையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். |
தவெகவில் புதிய அதிகார மையம்: கூடுதல் பவரோடு ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த்! [Tuesday 2026-05-26 16:00]
![]() கடந்த வாரம் முதல்வராக விஜய் பதவியேற்ற போது பதவியேற்பு விழாவிற்குப் பிறகு உரையாற்றிய விஜய், ஆட்சியில் 'பவர் சென்டர்' (Power Center) என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார். "இந்த ஆட்சியில் எனக்குத் தெரியாமல் எந்த ஒரு நகர்வும் இருக்காது. திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் நானே இறுதி முடிவெடுப்பேன். என்னை மீறி யாரும் இங்கே அதிகாரத்தைச் செலுத்த முடியாது" என்று அவர் கூறியது அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நான் மட்டுமே பவர் சென்டர் என்ற தொனியில் ஆட்சி தொடங்கப்பட்ட நாளில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரக்கப் பேசினார். |
அதிமுக எம்எல்ஏ ராஜினாமா: சபாநாயகர் ஏற்க மறுத்தது ஏன்? [Tuesday 2026-05-26 16:00]
![]() அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்த பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். ராஜினாமா கடிதத்தை ஏற்ற சபாநாயகரை 3 தொகுதிகளை காலி தொகுதிகளாக அறிவித்தார். |
ஆபரேஷன் 12’ - நம்பி வந்தவர்களை கழற்றிவிடப்போகும் விஜய்? [Tuesday 2026-05-26 07:00]
![]() தமிழக அரசியல் களம்ஒரு மிகப்பெரிய அதிரடித் திருப்பத்தைக் கண்டுள்ளது. 107 இடங்களை வென்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த மே 10-ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆனால், 118 என்ற பெரும்பான்மை மேஜிக் நம்பரைத் தொட முடியாததால், காங்கிரஸ் (5 எம்.எல்.ஏ-க்கள்), விசிக, சிபிஎம், சிபிஐ மற்றும் ஐயுஎம்எல் போன்ற கூட்டணிக் கட்சிகளின் தயவோடுதான் தவெக அரசு அரியணையில் அமர்ந்தது |
மூன்றாக உடைந்த அதிமுக.. பலம் பெறும் தவெக! வேலுமணி தரப்பின் நிலை என்ன?
வித்யா கொலை குற்றவாளி உயிர் மாய்ப்பு விவகாரம்! இறுதி சடங்கு அரச செலவில் முன்னெடுப்பு
கிளிநொச்சி விபத்தில் இளம் தாய் பலி! [Monday 2026-05-25 15:00]
![]() கிளிநொச்சி - கரடிபோக்கு, உருத்திரபுரம் வீதியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். |
25 மே, 2026
திருவண்ணாமலை சிறுமிக்கு ஓடும் லாரியில் நடந்த கொடூரம்! [Sunday 2026-05-24 16:00]
![]() திருவண்ணாமலையை சேர்ந்த சிறுமியை ஓடும் லாரியில் மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த டிரைவர் மற்றும் கிளீனர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆற்காடில் இருந்து பெங்களூர் செல்லும் வரை சிறுமியை பலாத்காரம் செய்து இருக்கிறார்கள். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். ஓடும் லாரியில் வைத்து 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வந்தவாசி அருகே தர்காவிற்கு வந்த 14 வயது சிறுமியை இரண்டு பேர் ஆசை வார்த்தை கூறி ஓடும் லாரியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கணவன் மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது |
24 மே, 2026
கொழும்பில் ஒருவரைக் கடத்தி 2 கிலோ தங்கம் கொள்ளை- பொலிஸ் அதிகாரி கைது! [Sunday 2026-05-24 16:00]
![]() கொழும்பில் நபர் ஒருவரைத் கடத்தி, அவரிடமிருந்து 2 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். |
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் இல்லை! [Sunday 2026-05-24 16:00]
![]() இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, அனர்த்த நிவாரணப் பணிகளுக்காகச் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் |
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்த பல தகவல்கள் அம்பலம்! [Sunday 2026-05-24 16:00]
![]() உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் விசாரணைகளில் பல தகவல்கள் அம்பலமாகி வருகின்றன. தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் நெருங்கிய சகாவாக முன்னதாக செயற்பட்ட, அசத் மௌலானா வழங்கிய 95 பக்கங்கள் அடங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. |
இந்துக்களின் போர்' சமநிலையில்! [Sunday 2026-05-24 08:00]
![]() மானிப்பாய் இந்து கல்லூரிக்கும், சாவகச்சேரி இந்து கல்லூரிக்கும் இடையிலான 'இந்துக்களின் போர்' துடுப்பாட்டப் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. |











