![]() 2011 ஆம் ஆண்டில் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்களும் காணாமல் போனமை தொடர்பில் அவர்களது உறவினர்களால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு வழக்கிற்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று இரண்டாவது நாளாகவும் சாட்சியமளித்தார். |
-
28 நவ., 2026
நீதிமன்றில் கோட்டாவிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் பதில்களும்! [Saturday 2026-11-28 08:00]
லலித்- குகன் வழக்கு- கோட்டாவிடம் பெப்ரவரி 12இல் மீண்டும் விசாரணை! [Friday 2026-11-27 19:00]
![]() 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மேலதிக சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதியை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று நிர்ணயித்துள்ளது. |
சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல்! Top News [Friday 2026-11-27 19:00]
![]() மூதூர் கிழக்கு, சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன |
கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள்! Top News [Friday 2026-11-27 19:00]
![]() கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாலை மாவீரர் நாளை முன்னிட்டு பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன் அதையடுத்து ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது |
யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள்! Top News [Friday 2026-11-27 19:00]
![]() யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்த நிகழ்வானது பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் தூபியில் நடைபெற்றது. |
கண்ணீரால் நனைந்த கனகபுரம் துயிலுமில்லம் [Friday 2026-11-27 19:00]
![]() கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாவீரர் நாள் பிரதான நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. |
26 நவ., 2026
நெடுந்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள்! [Thursday 2026-11-26 17:00]
![]() யாழ்ப்பாணம், நெடுந்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன |
அபாயகரமான வகையில் அட்லாண்டிக் கடலில் புலம்பெயர்வோர் படகுகள்
Swiss NGO spots migrant boats in Atlantic: அபாயகரமான வகையில் அட்லாண்டிக் கடலில் பயணிக்கும் புலம்பெயர்வோர் படகுகளைக் கண்டதாக சுவிஸ் தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
சுவிஸ் தொண்டு நிறுவனம் ஒன்று, அட்லாண்டிக் கடலில் அபாயகரமான வகையில் புலம்பெயர்வோர் பயணிப்பதைக் கண்டதாக தெரிவித்துள்ளது.
அபாயகரமான வகையில் புலம்பெயர்வோர் படகுகள்
பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் Humanitarian Pilots Initiative (HPI) என்னும் சுவிஸ் தொண்டு நிறுவனம், புலம்பெயர்வோர் கடலில் படகுகளில் பயணிப்பதை விமானங்கள் மூலம் கண்காணித்து, அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், அது குறித்து மீட்புக் குழுக்களுக்கு தகவலளிப்பது முதலான பல்வேறு விடயங்களைச் செய்துவருகிறது.

இந்நிலையில், நேற்று, புலம்பெயர்வோர் பயணிக்கும் ஐந்து படகுகள், அபாயகரமான வகையில் அட்லாண்டிக் பெருங்கடலில் பயணிப்பதைக் கண்டதாக HPI தெரிவித்துள்ளது.
அவற்றில் ஒரு படகில் தண்ணீர் ஏறியிருக்க, படகிலிருந்தோர், அந்த தண்ணீரை வெளியேற்றிக்கொண்டிருந்ததைக் கண்டதாக HPI அமைப்பினர் தெரிவித்துள்ளார்கள்.
அதேபோல, மற்றொரு படகில் எக்கச்சக்கமானவர்கள் பயணித்ததால், அவர்களுக்கு உட்காரக்கூட இடமில்லாமல், நின்றபடி பயணிக்கும் காட்சிகளைக் கண்டதாகவும், HPI தெரிவித்துள்ளது.
இப்படி நின்றபடி பயணிக்கும்போது, தவறி கடலில் விழும் அபாயம் அதிகம்.
இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து, இதுவரை இப்படி படகுகளில் பயணித்தவர்களில் 850க்கும் மேற்பட்டவர்கள் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக HPI தெரிவிக்கிறது.
HPI அமைப்பு, அந்த படகுகளைக் கண்ட இடம், மேற்கு ஆப்பிரிக்காவுக்கும் கேனரி தீவுகளுக்கும் இடையில் உள்ள இடமாகும்.
இந்த கேனரி தீவுகளுக்குத்தான் இந்த மாதத்தின் முதல் பாதியில் 11,000க்கும் மேற்பட்டவர்கள் சென்றடைந்த விடயம் தலைப்புச் செய்தியானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடக அடக்குமுறை வேண்டாம்! [Thursday 2026-11-26 06:00]
![]() ஊடகங்களுக்கு அரச ஒழுங்குமுறைப்படுத்தல் பொருத்தமானதல்ல; சுய ஒழுங்குமுறைப்படுத்தல் மட்டுமே முக்கியமானது. எனவே, ஊடக அடக்குமுறை பொருத்தமற்றது என்பதால் அவ்வாறான செயல்களைச் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். |
திருகோணமலையை ஊடறுக்கப் போகும் கானி புயல்! [Thursday 2026-11-26 06:00]
![]() மலேசியாவின் பிந்துலு(Bintulu) பகுதிக்கு வடக்காக ஒரு காற்றுச் சுழற்சி புதன்கிழமை (25.11.2026) உருவாகியுள்ளது. இது வெள்ளிக்கிழமை (27.11.2026) மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து அந்தமான் தீவுகளுக்கு தெற்காக நகரும். அதன்பின் மத்திய வங்காள விரிகுடாவிற்கு வரும்போது அது புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு மாலைதீவு இட்ட 'கானி( Kaani)' என்ற பெயர் வழங்கப்படும் |
கைதடி வைத்தியசாலைக்கான புலம்பெயர் நிதியை தடுக்கிறது அரசாங்கம்! [Thursday 2026-11-26 06:00]
![]() “எம்மிடம் பிரதேச வேறுபாடு இல்லை, இனவாதமில்லை என்று குறிப்பிட்டுக்கொண்டு, இந்த அரசாங்கமும் தமிழ் மக்களையும் தமிழ் பிரதேசங்களையும் புறக்கணிக்கிறது எனத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். |
25 நவ., 2026
தீபத்தூண் மோதலில் திணறும் தவெக அரசு!
