பண்ருட்டியார் விலகலை அடுத்து, இருபத்தி நான்கே மணி நேரத்தில் அவசர அவசரமாக தே.மு.தி.க.வின் செயற்குழு கூட்டத்தை 12-ந் தேதி மாலையில் கூட்டினார் விஜயகாந்த். மா.செ.க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும், அன்று காலையே பரபரப்பாக சென்னைக்குப் படையெடுத்திருந்தனர்.
-
17 டிச., 2013
16 டிச., 2013
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு கடந்த 14ம் திகதி சனிக்கிழமை செங்காலன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தை நிராகரித்தார் ஆளுநர் சந்திரசிறி
தன்னை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கக்கோரி, வடக்கு மாகாணசபை நிறைவேற்றிய தீர்மானத்தை மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி நிராகரித்துள்ளார்.தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நல்ல முறையிலேயே பணியாற்றி வருவதாகவும் அவர் கொழும்பு ஆங்கில
புங்குடுதீவு மடத்துவெளி முருகன் ஆலயத்துக்கு அண்மையில் கடற்படையினாரல் கொல்லப்பட்ட இளையதம்பி தர்சினி நினைவு தினம்
நினைவஞ்சலி
அமரர் இளையதம்பி தர்சினி
மடத்துவெளி, புங்குடுதீவு
8ம் ஆண்டு நினைவு நாள் 16-12-2013 வருடங்கள் பல சென்றாலும் நீங்கவில்லை உன் நினைவுகள் துடிக்கிறது எம் உள்ளம் உன் பெயா் ஒலிக்கும் போது ஒரு கணம் துடிக்க- மறுக்கிறது எம் இதயம் தமிழனாய் பிறந்தது நீ செய்த பாவம் உனைபிரிந்து தனிமையில் வாடுவதே நான் செய்த பாவம் மறு ஜென்மம் ஒன்றிருந்தாள் தோளில் சுமந்த உன்னை கருவில் சுமக்கும் வரம் கேட்பேன் அன்னாரின் ஆத்மா சந்தியடைய வயலுார் முருகனை பிரார்த்திப்போம் - சிற்றம்பலம் எக்ஷனா
வடக்கில் விமானங்கள் பறக்க தடை விதிக்குமாறு ஐ.நா.விடம் தமிழ்க் கூட்டமைப்பு கோரவுள்ளது! சிங்கள இணையத்தளம் தகவல்
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியை பதவி நீக்கம் செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியதாகவே உள்ளது!- ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமையும் பரிதாபத்துக்குரியதாகவே உள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளும் கிடைக்க எங்கள் வாழும் கலை இயக்கம் இயன்றதை செய்யும். இவ்வாறு வாழும் கலை மையத்தின் நிறுவனரும் ஆன்மிகவாதியுமான
இன்று நடைபெற்ற தாய்மண் உள்ளரங்க உதை பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றதனால் யங் ஸ்டார் கழகம் தொடராக ஆறு தடவை வென்ற சாதனையை படைத்துள்ளது
இன்று நடைபெற்ற சுற்றுப் போட்டியில் இந்த கழகம் எந்த அணியிடமும் தோற்காது மொத்தமாக 7 போட்டிகளில் பங்கு பற்றி 14 கோல்களை அடித்து 3 கோல்களை மட்டுமே வாங்கி அற்புதமாக விளையாடி தாய்மண் கிண்ணத்தை ஆறாவது தடவையாக தொடர்ந்து வென்று சாதனை படைத்துள்ளது .அரைக்கால் இறுதி, காலிறுதி ,அரையிறுதி, இறுதி
இன்று நடைபெற்ற சுற்றுப் போட்டியில் இந்த கழகம் எந்த அணியிடமும் தோற்காது மொத்தமாக 7 போட்டிகளில் பங்கு பற்றி 14 கோல்களை அடித்து 3 கோல்களை மட்டுமே வாங்கி அற்புதமாக விளையாடி தாய்மண் கிண்ணத்தை ஆறாவது தடவையாக தொடர்ந்து வென்று சாதனை படைத்துள்ளது .அரைக்கால் இறுதி, காலிறுதி ,அரையிறுதி, இறுதி
15 டிச., 2013
இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை:தயாராகிறது
அமெரிக்கா! (சிறிலங்கா) இலங்கை அரசு தொடர்ந்தும் முரண்டுபிடிக்கும் வகையில் செயற்பட்டு வருவதால், அரசுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முனைப்புகளை அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் இலங்கைக்கு எதிரான இந்த பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இதனை விட இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தாது தன்னிச்சையாக செயற்பட்டு வருவது குறித்தே சர்வதேச சமூகம் தற்பொழுது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. பொதுநலவாய நாடுகள் அமைப்பு போன்ற சர்வதேச அமைப்பின் தலைமை பதவியை பெற்றுக்கொண்ட பின்னரும் சர்வதேச நிலைப்பாடுகளுக்கு மதிப்பளித்து அதனை செயற்படுவதற்கு பதிலாக ஒருதலைப்பட்சமாக சர்வாதிகார ரீதியில் இலங்கை செயற்பட்டு வருவது அமெரிக்க ராஜதந்திரிகளை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இது தொடர்பில் கடும் நடவடிக்கையாக அமெரிக்கா இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதித்து இலங்கை ஆட்சியாளர் உணரும்படியான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்ற யோசனையை காங்கிரஸ் சபையில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உப குழுவே இந்த யோசனையை கொண்டு வரவுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டிற்கு பின் இந்த யோசனை காங்கிரஸ் சபையில் முன்வைக்கப்பட உள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. அண்மைக் காலத்தில் உலகில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான அதிகமான சாட்சியங்கள் இலங்கையில் இடம்பெற்ற போர் குறித்தே வெளியாகியுள்ளன. இவற்றில் உண்மை உள்ளதா இல்லையா என்பதை அறிய விசாரணைகளை நடத்தி கண்டறியும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளது. விசாரணைகளை நடத்தாது தொடர்ந்தும் அதனை புறக்கணித்து வருவது ராஜதந்திரமான செயல் அல்ல எனவும் அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமை தொடர்பான உபகுழு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உத்தேச பொருளாதார தடைவிதிப்பில் இலங்கை மக்களுக்கு தேவையான உணவு, மருந்து போன்றவற்றை தவிர வேறு விடயங்கள் உள்ளடக்கப்படலாம் என கருதப்படுகிறது. குறிப்பாக இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு வங்கி கணக்குகளை தடைசெய்தல், வெளிநாட்டவர் இலங்கை செல்லவும், இலங்கையர் வெளிநாடுகளுக்கு செல்லவும் வீசா வழங்குவதை இடைநிறுத்துதல் அல்லது கட்டுப்பாடுகளை விதித்தல், எரிப்பெருள் இறக்குமதி கட்டுப்பாடு, இலங்கையின் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்துதல் போன்றவை இந்த பொருளாதார தடையில் உள்ளடக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)