இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான தீர்க்கமான ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த வருட ஆசிய கிண்ணத்தின் சுப்பர் 4 சுற்றில் தனது இடத்தை உறுதிப்படுத்தியது.
மேலும் ஆசியகிண்ண டி20 போட்டியில் இலங்கை சேஷிங்கில் பெற்ற அதிகபட்ச ஸ்கோரும் சாதனையாக இருந்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக முதலில் பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தார்.
சீன ட்ரோன்களை எச்சரிக்க தைவான் துப்பாக்கி சூடு - அரிதான எதிர்வினை
பிரான்சஸ் மாவோ
பிபிசி நியூஸ்
பட மூலாதாரம்,GETTY IMAGES
படக்குறிப்பு,
கின்மென் என்பது சீனாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள தீவுக்கூட்டங்களில் ஒரு பகுதி.
சீனாவுக்கு அருகில் உள்ள தமது தீவுகளுக்கு மேலே பறந்து சென்ற சீன ட்ரோன்களை எச்சரிக்கும் விதமாக தைவான் முதல் முறையாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
இந்த நடவடிக்கைக்குப் பிறகு மூன்று ட்ரோன்களும் மீண்டும் சீன நிலப்பகுதியை நோக்கி திரும்பிப் பறந்ததை பார்க்க முடிந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய வாரங்களாகவே சீன ட்ரோன்கள் சீன நிலப்பகுதிக்கு அருகே உள்ள தமது தீவுக் கூட்டங்களுக்கு மேலே பறந்து வருவதாக தைவான் புகார் கூறி வந்தது.
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க அரசியல் தலைவர் நான்சி பெலோசி தைவானுக்கு சுற்றுப்பயணம் செய்தார். அப்போது முதல் சீன, தைவான் நீரிணை பகுதிகளில் பதற்றம் அதிகமாக உள்ளது.
பெலோசியின் வருகைக்குப் பிறகு, தைவானை ஒட்டிய கடல் பகுதிகளில் தமது படை பலத்தை பெருக்கிய சீனா மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சியிலும் ஈடுபட்டது. இதன் பின்பாக தைவான் கடல் பகுதியில் சீனா ட்ரோன்களை பறக்க விடுவதாக தைவான் கூறியது.
தைவான் தலைவர் சாய் யிங்-வென், "சில ட்ரோன்கள் ராணுவ புறக்காவல் சாவடிகளுக்கு மேல் பறந்தது - ஒரு வகை போர் நடவடிக்கை என்று அழைத்தார்.
சீன நகரமான ஜியாமெனில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூன்று கின்மென் தீவுகளான தாடன், எர்டான், ஷியு ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை மூன்று சிவிலியன் ட்ரோன்கள் காணப்பட்டதாக கின்மென் பாதுகாப்பு கட்டளை மையம் கூறியது.
இதையடுத்து ஆளில்லா விமானத்தை நேரடியாகச் சுடுவதற்கு முன், எச்சரிக்கும் விதமாக தீப்பொறிகளை பறக்கும் குண்டுகளை வானை நோக்கிச் சுட்டதாக தைவான் கூறியது. இதன் பிறகு அந்த ட்ரோன்கள் ஜியாமென்னை நோக்கித் திரும்பின
இந்தநிலையில், உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் அகில இலங்கையில் முதல் இடம்பெற்ற மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் த.துவாரகேஸ்சையும், பாடசாலையில் உயர்தரத்தில் சாதனை
இலங்கையினை விட்டு வெளியே வாழ்கின்ற இலட்சக்கணக்கான தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) நிறுவனத்தின் மிக சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியின் (2021ஆம் வருடத்தின்) அடிப்படையில் இலங்கையானது 102ஆவது இடத்தில் காணப்படுகிறது.
