நடிகை ரஞ்சிதா- நித்யானந்தா வீடியோ வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு |
நடிகை ரஞ்சிதா, சாமியார் நித்யானந்தா தொடர்பாக தவறான காணொளி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
-
5 செப்., 2013
அமைச்சரவையில் இருந்து வைகைச் செல்வன் நீக்கம்! கட்சிப் பதவியும் பறிப்பு!
தமிழக அமைச்சரவையில் இருந்து வைகைச் செல்வன் நீக்கம் செய்யப்பட்டார்.
பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்த வைகைச்செல்வன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும், அமைச்சர் பழனியப்பன் பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இப்போதைய செய்தி
ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளிப்பு?
ஜெனிவாவில் இலங்கை நாட்டவர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
இன்று அதிகாலை 1:00 மணியளவில் இத் துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளன.
இருந்தபோதிலும் இது தொடர்பில் எம்மால் உறுதிப்படுத்தமுடியவில்லை.
இது தொடர்பில் மேலதிக விபரம் கிடைப்பின் அறிவிப்போம்
Latest news
நவிபிள்ளையின் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும்: ஐ.நா
நவிபிள்ளையின் நடவடிக்கைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும்: ஐ.நா
இலங்கைக்கு வருகை தந்த நவிபிள்ளை முள்ளிவாய்க்காலில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முயற்சித்தமை தொடர்பாக ஐ.நா அலுவலகம் தமது கருத்தை வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு வீடமைக்க நிதியில்லை என்றவர் மஹிந்த; அதனை அவர் ஒப்புக்கொள்வதற்கு தயாரா என்று சம்பந்தன் சவால்
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து தமிழில் பேசி வாக்குக் கேட்க விருக்கும் மஹிந்தா, வன்னியில் 80 சத வீதமான மக்கள் வீடிழந்து இருக்கின்றனர். அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள் என்று
வடக்கு தேர்தலில் த.தே.கூ வெற்றி பெற நாங்கள் பூரண ஆதரவு; ஜனநாயக மக்கள் முன்னணி பகிரங்க அறிவிப்பு
வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி தாம் ஆதரவு வழங்கப்போவதாக ஜனநாயக மக்கள் முன்னணி பகிரங்கமாக அறிவித்துள்ளது.
புனர்வாழ்வு முகாமில் இன்னும் 241 முன்னாள் போராளிகளே உள்ளனராம் ; என்கிறது அரச அறிக்கை
முன்னாள் போராளிகள் 108 பேர் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கழிவு வாய்க்கால் சீரின்மையால் யாழ். கஸ்தூரியார் வீதிக்கருகில் துர்நாற்றம்
முறையாக செப்பனிடப்படாமையால் கழிவு நீர் வீதியில் தேங்கிக் காணப்படுகின்றது.
இதனால் பிரதேச மக்களும் நகருக்கு வருவோரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனால் பிரதேச மக்களும் நகருக்கு வருவோரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
யாழ். கஸ்தூரியார் வீதியிலுள்ள கழிவு வாய்க்கால் முறையாக செப்பனிடப்படாமையால் அப்பகுதி துர்நாற்றம் வீசுகின்றது. குறித்த வீதி காப்பெற் வீதியாக்கப்பட்டுள்ள போதும் வடிகால் சீராக்கப்படாமையால் இந்நிலையை எதிர்கொண்டுள்ளது.
யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதியாக இது இருக்கின்ற போதும் மாநகர சபை இதனை சீர் செய்யவில்லையென வர்த்தகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் உள்ள முஸ்லிம்களை தீவிரவாதிகளாக அரசாங்கம் சித்தரிக்கின்றது. அதன் உச்சகட்ட உறுதிப்பாடாகவே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உரையும் அமைந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் தீவரவாதிகள் என்பதை சிங்களவர்கள் மனதில் புகுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையினை தூண்டும் செயற்பாட்டினை அரசாங்கம் கைவிட வேண்டும். முஸ்லிம்களுக்கும்
மலையகம் என்ற ஒரு சமுதாயம், இலங்கையில் இருக்கின்றது என்பது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டிய கடமையிலிருந்து மலையக அரசியல் தலைமைகளும் புத்திஜீவிகளும் தவறி விட்டனர்.
இது வேதனைக்குரிய ஒரு விடயமென்று கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரசார செயலாளருமான கே.ரி.குருசாமி தெரிவித்தார்.
நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறத் தவறினால், நீண்ட காலமாக நாம் மேற்கொண்டு வருகின்ற போராட்டங்களினுடைய, அல்லது தமிழ் தேசியத்தினுடைய வலு நிச்சயமாக குறைவடையும். ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டிய தேவை தமிழர்களுக்கு எழுந்துள்ளது. இதனை உணர்ந்துகொண்டு அவர்கள் அதனைச் செய்வார்கள் என நம்புகின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வீரகேசரி வார வெளியீட்டுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். (நேர்காணல்: எம்.நியூட்டன்.)
செவ்வியின் விபரம் வருமாறு:…
செவ்வியின் விபரம் வருமாறு:…
செஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆண்களுக்கான காலிறுதி இரட்டையர் போட்டியில் உலகின் 4-ம் நிலை ஆட்டக்காரர்களான இந்தியாவின் லியாண்டர் பயெஸ், செக்- ரிபப்ளிக்கின் ரடெக் ஸ்டெபானிக்குடன் ஜோடி சேர்ந்து விளையாடினர்.
அஸிஸ்டென்ட் கதையை அலேக் செய்த முருகதாஸ்!
வழக்கமாக ஹாலிவழக்கமாக ஹாலிவுட் படத்தைத்தான் நம்ம ஊர் இயக்குநர்கள் காப்பி செய்து படம் எடுப்பார்கள். இதற்கு விதிவிலக்காக தன்னுடைய உதவி இயக்குநர் தன்னிடம் சொன்ன கதையை, பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சுட்டு படமாக்கத் திட்டமிட்ட கதைதான் இப்போது கலையுலகையே கதிகலங்க வைக்கும் ஹாட் டாபிக்.‘துப்பாக்கி’ படத்தையடுத்து ஐங்கரன் மூவீஸ் கருணா தயாரிக்கும் படத்தில் விஜய், முருகதாஸ் இணைகிறார்கள். சென்ற வருடம் முருகதாஸிடம் உதவி இயக்குநராக இருந்த ஒருவர், இப்போது தனியாக படம் எடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
9ஆம் தேதி 'கோச்சடையான்' பட டிரைலர் வெளியீடு!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் வரும் 9ஆம் தேதி நடக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்து அவருடைய மகள் சவுந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ள படம் ‘கோச்சடையான்’. இந்த படத்தின் டைரக் ஷன் மேற்பார்வையை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கவனித்துள்ளார். |
தண்டனை பெற்ற எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடனேயே பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற உத்தரவை மறுசீராய்வு செய்யக்கோரி, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தண்டனை தீர்ப்பை எதிர்த்து 3 மாதங்களுக்குள் மேல் முறையீடு செய்தால், அதன் மீதான தீர்ப்பு வரும் வரை அவர் தனது பதவியை ராஜினாமா
கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தண்டனை தீர்ப்பை எதிர்த்து 3 மாதங்களுக்குள் மேல் முறையீடு செய்தால், அதன் மீதான தீர்ப்பு வரும் வரை அவர் தனது பதவியை ராஜினாமா
பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றார் நவி; இலங்கை அரசு குற்றச்சாட்டு
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட முள்ளி வாய்க்கால் பகுதியில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மலர் வளையம் வைத்து அஞ்சலி
4 செப்., 2013
தேர்தலில் வாக்களிப்பை குறைக்க இலங்கை இராணுவம் தயாராகி வருகின்றது- சீ.வி.விக்னேஸ்வரன்
நடைபெறுவுள்ள தேர்தலில் குழப்பங்களை ஏற்படுத்த இலங்கை இராணுவமும் அரசாங்க தரப்பினரும் தயாராகி வருகின்றனர் எனவும், அரசாங்க தரப்பு வாக்கு மோசடிகளிலும் ஈடுபட வாய்ப்புள்ளது. என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட்டுக்கோட்டையில்
அரசாங்கத்திற்கு அளிக்கிற ஒவ்வொரு வாக்கும் எங்கள் இனத்தைக் காட்டிக் கொடுக்கிற ஒரு துரோகச் செயல்!- முழங்காவில் தேர்தல் பிரசாரத்தில் சுமந்திரன் எம்.பி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் முழங்காவில் பகுதியில் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டப் பொருளாளர் தனராஜின் தலைமையில் நேற்று மாலை 4.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 8.00 மணிக்கு நிறைவு பெற்றது.
