புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2012


யுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மிக சுலபமாக கொள்வனவு செய்தனர்!- சவேந்திர சில்வா
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகச் சுலபமாக ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்களமயமாக்கும் அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் பதிலடி கொடுக்க இத்தேர்தல் நல்ல வாய்ப்பு: ஸ்ரீகாந்தா
வடக்கும் கிழக்கும் இணைந்ததுதான் தமிழரின் தாயகம்.  இதில் ஒரு சதுர அங்குல நிலத்தைக் கூட சிங்கள மயமாக்குவதற்கு நாங்கள் தயாரில்லை என்பதை நாங்கள் இந்த தேர்தலிலே எடுத்துக் காட்டவேண்டும் என யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஸ்ரீகாந்தா

1 செப்., 2012

இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடந்த போராட்டத்திற்கு மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநில துணை செயலாளர் மகேந்திரன், நிர்வாகிகள்


நடிகர் கவுண்டமணி தாயார் காலமானார்
 நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் தாயார் காளியம்மாள் (87) உடல்நலக் குறைவு காரணமாக உடுமலைப்பேட்டையில் நேற்று காலமானார்.


காளியம்மாள் வீட்டில் நடிகர் விஜய்யின் வேலாயுதம் படப்பிடிப்பு நடந்தபோது எடுத்த படம்

காளியம்மாள், உடுமலைப்பேட்டையில் தனது மகளுடன் வசித்து வந்தார். கடந்த மாதம் மாடிப் படியில் ஏறும்போது தவறி விழுந்ததில் அவருடைய காலில் கடுமையான காயம் ஏற்பட்டது.  அதற்காக வீட்டில் இருந்தவாறே சிகிச்சை மேற்கொண்டு வந்தார். 
இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு அவர் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு உடுமலைப்பேட்டையில் இன்று மாலை நடைபெறுகிறது.


இராணுவத்திடம் சிக்கிய கிளிநொச்சி முருகன்! தீர்த்தோற்சவத்தில் ஏற்பட்ட சங்கடத்தால் மக்கள் விசனம்
கிளிநொச்சி அருள்மிகு கந்தசுவாமி ஆலயத்தில் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் இன்று தீர்த்தோற்சவம். இராணுவ ஆக்கிரமிப்பு அற்ற முன்னான காலங்களில் கந்தப்பெருமான் தீர்த்தம் ஆடுவதற்கு பரிவாரமூர்த்திகள் சூழ, பிரதான வீதியூடாக புறப்பட்டு கரடிப்போக்கு சந்தியில் மூன்றாம்