பலாலியில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, வியாழன் அன்று நடைபெற்ற கூட்டத்தில், எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு இரண்டு முறை பலாலிக்கு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்
நேற்று வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி, மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்
புலம்பெயர் தமிழர்களால் முன்வைக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு முன்னாள் நீதியரசர் அஷோக டி சில்வா தலைமையில் மூவரடங்கிய குழு ஒன்றை நீதி அமைச்சர் விஜேயதாஷ ராஜபக்ஷ நியமித்துள்ளார்
யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும், ஊரெழு பொக்கணை வீதியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுந்தரலிங்கம் அவர்கள் 25-08-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குணரத்தினம் மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஸ்ரீகுணபூசணி அவர்களின் அன்புக் கணவரும்,
பர்மிளா, ஜியாமளா(கனடா), சதீஸ், துசாயினி(தொழில்நுட்ப உத்தியோகத்தர்- வீதி, அபிவிருத்தி திணைக்களம், முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சர்வானந்தன், வதீஸ்வரன்(கனடா), சோபிநாத்(AS Studio), தயாநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அரியபுத்திரன், சின்னராசா மற்றும் பங்கையற்செல்வி, முத்துலிங்கம், சந்திராதேவி, நவரெட்ணம்(பிரான்ஸ்), நாகலட்சுமி(ஜேர்மனி), சண்முகலிங்கம்(பிரான்ஸ்), இராஜேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் தர்மபூபதி, காலஞ்சென்ற தேவராசா, கல்யாணி, சுந்தரலிங்கம், மங்களேஸ்வரி, கிருபநாதன், தர்சினி, பகீரதன், Dr.பேரின்பநாதன், வயித்திலிங்கம்(கண்ணன் லொட்ஜ்), குபேரநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லாவணியன், கம்சிகா, தன்சிகா, பபிசன், சங்கீதன், யஸ்விகா, சர்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-08-2022 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொக்கணை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வத்தை இயக்குனர் பாக்யராஜ் இன்று சந்தித்தார் சென்னை, சென்னை, மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர்செல்வத்தை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள், ஆணையாளர் மிச்செல் பச்சலேட் தனது பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவடைந்தும் நாடு திரும்ப உள்ளார். பதவியில் இருந்து வெளியேறும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இரண்டாவது தவணை பதவியை நிராகரித்த நிலையில் சிலிக்கு திரும்பவுள்ளார்
எதிர்காலத்தில் தரை, வான், கடல் மாத்திரமன்றி சைபர் தளத்திலும் யுத்தம் நிகழலாம். எனவே எமது வீரர்கள் அவ்வாறான தொழில்நுட்ப யுத்தத்துக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்
கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்று சிலர் தெரிவிக்கின்றனர். அது அவர்களின் தேவை, ஆனால் அவருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்குவதற்கு நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்
இலங்கை மீது விதித்திருந்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுவிஸ் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை இலங்கை உள்நாட்டு சுற்றுலா செயற்பாட்டாளர் சங்கம் வரவேற்றுள்ளது. அத்துடன் சுவிட்சர்லாந்து இலங்கைக்கு ஒரு முக்கியமான சந்தையாகும் என இலங்கை உள்நாட்டு சுற்றுலா சங்கத்தின் தலைவர் நிஷாத் விஜேதுங்க தெரிவித்துள்ளார்
அரகலய போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய அமைப்பு தொடர்பில் புலனாய்வு அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்தி அறிக்கை வழங்குமாறு
அதிமுக தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க கோரிய மனுதாரர்களுக்கு சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை, அதிமுக தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு
சர்வதேச நாணய நிதிய குழுவினருக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மத்திய வங்கியில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான சொகுசு ஹோட்டலுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து, கொலன்ன பொலிஸாரால் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் இராமச்சந்திரன் சுரேன் தெரிவாகியுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைக்கான தவிசாளர் தெரிவு, நகர சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது
இலங்கையில் நேற்று முதல் அமலுக்கு வரும் வகையில் சொக்கலேட், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடைவிதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீடு மனு மீதான விசாரணை வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சென்னை, அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை
இலங்கையில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு மற்றும் சிங்கப்பூருக்கு தப்பி சென்றார். சிங்கப்பூரில் தங்கி இருப்பதற்காக விசா காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த 11-ந் தேதி தாய்லாந்து
இலங்கையின் நிலவரத்தை சர்வதேசம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறது. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை இரண்டரை வருடத்திற்கு பின்னர் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி வசமாக்கும் வகையில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தை, திருத்தம் செய்யுமாறு ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.
இலங்கையின் நிலவரத்தை சர்வதேசம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறது. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்
நல்லூர் திருவிழாவின்போது யாழ் மாநகர சபையின் விசேட அணியொன்று வீதி ஒழுங்குகளை கண்காணிக்கும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபடுவார்கள் என வி.மணிவண்ணன் தெரிவித்தார்
நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இத்தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியே வந்திருந்தாலும், தனுஷ் ரஜினி குடும்பத்துடன் ஒன்றிணையாமல் மகன்களுடன் மட்டுமே வெளியே சுற்றி புகைப்படம் எடுத்து வருகிறார். அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மகன்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாக, தற்போது தனுஷ் மூத்த மகனான யாத்ராவின் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
தமிழ் சினிமாவில், ஆனந்தம் படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. இதையடுத்து, ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட படங்கள் கோலிவுட்டில் மிகப்பெரிய ஹிட்டடித்தன. அதன்பின் அவர் இயக்கிய அஞ்சான் படம் தோல்வியடைந்தது. அதுமட்டுமின்றி அவர் கடுமையாக ட்ரோலும் செய்யப்பட்டார். அண்மையில், இவரது இயக்கத்தில் வெளியான வாரியர் படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது
2022-ஆம் ஆண்டின் சிறந்த 25 கனேடிய புலம்பெயர்ந்தவர்களில் (Top 25 Canadian immigrants of 2022) இரண்டு இலங்கை வம்சாவளி கனேடியர்களான பேராசிரியர் ஜானக ருவன்புர மற்றும் டாக்டர் சிவகுமார் குலசிங்கம் ஆகியோர் விருதை பெற்றனர். விருது பெற்ற இலங்கை வம்சாவளியினரில், டாக்டர் சிவகுமார் குலசிங்கம் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அவரை தொடர்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
காலிமுகத்திடல் அரகலயவை ஆதரித்தார் என்ற சர்ச்சையில் சிக்குண்டுள்ள ஸ்கொட்லாந்து பெண்ணை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார் என குடிவரவு குடியகல்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் செயற்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழு கவலை தெரிவித்துள்ளது.