ஐ.நா அறிக்கை விடுதலைப் புலிகளை சாதாரண அமைப்பு என்றே குறிப்பிட்டுள்ளது: குமுறும் அமைச்சர் பீரிஸ்
பாதுகாப்பு தரப்பினர் குறித்து மக்கள் சாட்சியங்களை வழங்கிய போதும், அது தொடர்பாக ஒரு நல்லெண்ண வார்த்தை ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பெண் பிள்ளைகள் மீதான வல்லுறவுக் கொடுமை வரிசையில், இன்னுமொரு சம்பவம்! அசராம் பாப்பு என்கிற 72 வயது சாமியார், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளிப் பிள்ளையைப் பாலியல் வல்லுறவு செய்திருக்கிறார் என்பது குற்றச்சாட்டு. நக்கீரன்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் முதலில் ஆசிரமம் ஒன்றைத் தொடங்கிய அசராம், இப்போது 200-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆசிரமங்களைக் கொண்ட, உலகப் பிரபலமான சாமியாராக வலம்வருகிறார். தன் ஆசிரமங் களுடன், பழங்காலத்தைப் போன்ற குருகுலங்கள், மருந்து நிறுவனங்கள் என பலவற்றையும் நடத்து கிறார். இதில், மத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் உள்ள குருகுலமும் அடக்கம். இந்த குரு குலத்தில் 12வது படிக்கும் உத்தரப் பிரதேச மாணவி ஒருவரைத்தான், அசராம் பலாத்காரம் செய்துள்ளார்.
கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில், அந்த மாணவிக்கு தொடர்ந்து சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் குருகுலத்துக்கு விரைந்தனர். அவர்களிடம், வீட்டுக்குக் கூட்டிச் செல்லுமாறு மாணவி கூறியிருக்கிறார். ஆனால், சாமியாரிடம் அழைத்துச் சென்றால் சரியாகிவிடும் என ஆசிரமத்தில் உள்ளவர்கள் கூற, பெற்றவர்களும் பக்தி சிரத்தையோடு, தலையாட்டி உள்ளனர்.
முதலில், இந்தப் புகாரை போலீசார் நம்பவில்லை. மாணவியின் பெற்றோர்கள் அசராம் பாப்பு ஆசிரமத்தின் தீவிர பக்தர்கள் என்பதை அறிந்தபின் தான், போலீசின் விசாரணை சரியான திசைக்கு நகர்ந்தது.
ஏற்கனவே, சாமியார் மீது ரூ.700 கோடி நிலப்பறிப்பு, 2 ஆசிரம சிறுவர்கள் கொலை என பல வழக்குகள், தாந்திரீக மோசடி என பல பிரச்சினைகள் உள்ளன.
"ஜோத்பூரில் இருந்து ஆக.11-ம் தேதியே, சாமியார் கிளம்பிவிட்டார்' என்று ஆசிரமத்தின் செய்தித் தொடர்பாளர் வாங்கடே என்பவர் சொல்ல... ஆசிரமம் அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர் ரஞ்சித் தேவ் ராவோ, "10, 11 தேதிகளில் நடந்த- தீட்சை அளிக்கும் சத்சங் நிகழ்ச்சிக்காக, ஆக.9-ம் தேதியே வந்துவிட்டார். சத்சங் நிகழ்ச்சி முடிந்தபிறகு, பெரும்பாலும் தனியாகவே இருந்தார். தீவிரமான பக்தர் களைக்கூட அவருடைய முக்கிய அறைக்கு அனுமதிக்கவில்லை. அதேநேரம், குறிப் பிட்ட சில பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளித்தார். 16-ம் தேதி காலையில்தான் இங்கிருந்து கிளம்பினார்'’என்று போட்டு டைத்தார்.
ஆனால், "72 வயதான எனக்கு, ஆண்மையே போய்விட்டது... அந்தச் சிறுமி என் மகளைப் போன்றவள்.. தயவு செய்து, அவளை வல்லுறவுக்குள்ளாக்கப் பட்ட சிறுமி எனக் கூறாதீர்கள்.. தூய்மை யானவள்' எனப் பலவாறாக விரிவுரை செய்தார். பத்தாயிரக்கணக்கான பக்தர் களைக் கட்டிப்போட்ட அவரது பிரசங்கம், எடுபடாமல் போனது.
