-
23 ஜூலை, 2026
குமாரசாமி மகேந்திரன் pungs 3

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 413 வட்டக்கச்சி இராமநாதபுரம் கிளிநொச்சியை வதிவிடமாகவும், இல. 42, வைரவ கோயில், வைரவபுளியங்குளம் வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி மகேந்திரன் அவர்கள் 18-07-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், குமாரசாமி நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இரத்தினம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாஜினி, சுபாஸ்கரன், லதாஜினி, தனிஸ்கரன், தபோஜினி(ஜேர்மனி), ரூபாயினி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்கினேஸ்வரன்(நாதன்), பிரசாந்தி, சுதாகரன், வதனா, கஜேந்திரன்(ஜேர்மனி), பிரதீபன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கணேசலிங்கம், சறோஜினிதேவி, சிவோஜினி(வட்டக்கச்சி), காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், பாலச்சந்திரன், சிவனேசன் மற்றும் தபோநிதி, ஈசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனேஸ்வரி, தண்டாயுதபாணி, காலஞ்சென்ற கருணாநிதி, பாலசிங்கம், காந்திமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான மங்கையக்கரசி, தெய்வேந்திரன், சாரதாதேவி, புஸ்பராணி, தயாபரன் மற்றும் தங்கராசா(கிளிநொச்சி), சிவயோகம்(வவுனியா), சிவமலர்தேவி(லண்டன்), விஜயராணி(கனடா), இந்திராணி(கனடா), சந்திரபாலன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவ்வியா, திவ்வியன், சரூன், யஸ்வினி, யனிசா, யஸ்விகா, டிலக்சன், நிக்சன், லதுசன், ஆருசன், ஆருசா, தவிசா(ஜேர்மனி), அனிக்கா, அத்விகா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேப்பங்குளம், தெட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Mobile : +94771984316
- Mobile : +94772487055
- Mobile : +4917624742499
கண்ணீர் அஞ்சலிகள்
| இன்று 11 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு! [Wednesday 2026-07-22 18:00] |
![]() செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 40 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 40 ஆவது நாளான இன்று, 04 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது |
| செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை கோரி கவனயீர்ப்பு போராட்டம்! [Wednesday 2026-07-22 18:00] |
![]() செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் உடனடி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (22) காலை செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. |
| உள்ளத்தால் ஏற்கின்றேன்- நான் உறுதிமொழி தரமுடியாது! [Wednesday 2026-07-22 18:00] |
![]() நீங்கள் தந்தது வெறும் காகிதம் அல்ல என்பது எமக்கு தெரியும் இதனை எனது உள்ளத்தால் ஏற்கின்றேன் நான் உறுதி மொழிதரமுடியாது ஆனால் என்னால் உங்களின்துன்ப துயரங்களை அறிவோம் உங்கள் பிரச்சினைகளை என்னால் முடிந்தவரையும் ஐ.நா சபையிலும், மனித உரிமைகளை பேணம் நாடுகளிடமும் உங்கள் பிரச்சினையை எடுத்து கூறுவோம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் தலையையிலான குழுவினர் எடுத்ரைத்துள்ளனர். |
21 ஜூலை, 2026
www.pungudutivuswiss.com
| மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது! [Monday 2026-07-20 19:00] |
![]() இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விதந்துரைக்கப்படுவதற்கு ஆர்வம் உள்ள தனிநபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண்ணப்பங்களைக் கோரியுள்ளது |
| செம்மணிப் புதைகுழியில் இன்றும் 8 என்புக்கூடுகள் அடையாளம்! [Monday 2026-07-20 19:00] |
![]() செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது. இதன்போது, புதிதாக சிறுவர்கள் இருவருடைய என்புக்கூடுகள் உட்பட 08 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 06 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது |
19 ஜூலை, 2026
| போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை பரிமாறிக் கொண்ட உக்ரைன் -ரஷ்யா! [Saturday 2026-07-18 07:00] |
![]() போரில் உயிரிழந்த வீரர்களின் உடலை உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பரிமாற்றம் செய்து கொண்டுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போர் நடவடிக்கையில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை இருநாடுகளும் அவ்வப்போது பரிமாறிக் கொள்ளும் நிலையில், தற்போது மீண்டும் ஒருமுறை போர்க்களத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை இருநாடுகளும் முறைப்படி பரிமாறிக் கொண்டுள்ளனர். |
18 ஜூலை, 2026
| சுமந்திரன் பிரதம விருந்தினரா? - சுழிபுரம் விக்டோரியா கல்லூரி பழைய மாணவர்கள் எதிர்ப்புப் போராட்டம்! [Saturday 2026-07-18 20:00] |
![]() சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் நடைபெறும் நடைபவனியில் எம்.ஏ.சுமந்திரன் விருந்தினராக கலந்துகொள்ள மாட்டார் என பாடசாலை அதிபர் சுலபாமதி தெரிவித்துள்ளார். |
| செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ள ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள்! [Saturday 2026-07-18 20:00] |
![]() யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியைப் பார்வையிட நான்கு ஐரோப்பிய நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் தூதுவர்கள் குழு இலங்கை வருகை தரவுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் தூதுவர்களே செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| சங்கு கூட்டணி- தமிழரசு தலைவர்கள் சந்திப்பு! [Saturday 2026-07-18 20:00] |
![]() இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. |
| செம்மணிப் புதைகுழியில் இன்றும் 6 என்புக்கூடுகள் அடையாளம்! [Saturday 2026-07-18 20:00] |
![]() செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று நடைபெற்றன. இன்றைய தினம் (18) புதிதாக ஒரு பெரியவரின் என்புக்கூட்டுடன் சிறியவர் ஒருவரின் என்புக்கூடும் உள்ளடங்கலாக 6 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. |
| TGTE Condemns Deployment of Sri Lankan Security Forces to Haiti Calls on the United Nations to Apply Its Human Rights Due Diligence Policy [Friday 2026-07-17 16:00] |
![]() The Transnational Government of Tamil Eelam (TGTE) today expressed its profound concern and unequivocal opposition to the deployment of 1,132 Sri Lankan military and police personnel to Haiti as part of the United Nations-authorized Multinational Security Support (MSS) mission. |
| பிரதி அமைச்சர், ஆளும்கட்சி எம்.பிக்கு பிடியாணை! [Friday 2026-07-17 16:00] |
![]() நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை மேலதிக நீதவான் கிங்ஸ்லி ஹெட்டியாராச்சி இன்று (17) உத்தரவிட்டுள்ளார் |
17 ஜூலை, 2026
| சவப்பெட்டிக்குள் டொனால்ட் ட்ரம்ப்: உலகை அதிர வைத்த ஈரான்! [Friday 2026-07-17 16:00] |
![]() அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தை ஜனாதிபதி ட்ரம்ப் ரத்து செய்ததுடன் மீண்டும் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. |

.jpg)












