தி மு க, தே ,தி மு க கூட்டணிக்கு சாத்தியமான கலைஞரின் பேட்டி
நடப்பது ரம்மி ஆட்டம். எதிரில் 5 சீட்டுகள் இருக்கின்றன. தேவைப்படுவது ஒற்றை சீட்டுதான். எதை எடுத்தால், டிக் அடிக்கலாம் என்கிற அனுமானம்தான் இப்போது மிக முக்கியம். இப்படிச் சொல்பவர்கள் தே.மு.தி.க நிர்வாகிகள். நாடாளுமன்றத் தேர்தலைத்தான் அவர்கள் ரம்மி ஆட்டம் என்கிறார்கள். அவர்களின் தலைவர் விஜயகாந்த்துக்கு முன்பாக இருக்கும் அந்த 5 வாய்ப்புகள்… 1. எம்.பி. தேர்தலைப் புறக்கணிப்பது. 2. தனித்துப் போட்டியிடுவது. 3. காங்கிரசுடன் கூட்டணி. 4. பா.ஜ.க.வுடன் கூட்டணி. 5. தி.மு.கவுடன் கூட்டணி. இந்த ஐந்தில் ஒன்றை அவர் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்றும், அதனால்தான் கிறிஸ்துமஸ் விழாவில் பேசும்போது, "அ.தி.மு.கவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பேன்' என்று விஜயகாந்த் பேசினார் என்றும் தே.மு. தி.கவினர் சொல்கிறார்கள். இதற்குக் காரணம், தே.மு.தி.கவின் கதையை முடிப்பது என்பதில் அதிதீவிரமாக இருக்கும் ஜெ.வின் நடவடிக்கைகளைத் தடுத்து, தனது கட்சியைக் காப்பாற்ற வேண்டிய சூழலில் விஜயகாந்த் இருப்பதையும் தே.மு.தி.க. நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
-
26 டிச., 2013
பூநகரி வலைப்பாட்டில் இராணுவம் வெறியாட்டம்! இந்தியப்பிரஜை கைது, சிறீதரன் எம்பி உள்ளிட்ட மூவர் 6 மணித்தியாலங்களாக தடுக்கப்பட்டு விடுவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை உள்ளிட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் முழங்காவில் பிரதேசத்தில் இருக்கின்ற பொன்னாவெளி,வேரவில்,வலைப்பாடு ஆகிய கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்கென
சிறீதரன் எம்.பி கைது செய்யப்பட்டு 6 மணித்தியால விசாரணையின் பின் விடுதலை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை ஆகியோர் கிளிநொச்சி- கிராஞ்சி கிராமத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டு மாலை 5 மணியளவில் விடுதலை செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
25 டிச., 2013
கபொத உயர்த்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள் - ஜனாதிபதி சந்திப்பு
கல்வி பொதுத் தராதர உயர்த்தரப் பரீட்சையில் அதிக் கூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அண்மையில் அலரி மாளிகையில் சந்தித்தனர்.மாணவர்களை அன்புடன் வரவேற்ற ஜனாதிபதி எதிர்கால கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க ஆசி வழங்கினார்.
எதிர்க்கட்சியில் அமரவும் தயங்கமாட்டோம்! – அரசாங்கத்தை எச்சரிக்கிறது ஹெல உறுமய
மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற முடியும் என்றால் எதிர்க்கட்சியில் அமரத் தயார் என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை
வடமாகாண செயலருக்கு கொலை அச்சுறுத்தல்; வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு
வடமாகாண பிரதான செயலாளர் ரமேஷ் விஜயலட்சுமிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரிசிறி தெரிவித்துள்ளார்.
நாமே கிழக்கை கைப்பற்றினோம் என்கிறார் ரணில் விக்கிரமசிங்க
ராஜபக்ச அரசாங்கம் விடுதலைப் புலிகளைத் தனியே வன்னியில் இருந்து மட்டுமே அழித்ததே தவிர, அவர்களை கிழக்கில் இருந்து விரட்டி, கடற்புலிகளின் முதுகெலும்பை முறித்தது தாமே என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சுவிஸில் ரகசிய கமெராவில் பெண்களை படமெடுத்த பொலிஸ் ஊழியரின் அயோக்கிய செயல் அம்பலமாகியுள்ளது.
சுவிஸில் பேர்ண் எம்மேந்தால் பிராந்திய பகுதியில் அமைந்திருக்கும் வாசன்(3457 Wasen ) நகரில் இருக்கும் உடற்பயிற்சி மையம் ஒன்றில் உடைமாற்றும் அறையிலும், குளியலறையிலும் ரகசிய கமெராக்கள் பொருத்தப்பட்டு படமாக்கப்பட்டது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது என பல ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்பதுடன் இதனூடாக நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதனால் அக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கு பற்றாது என்று கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.இந்த விசேட கூட்டத்தின் போது, வடக்கு கிழக்கில் இடம்பெறும் பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.காணி அபகரிப்பு, இராணுவம், பெண்கள் விவகாரம் குறித்து பல விடயங்கள் பரிமாறப்பட்டன.
இதேவேளை ஜனாதிபதியினால் அண்மையில் விடுக்கப்பட்ட அழைப்பு குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. தற்போது அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என தெரிவிக்கப்பட்டதன் அடிப்டையில் இதன் மூலம் நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதே அனைவரது கருத்தாகவும் இருந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)