30-ம் தேதிக்குள் விசாரணைக்கு வருமாறு, அசராம் பாப்புவுக்கு ஜோத்பூர் நகர போலீசார் உத்தரவிட, பாப்பு, எஸ்கேப். 14 பேரைக் கொண்ட ராஜஸ்தான் போலீஸ் தனிப்படை, பாப்பு சேஸிங்கை முடுக்கிவிட்டது. இந்தூரில் உள்ள ஆசிரமத்துக்குள்தான் சாமியார் ஒளிந்திருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து, அங்கு ஆஜரானது, தனிப்படை.
வேறு வழியின்றி, பாப்புவின் மகனான சின்ன சாமியார், நாராயண் சாய், "பாப்புஜிக்கு உடல்நலம் சரியில்லை. அவர் சரியானதும், ராஜஸ்தான் போலீசார், எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து விசாரிக்கலாம்' என்று சொல்லிப் பார்த்தார்.
கடந்த 31-ம் தேதி சனிக்கிழமை மாலையில், போலீஸை உள்ளே போகவிடாமல் தடுப்பு அரண் அமைத்தார்கள். சிறிது நேரத்தில் அவர்களைக் கடந்து உள்ளே சென்றது, ஜோத்பூர் போலீஸ் தனிப்படை.
விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்ட போலீசாரிடம், "இப்போதைக்கு நான் ஓய்வெடுக்க வேண்டும்' என தனி அறைக்குள் போய்விட்டார். சிறிது நேரத்தில் அவராகவே வெளிவந்த போது, பிடிக்குள் கொண்டுவந்தனர், ஜோத்பூர் போலீசார்.
அங்கிருந்து அசராமைக் கொண்டு வருவதற்குள், தனிப்படை போலீசார் தவித்துப் போனார்கள். இந்தூரில் இருந்து கிளம்பும் முன்பே, அவருக்கு நெஞ்சுவலி (அந்த ஊர்லயுமா) வந்துவிட்டது. உடனே, இந்தூர் மருத்துவக் கல்லூரி நிபுணர் குழுவினர் வந்து, நார்மல்தான் என உறுதிப்படுத்தி, அங்கிருந்து விமானம் கிளம்ப, மறுநாள் காலை ஆகிவிட்டது.
டெல்லியில், கடந்த நவம்பரில் மருத்துவ மாணவி வல்லுறவுக் கொடுமையைக் கண் டித்து எந்த இடம் போர்க்களமாக்கப் பட்டதோ, அதே ஜந்தர்மந்தர் பகுதியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு, அசராமுக்கு ஆதரவாக கோஷம் போட்டனர்!
ஆனால், ஜோத்பூரில் அசராம் தரையிறங்கியபோது, காட்சி வேறு மாதிரியாக இருந்தது. பெண்ணுரிமையாளர் கள் ஒரு பக்கம் கருப்புக் கொடிகளுடன் ஆவேசத்துடன் போராட, பக்தகோடிகள் ஒதுங்க வேண்டியதாயிற்று.
விறுவிறுப்பாக முடிந் தவைகளைத் தொடர்ந்து, பாப்புவுக்கு ஜோத்பூரில் ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது. அவருடைய ஸ்டேட்மெண்ட்டுக்கு அப்படியே திருப்பிப் போட்டதுபோல, வந்தது, பரி சோதனை முடிவு.
அகில இந்திய அளவில் இது ஒரு பக்கம் நடக்க, பாலியல் சாமியார் நித்யானந்தாவுக்கும் பாப்புஜிக்கும் இடையிலான நட்புதான், இதில் மேட்டரே என்கிறது, ஆசிரமத் தரப்புகள். முன்பு, நித்தி கையும் களவுமாக மாட்டிக் கொண்டபோது, ஆதரவுக் குரல் கொடுத்து, வடக்கில் உள்ள சாமியார்களைக் கிளப்பி விட்டதில், பாப்புவுக்கு முக்கியப் பங்கு இருந்துள்ளது. அதேபோல, இப்போது பாப்பு மாட்டிக்கொண்டதும், இந்த வகையறா சாமியார்களைத் திரட்டி, போலீஸ் நட வடிக்கைகளை எதிர்கொள்ள உதவுவதில் இறங்கியுள்ளதாம், நித்தி தரப்பு.