[Wednesday 2026-11-25 15:00] |
![]() மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தின் பரபரப்பு இன்னும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.. இந்த பரபரப்பு இந்த ஆண்டுடன் முடிந்துவிடுமா? அடுத்த கார்த்திகை தீபத்தின்போதும் இதே பிரச்சினை வருமா? இந்த வருடம் மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான நிலை என்ன என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இங்கே சுருக்கமாக ஆராய்வோம்..!! ஒருபக்கம் நீதிமன்றத்தில் தொடரும் வழக்கு, இன்னொரு பக்கம் கோயில் நிர்வாகத்தின் நிலைப்பாடு. இதற்கிடையே சட்டப்பேரவையில் மெஜாரிட்டி தொடர்பான ஆதரவு கணக்குகளையும் கவனிக்க வேண்டிய நிலையில் விஜய் தலைமையிலான தவெக அரசு இருக்கிறது. |
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: தமிழக அரசு எதிர்கொள்ள இருக்கும் பெரிய நெருக்கடி! [Wednesday 2026-11-25 07:00
[Wednesday 2026-11-25 07:00] |
![]() திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்புகள் கோரிய தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இப்படி இருக்கையில் தமிழக அரசு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள இருக்கிறது என வலதுசாரி அமைப்புகள் எச்சரித்துள்ளன. 150 ஆண்டுகளுக்கும் மேல் வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் தூணில்தான் நேற்றும் தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால், இந்து அமைப்புகள் கோரிய தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவாகும். |
சுரேஷ் சலேயும், அசாத் மௌலானாவும் ஒரே ஹோட்டலில் தங்கிய ஆதாரம் சிக்கியது!
[Wednesday 2026-11-25 17:00] |
![]() உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் முக்கிய சந்தேகநபரான சுரேஷ் சலேயும், பிள்ளையானின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானாவும்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது |
வன்னியில் வனவளத் திணைக்களத்தினால் மக்களின் காணிகள் அபகரிப்பு!
[Wednesday 2026-11-25 17:00] |
![]() வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களால் வன்னியில் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார் |
பயணத்தடையை நீக்க கோரிய கோட்டாவின் மனு நிராகரிப்பு!
[Wednesday 2026-11-25 17:00] |
![]() உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையைக் கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று நிராகரித்துள்ளார் |
ரஷ்ய ஆண்களின் ஒரு தலைமுறையையே அழிக்கும் உக்ரைன் போர்! [Tuesday 2026-11-24 16:00]
![]() போர் நீடிக்க நீடிக்க, உயிரிழப்புகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொடுத்துள்ள போர், ரஷ்ய ஆண்களின் ஒரு தலைமுறையையே அழித்துக்கொண்டிருப்பதாகவே கூறப்படுகிறது. உக்ரைன் போர், ரஷ்யாவின் மக்கள் தொகை சரிவைத் தடுப்பதற்காக புடின் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கே ஊறு விளைவிப்பதாக அமைந்துள்ளது. வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், பிப்ரவரி 2022 மற்றும் செப்டம்பர் 2026 இல் ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்திற்கு இடையிலான போரின் காரணமாக குறைந்தது 490,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் |
சுவிட்சர்லாந்துக்கு வடகொரியா விடுத்துள்ள மிரட்டல்! [Tuesday 2026-11-24 16:00]
![]() வடகொரியாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட சுவிஸ் தூதரக அலுவலகத்தை மூடிவிடுவோம் என வடகொரிய தரப்பு மிரட்டியுள்ளது. வடகொரியாவில் சமீபத்தில்தான் சுவிஸ் தூதரக அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டது. இந்நிலையில், அதை மூடிவிடுவோம் என வடகொரிய ஜனாதிபதியின் சகோதரி மிரட்டல் விடுத்துள்ளார். இம்மாதம், அதாவது, நவம்பர் மாதம் 4ஆம் திகதி, வடகொரியாவிலுள்ள Wonsan நகரில் முகாம் ஒன்று நடத்தப்பட்டது. |
தையிட்டி சட்டவிரோத விகாரை காணிகளை மீளக் கையளிக்க கோரி போராட்டம்! [Tuesday 2026-11-24 20:00]
![]() தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (24) இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். |


.jpg)
.jpg)
.jpg)
.jpg)