கிழக்கு தேர்தலின் பின்னர் கூட்டமைப்புடன் இணைவது குறித்து தீர்மானம்: ரவூப் ஹக்கீம்
கிழக்கு தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து கிழக்கில் ஆட்சி அமைக்கும் தீர்மானத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செந்தூரன் புழல் சிறையில் அடைப்பு! தமிழக அரசின் அநீதி!- மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம்!
அழுத  பிள்ளைக்கு பால் தர மறுப்பது போல் தமிழக அரசு செந்தூரனுக்கு அநீதி இழைத்துள்ளது. இலங்கையில் தான் ஈழத் தமிழர்களுக்கு இத்தகைய கொடூரங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்றால், தமிழகத்திலும் அதே கொடுமை தான் நடக்கிறது என்பதை அறியும் போது சொல்லில் அடங்கா வேதனை தான் மிஞ்சுகிறது.
பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் உள்ள முகாம் வாசிகள் அனைவரும் திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கை வைத்து செந்தூரன் கடந்த 6 ம் தேதியில் இருந்து உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
26 நாட்கள் அவர் செய்த தொடர் பட்டினிப் போராட்டத்தில் 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தவில்லை.
செந்தூரனின் போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி , மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகையிட்டு போராட்டம் செய்து கைதாகினர்.
பல கட்சிகள் சார இயக்கங்கள் பல போராட்டங்கள், பரப்புரைகள் செய்தன.
சென்னை மதிமுக அலுவலகத்தில் தொடர் பட்டிப் போராட்டமும் நடைபெற்று வருகிறது.
இப்படி பல வகையில் போராடியும், அரசுக்கு நேரில் சென்று மனு கொடுத்தும், இவை எதுவும் தமிழக அரசின் காதுகளுக்கு விழவில்லை.
இதற்கிடையில் பத்து நாட்களுக்கு முன் செந்தூரனின் அத்தை செந்தூரனை பார்க்க இலங்கையில் இருந்து வந்தார். அவர் செந்தூரனின் உடல் நிலையை பார்த்து கவலை அடைந்தார். செந்தூரனின் பட்டினிப் போராட்டத்தை கைவிடும்படி வேண்டினார்.
ஆனால் செந்தூரன் முடிவாக மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த அவரது அத்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது . பின்பு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனளிக்காமல் சென்னையில் காலமானார். இப்படி ஒரு துயர நிகழ்வும் நடந்தேறியுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.
நேற்று செந்தூரனின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையை எட்டியது. அவர் மயக்க நிலையை அடைந்தார். அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என சக முகாம் வாசிகள் முகாம் காவல் துறையை கேட்டுக் கொண்டதோடு செந்தூரனை தூக்கிக் கொண்டு போய் ஆய்வாளர் அறையில் போட்டனர். மாலை 5 மணிக்கு இது நடந்தது.
இதை அறிந்த மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் கியூ பிரிவு காவல்துறை உயர் அதிகாரி சம்பத் குமாரிடம் செந்தூரனை காப்பாற்றுங்கள் என முறையிட்டனர். அவரும் நிச்சயம் செந்தூரனை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக உறுதி அளித்தார்.
இதை தொடர்ந்து மாலை 7 மணிக்கு அரசின் நோயாளி அவசர ஊர்தி கொண்டுவரப்பட்டது. அப்போது உயிருக்கு போராடி வந்த செந்தூரனுக்கு எந்த முதலுதவியும் செய்யப்படவில்லை. காவல்துறையும் அருகில் இருந்தபடி தேநீர் அருந்தியும், பத்திரிக்கை படித்துக் கொண்டும் அலட்சியம் காட்டினர்.
சக முகாம் வாசிகள், அதிகாரிகளை கேள்விக் கேட்க தொடங்கினர்.  அதிகாரிகள், செந்தூரனுக்கு பாதிகாப்பு வாகனம் வந்து கொண்டிருகிறது, வந்ததும் செந்தூரனை மருத்துவமனைக்கு அழைத்து செல்வோம் எனக் கூறினர்.
இரவு 10 மணிவரை செந்தூரனை அழைத்து செல்லவில்லை. 10 மணிக்கு மேல் செந்தூரனை அதிகாரிகள் ஒரு அவதிப்படும் மனிதனாக கூட பார்க்காமல் வாகனத்தில் ஏற்ற இழுத்துச் சென்றனர்.
சரி, அப்போதாவது மருத்துவ சிகிச்சை அளிப்பார்கள் என்று பார்த்தால், செந்தூரனின் தளர்ந்து போன உடல் நிலையைக்கூட கருத்தில் கொள்ளாது, அவரை பூந்தமல்லியில் உள்ள நீதிபதியின் முன் கொண்டு சென்று, செந்தூரன் தற்கொலைக்கு முயன்றார் என்று குற்றம் சாட்டி, அவரை கைது செய்தது கியூ பிரிவு காவல்துறை.
இந்நிலையில், சென்னை இராயப்பேட்டை மருத்துவமனையில் திரு வைகோ, இயக்குனர் புகழேந்தி மற்றும் பல தமிழ் உணர்வாளர்கள் செந்தூரனை காண காத்திருந்தனர். செந்தூரன் அங்கு அழைத்து வரப்படுவார் என எண்ணினர்.
நள்ளிரவு 12 மணி வரை காத்திருந்த அவர்களுக்கு அதிர்ச்சி செய்தி மட்டுமே கிடைத்தது. அப்படி ஒரு அநீதியை செய்தது தமிழக கியூ பிரிவு காவக் துறை.
செந்தூரனுக்கு மருத்துவ உதவிகள் அளிக்காமல், அவரை நேரே புழல் சிறையில் கொண்டு போய் அடைத்தது.
இதை மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் தான் ஈழத் தமிழர்களுக்கு இத்தகைய கொடூரங்கள் நடந்து கொண்டிருக்கிறது என்று நினைத்தால், தாய் தமிழகம் என்று நம்பி வந்த ஈழத் தமிழர்களுக்கு தமிழகத்திலும் அதே கொடுமை தான் நடக்கிறது என்பதை அறியும் போது சொல்லில் அடங்கா வேதனை தான் மிஞ்சுகிறது.
இவ்வளவு போராட்டம் நடத்தியும், உண்ணாநிலையில் இருந்தும், பரப்புரை செய்தும், அரசுக்கு மனுக்கள் கொடுத்தும் அரசு எதற்கும் பதில் அளிக்காமல் பிடிவாதமாக செந்தூரனின் அறவழிப் போராட்டத்தை முடக்கும் விதமாக அவரை கைது செய்து சிறையில் அடைப்பது அராஜகத்தின் உச்சகட்டம் என மனித உரிமை ஆர்வலர்கள் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அழுத பிள்ளைக்கு பால் என்ற பழமொழி பொய்த்தது போல் செந்தூரனின் அழுகுரலை ஏற்கவே மறுத்தது தமிழக அரசு.
இப்படியானதொரு அநீதியை தமிழக அரசு செய்து கொண்டிருக்கும் போது, இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு இந்த அரசு நீதி பெற்றுத் தருவோம், மறுவாழ்வு பெற்றுத் தருவோம் என்று சொல்வது வெறும் கண்துடைப்பு நாடகம் தான் என்பது தெளிவாக தெரிகிறது.