பறிக்கப்பட்ட காணிகளை மீண்டும் மக்களுக்குப் பெற்றுத் தர முடியுமா? இணக்க அரசியல் வாதிகளுக்கு சவால் விடுகிறார் சம்பந்தன்
தமிழ் மக்கள் தமது தாயக மண்ணில் இருந்து விரட்டப்படு வதையும் அத்துமீறி சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதையும் தடுத்து, தமிழ் மக்களிடமிருந்து பலாத்காரமாகப் பறிக்கப்பட்டுள்ள
முஸ்லிம்களும் ஏற்கக்கூடிய சமஸ்டியே வேண்டும் தீர்வாக; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பு
முஸ்லிம் மக்களும் ஏற்கக் கூடிய சமஷ்டித் தீர்வே தமிழர்களுக்குத் தேவை என்று நேற்று வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நல்லூரில் மலர் சொரிந்த ஹெலிகொப்டர் காற்றாடி பட்டு மரக்கிளை முறிந்து வீழ்ந்து பக்தர் படுகாயம்
யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழாவில் மலர் சொரிந்த ஹெலியின் காற்றாடி பட்டு மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் பக்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரட்டைக் குடியுரிமையாளர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு விமானநிலைய புலனாய்வாளர்களிடம் அரசாங்கம் வேண்டுகோள்!முக்கியமாக சுவிஸ் , கனடா ,பிரிட்டிஷ் கடவுசீட்டை பெற்றுள்ள தமிழர்கள் மீது சந்தேகம்
வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்களை கண்காணிக்குமாறு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கடமை புரியும் புலனாய்வு (The State Intelligence Service (SIS) officers at the BIA) அலுவலர்களுக்கு பாதுகாப்பு அமைச்சினூடாக ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையின வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்கள் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சுங்க அதிகாரிகளிடம் கையளிக்கும் தங்குமிட முகவரி கொழும்பு முகவரியாக வழங்கப்படுவதாகவும், எனினும் அவர்கள் வேறு முகவரியில் தங்கியிருப்பதாகவும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் விமான நிலையத்தில் தரையிறங்கும் வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் விமான நிலைய வருகைக்கான (immigration arrival card) அட்டையில் பதியப்படும் விபரங்கள் சேகரிக்கப்பட்டு புலனாய்வுப்பிரிவின் ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் இரட்டைக் குடியுரிமையாளர்கள் விமான நிலையத்தில் கொடுக்கும் முகவரியிலா தங்கியிருக்கிறார்கள் என ஒப்பிட்டு பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் புலம்பெயர் தமிழர்கள் அதிகளவில் வாக்களிக்கலாம் என அரசாங்கம் எதிர்பார்ப்பதும், இரட்டைக் குடியுரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனரா? என கண்காணிப்பதற்குமே இந்த புதிய நடைமுறை என தெரிய வருகிறது.
'இலங்கை படுகொலைகளின் மண்’ தீர்வைத் தேடி தருவேன்! நம்பிக்கை தந்த நவநீதம்பிள்ளை-விகடன்
குற்றங்கள் நடக்கவில்லை... சொர்க்க பூமி இது என்றார் மகிந்த ராஜபக்ச. ஆனால், நவநீதம்பிள்ளையின் வருகையில் அவரே கேட்ட மக்கள் கதறல்களும் கண்ட கோரங்களும் 'இலங்கை படுகொலைகளின் மண்’ என்பதை மீண்டும் உலகத்துக்கு உணர்த்திவிட்டது.
France
வாழ்வின் இனிய தருணங்கள் அனைவருக்கும் எளிதில் அமைவதில்லை…
வயதுவேறுபாடின்றி பார்த்தவர்கள் அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்…
எமக்கான முத்திரையுடன் உலகெங்கும் வெற்றிநடைபோடுகிறது…
இந்த அரிய சந்தர்ப்பத்ததை தவறவிடாதீர்கள்… பின்னர் கவலையடையாதீர்கள்…
Maaru Thadam in France...
15.09.2013 pm 19.30 in France
MEGA CCR EPINAY SUR SEINE
வாழ்வின் இனிய தருணங்கள் அனைவருக்கும் எளிதில் அமைவதில்லை…
வயதுவேறுபாடின்றி பார்த்தவர்கள் அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள்…
எமக்கான முத்திரையுடன் உலகெங்கும் வெற்றிநடைபோடுகிறது…
இந்த அரிய சந்தர்ப்பத்ததை தவறவிடாதீர்கள்… பின்னர் கவலையடையாதீர்கள்…
Maaru Thadam in France...