தடைகளை நீக்குவஇலங்கைக்கான நிதிகளை உள்வாங்கும் நோக்கம், ஜெனிவா மனித உரிமை சபையை கையாளுகின்ற உத்தி மற்றும் சர்வதேச ரீதியில் தமிழ் மக்களால் முன்வைக்கப்படும் இன அழிப்பு தொடர்பான கோரிக்கைகளை உள்ளக பொறிமுறையாக மாற்றக்கூடிய ஒரு ஏற்பாடாகவே புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் காணப்படுகின்றது என மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச இலங்கை திரும்பவுள்ளமை குறித்து எனக்கு எதுவும் தெரியாது என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க எனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்
ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி நேர்மை மற்றும் மனித உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதற்காக சர்வதேச சமூகம் இலங்கைக்கான உதவிகளை நிபந்தனைகளுடன் வழங்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த, ரோயல் பார்க் படுகொலை குற்றவாளி, ஜூட் ஷிரமந்த அன்டனி ஜயமஹவிற்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய, ஜனாதிபதி பொதுமன்னிப்பின் போது, இலஞ்சமாக பணம் பறிமாற்றப்பட்டதா என சி.ஐ.டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
நல்லாட்சி காலத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டு, சில தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு கோடிக் கணக்கில் நஷ்ட ஈடு செலுத்துவதற்கு அரசாங்கம் தயாராகிக் கொண்டிருக்கின்றமையை சுதந்திர கட்சி கடுமையாக எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளது
உள்ளுராட்சிமன்ற தேர்தல் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் இறுதி வாரத்தில் அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில், பனிப்போர் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிக்கும் விடயத்திலேயே இவ்விரு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் புதன்கிழமை நாட்டுக்குத் திரும்பவுள்ளதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்
11 ந்தேதி பொதுக்குழு செல்லாது ஜூன் 23 ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது சென்னை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக
புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்றைய தினம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்
யுவான் வாங் 5 அம்பாந்தோட்டைக்கு வந்து சேர்ந்ததை குறிக்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்து கொண்டதை நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் கடுமையாக சாடியுள்ளார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் மீதும் மற்றும் தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசு நீக்கியமைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்புத் தெரிவித்துள்ளது
அமெரிக்காவின் சட்டமியற்றுபவர்கள் குழு தீவு நாடான தைவானுக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டதை அடுத்து சீனா தனது போர் பயிற்சியை தைவானை சுற்றியுள்ள கடல் பகுதியில் தொடங்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து, அமெரிக்காவின் சென்ட்டர் எட் மார்கி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் தைவான் தலைநகர் தைபேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி சாய் இங்-வெனைச் சந்தித்தனர்
இலங்கை கடற்படைக்கு இந்தியாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட டோர்னியர் -228 என்ற கடல்சார் கண்காணிப்பு விமானம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சென்றடைந்தது. இந்தியாவின் சுதந்திர தினமான இன்று அந்த விமானம், இலங்கையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வந்துள்ள இந்திய கடற்படையின் துணைத்தலைவர் வைஸ் அட்மிரல் எஸ்.என்.கோர்மேட், கொழும்பில் உள்ள இந்திய தூதர் கோபால் பாக்லேயுடன் இணைந்து, கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார்
உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கானோர் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை நகர மேயர் டிமிட்ரோ ஓர்லோவ் உறுதி செய்துள்ளதுடன், ரஷ்யர்கள் கொடூர திட்டத்துடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், உள்ளூர் மக்கள் வெளியிட்ட தகவலில், ரஷ்ய தரப்பு மீண்டும் தாக்குதல் தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்
அமெரிக்காவின் சட்டமியற்றுபவர்கள் குழு தீவு நாடான தைவானுக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டதை அடுத்து சீனா தனது போர் பயிற்சியை தைவானை சுற்றியுள்ள கடல் பகுதியில் தொடங்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து, அமெரிக்காவின் சென்ட்டர் எட் மார்கி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் தைவான் தலைநகர் தைபேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி சாய் இங்-வெனைச் சந்தித்தனர்