செந்தூரனின் உடல் நிலை கவலைக்கிடம்.







செந்தூரன்
உண்ணாநிலைப் போராளி.
அவரது கொள்கையிலும் நிலைப்பாட்டிலும்
சரியாகவிருக்கிறார். பாராட்டுகிறேன்.

ஈழத்தமிழர்களை முகாம்களிலும், சிறப்புமுகாம்களிலும், அடைத்துவைப்பது , அதுவும் போர் முடிந்த காலமாக கருதும், இந்நாட்களிலும் கைதியாக வைத்திருப்பது முறையா? அப்படியாயின், அவர்களைவிசாரணைக்குட்படுத்தவேண்டும், அல்லது விடுவிக்கவேண்டும்,

செந்தூரன் கைது  செய்யப்பட்டார்
திறந்த வெளி முகாமுக்கு அகதிகளை மாற்றக்கோரி செந்தூரன் என்பவர் கடந்த 26 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். 
ராஜீவ் காந்தி படுகொலை! திடுக்கிடும் தகவல்களை வெளியிட போகிறார் திருச்சி வேலுச்சாமி!
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து பல திடுக்கிடும் தகவல்களுடன் ஒரு புத்தகத்தை எழுதி வருகின்றார் திருச்சி வேலுச்சாமி.
பதவியில் உள்ளவர்களும், அரசியலில் உள்ளவர்களும் ஓய்வு பெற்ற
பிரபாகரனின் வீட்டை பார்வையிட்ட தென்னிலங்கை பெண் தவறி விழுந்து மரணம்
 
தேசியத்தலைவர் பிரபாகரனின் வீட்டைச் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்த கொழும்பைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் அவ் வீட்டிற்குள் தவறிவிழுந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து
திருச்சியில் சிங்கள மாணவர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்! நிகழ்வின் இடைநடுவில் வெளியெறிய மாணவர்கள்
 
தமிழகத்தின் திருச்சியில் அமைந்திருக்கும் கலைக்காவேரி நுண்கலைக் கல்லூரியில் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற சிங்கள மாணவர்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

31 ஆக., 2012



புலம்பெயர் இளையோருக்கு உரிமையுடன் அவசர மடல்

அன்பார்ந்த புலம்பெயர் இளையோர்களே!!!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமான பணி உங்கள் கைகளுக்கு மாறுவதாக தமிழீழ தேசியத் தலைவர் 2008 மாவீர் தின உரையிலேயே அறிவித்திருந்தார். 2009 இல் வரலாறு காணாத இனப்படுகொலையை சந்தித்திருந்தது தமிழினம். லண்டன் உட்பட வெளிநாடுகள் எங்கும் புலம்பெயர் தமிழர்கள்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிஷலை கருப்பர் இன அடிமைப் பெண் போல் சித்தரித்து
அரை நிர்வாண கோலத்தில் மார்பிங் செய்யப்பட்ட படத்தை வெளியிட்டு ஸ்பெயின் நாட்டு பத்திரிக்கையொன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஒரு கருப்பர் இனத்துப் பெண் மேலாடை இல்லாமல், வெற்று மார்புகளுடன் இருப்பது போல அந்தப் படம் உள்ளது.
ஆனால் முகம் மட்டும் மிஷல் ஒபாமாவுடையது. மார்பிங் செய்து முகத்தை மட்டும் மிஷல் முகமாக

''திரையிசைச் சக்கரவர்த்தி''... எம்.எஸ்.விக்குப் புதிய பட்டம் கொடுத்த ஜெயலலிதா!

 jaya gives new title msv

ஆண்டுதோறும் பில்லாக் வானொலி மற்றும் தொலைக்காட்சி உரிமக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இம் முறையினை மாற்றி கூடுதல் மதிப்பு வரி விதிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
ஜீவாவின் ‘முகமூடி’ படம் நாளை ரிலீசாகிறது. இதில் சூப்பர்மேன் கேரக்டரில் நடித்துள்ளார். மிஸ்கின்11 கிலோ உடை அணிந்து 'முகமூடி' படத்தில் கஷ்டப்பட்டு நடித்தேன்: நடிகர் ஜீவா இயக்கியுள்ளார். ‘முகமூடி’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஜீவா கூறியதாவது:- 

‘முகமூடி’ குழந்தைகள் முதல் எல்லோரும் ரசிக்கு
ஜீவாவின்

ad

ad