15.09.2013 pm 19.30 in France
MEGA CCR EPINAY SUR SEINE
3 செப்., 2013
சிங்கள அரசு உரிமை தர மறுத்தால் 10 வயதிலிருக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆயுதம் பற்றி சிந்திப்பதை தடுக்க முடியாது: சி.சிறீதரன்
தமிழ் இனம் வடக்கு கிழக்கு எனும் சிறுபரப்பினிலே தனக்கு உரித்துடைய வாழ்வுரிமையினைக் கேட்டு நிற்கிறது. அந்த உரிமையினைக் கூட சிங்கள இனவாத அரசு தரமறுத்தால், இன்று 10 வயதுகளில் இருக்கின்ற குழந்தைகள் இன்னும் 10 வருடத்தில் ஆயுதங்கள் பற்றிச் சிந்திப்பதை
வடமாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் - 2013
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு (த.தே.கூ) வழங்கப்பட்ட மக்கள் ஆணை !
2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் த.தே.கூ விற்கு பிரமாண்டமான ஆணை ஒன்றை வழங்கினர். அந்த அரசியல் ஆணைக்கு அமையகூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டுள்ளதோடு, அந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்கு தேவையான ஒரு முதற் படியாக தற்போது வட மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்கின்றது. இம் மக்கள் ஆணையின் முக்கிய அம்சங்களை நினைவுகூர்வது இங்கு பொருத்தமானதாகும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு (த.தே.கூ) வழங்கப்பட்ட மக்கள் ஆணை !
2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் த.தே.கூ விற்கு பிரமாண்டமான ஆணை ஒன்றை வழங்கினர். அந்த அரசியல் ஆணைக்கு அமையகூட்டமைப்பு தொடர்ந்து செயற்பட்டுள்ளதோடு, அந்த நோக்கத்தை நிறைவு செய்வதற்கு தேவையான ஒரு முதற் படியாக தற்போது வட மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்கின்றது. இம் மக்கள் ஆணையின் முக்கிய அம்சங்களை நினைவுகூர்வது இங்கு பொருத்தமானதாகும்.
தமிழர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதை இடைநிறுத்தியது சுவிஸ்
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதை, சுவிஸ் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சுவிஸ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, சுவிஸ் சமஸ்டி குடியேற்ற பணியகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இரண்டு தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளும் முயற்சியில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் ஈடுபட்டுள்ளதாகவும், சுவிஸ் ஊடகச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வேழமாலிதனும் பொன்காந்தனும் பொலிசாருக்கு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க மறுப்பு! சட்டத்தரணி தவராசா நீதிமன்றில் காட்டம்
2013ம் ஆண்டு தை மாதம் பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட த.தே.கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான அருணாசலம் வேழமாலிதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரனின், செயளாலரான பொன்காந்தனும்
தமிழ் இனத்தை விற்று பிளைக்கிறார் டக்ளஸ்; மாவை. எம்.பி. சாடல்
தேர்தல் வாக்குக்காக தமிழினத்தைக் காட்டிக்கொடுக்கிறார் அமைச்சர் டக்ளஸ். அத்துடன் எமது மக்களை மஹிந்தவிடம் அடிமைப்படுத்தும் வேலையையும் அவர் மேற் கொள்கிறார்.
தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கு செல்வார்களானால் இனவாதிகளும் அரசாங்கமுமே பொறுப்பு! த.தே.கூட்டமைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பு தனிநாட்டு கோரிக்கையினையும், ஆயுதப் போராட்டத்தையும் மீள உருவாக்குவதற்கு நினைக்கவில்லை. ஐக்கிய இலங்கைக்குள் பூரண சமஷ்டி அடிப்படையிலான தீர்வு ஒன்றினையே நாம் கேட்டிருக்கிறோம்.
முதலமைச்சர் வேட்பாளர் யாரென அறிவித்தால் விவாதத்துக்கு வருவேன்!- தவராசாவுக்கு விக்னேஸ்வரன் சவால்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை உத்தியோகபூர்வமாகவும் பகிரங்கமாகவும் அறிவித்தால் அவருடன் விவாதம் நடத்த தயார் என்று தமிழ்க் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)