-
15 அக்., 2025
கரூர் துயரம் | சட்டப்பேரவையில் கடும் அமளி.. யார் என்ன பேசினார்கள்? நடந்தது என்ன? முழு விவரம்!
சுவிஸ் மக்கள் சொக்லேட் முதலான வெளிநாட்டு பொருட்கள் மீது ஆர்வம் காட்ட முக்கிய காரணம், விலைதான்!
மனுஷ நாணயக்கார கைது
மனுஷ நாணயக்கார கைது
பிரதான சாலையில் நெருப்பு கோளமான பேருந்து: பலர் உடல் கருகி மரணம்! [Wednesday 2025-10-15 07:00]
![]() ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்குச் சென்ற தனியார் பேருந்து ஒன்று பிரதான சாலையில் தீப்பிடித்து எரிந்ததில் 20 பயணிகள் உயிருடன் எரிந்து மரணமடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த இச்சம்பவத்தில் மொத்தம் 57 பயணிகளுடன் தொடர்புடைய பேருந்தானது ஜெய்சால்மரில் இருந்து பிற்பகல் 3 மணியளவில் புறப்பட்டுள்ளது. ஜெய்சால்மர்-ஜோத்பூர் பிரதான சாலையில், பேருந்தின் பின்புறப் பகுதியிலிருந்து புகை வெளியேறத் தொடங்கியது. துரிதமாக செயல்பட்ட சாரதி, சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தியுள்ளார் |
எச்சரிக்கை! இலங்கைப் பயணம்: உயிருக்கு ஆபத்து! – அமெரிக்கா பகிரங்க அறிவிப்பு!
பதறவைக்கும் எச்சரிக்கை! இலங்கைப் பயணம்: உயிருக்கு ஆபத்து! – அமெரிக்கா
கொள்கலன் விடுவிப்புக்கும் அமைச்சரவை மாற்றத்துக்கும் தொடர்பில்லை! [Wednesday 2025-10-15 07:00]
![]() இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை சுங்கத்தால் சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பான விசாரணைகளுடன் சமீபத்திய அமைச்சரவை மறுசீரமைப்பை இணைக்கும் கூற்றுக்களை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ நிராகரித்தார் |
ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு - இரண்டாவது நாளாக போராட்டம்! [Wednesday 2025-10-15 07:00]
![]() இலங்கை ஆசிரியர் சங்கம் நேற்று இரண்டவது நாளாகவும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர் |
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக 30 கோடி ரூபா மோசடி செய்தவர் கைது! [Wednesday 2025-10-15 07:00]
![]() வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் 30 கோடி பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். |
14 அக்., 2025
16 நாட்களுக்கு பின்னர் வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த்! [Tuesday 2025-10-14 16:00]
![]() தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது |
நாளை முதல் வெளிநாட்டவர்கள் மின்னணு பயண அங்கீகாரம் பெறுவது முக்கியம்! [Tuesday 2025-10-14 16:00]
![]() இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டினரும் இலங்கைக்குள் நுழைவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரம் (ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த அனுமதியைப் பெறுவது நாளை (15) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வந்தவுடன் இலவச சுற்றுலா விசாவுக்கு தகுதியுள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும் இந்த அனுமதியைப் பெற வேண்டும். |
நேபாளத்தில் சிக்கினார் செவ்வந்தி!- யாழ். தம்பதியும் கைது! [Tuesday 2025-10-14 16:00]
![]() ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதற்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர், நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் |
நாளை முதல் இலங்கையில் அறிமுகமாகும் ETA புதிய விதிமுறை
இலங்கை அரசு அறிவித்துள்ள புதிய நடைமுறைப்படி, 2025 அக்டோபர் 15ஆம் திகதி முதல் நாட்டுக்கு வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தங்கள் பயணத்திற்கு முன் இலத்திரனியல் பயண அனுமதி “Electronic Travel Authorisation (ETA)” அனுமதி பெறுவது கட்டாயம்.
இது நாட்டின் எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தவும், நுழைவு நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் வகை செய்யப்படுவதாக குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகள் கூறியதாவது, முன்கூட்டியே ETA விண்ணப்பத்தை பூர்த்தி செய்தல் மூலம் விமான நிலையங்கள் மற்றும் பிற நுழைவு புள்ளிகளில் நேரம் வீணாகாமல், பயணிகளுக்கான நுழைவு சீராக நடைபெறும்.
பயணிகளும் வணிக நோக்கில் வருபவர்களும் தங்கள் ETA விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் www.eta.gov.lk மூலம் விமானத்தில் ஏறும் முன்பே சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்தியா வெளிநாட்டு குடிமக்களுக்காக 2025 அக்டோபர் 1ஆம் திகதி முதல் “Digital Arrival Card” என்ற புதிய முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய முறைப்படி, வெளிநாட்டு பயணிகள் தங்களின் வருகை விவரங்களை (Disembarkation Card) வருகைக்கு முன் 72 மணிநேரத்திற்குள் ஆன்லைனில் பூர்த்தி செய்யவோ அல்லது நாட்டிற்கு வந்த பிறகு கையால் நிரப்பவோ முடியும்.
டிஜிட்டல் விண்ணப்பம் பின்வரும் வழிகளின் மூலம் செய்யலாம்:
- இந்திய விசா அதிகாரப்பூர்வ இணையதளம்
- Indian Visa Su-Swagatam மொபைல் செயலி
- விமான நிறுவனங்கள் வழங்கும் QR குறியீடுகளை ஸ்கேன் செய்வது
இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, காகித வடிவப் படிவங்கள் இன்னும் ஆறு மாதங்கள் வரை கிடைக்கும், அதன் பிறகு முழுமையாக டிஜிட்டல் முறைமைக்கு மாறப்படும் என கூறப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியா இரண்டும் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தி, டிஜிட்டல் குடிவரவு முறைகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் மடக்கிப் பிடிப்பு!
‘அஜித்குமார் ரேஸிங்’ சாதனை: அஜித்தை காண ரசிகர்கள் குவிந்தனர்!

ஸ்பெயின் ரேஸ் களத்தில் அஜித்குமாரை பார்க்க ரசிகர்கள் கு
காகிதத்தில் வீடு கட்டிக் கொடுத்த அரசாங்கம்! [Tuesday 2025-10-14 07:00]
![]() வீடு கட்டும் காணி அடையாளப்படுத்தவில்லை. காணியில் அடிக்கல் நாட்டு விழா நடத்த வில்லை. புது வீடு கட்டி, புதுமனை புகு விழா, நடத்த வில்லை. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு, நீர், மின்சாரம், வீதி ஆகிய உட்கட்டமைப்பு பணிகள் முடித்து வைக்கப்படவில்லை. இதில் எதுவும் செய்யாமல், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக, இலங்கைக்கு பாரதம் நன்கொடையாக வழங்கும் இந்திய வீடமைப்பு திட்ட நிகழ்வு ஒன்றில், பயனாளிகள் என்று சிலரை அழைத்து வெறும் காகிதத்தில் உங்களுக்குக் காணியும், வீடும், தருகிறோம் என எழுதிக்கொடுத்து அனுப்பி உள்ளார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். |
13 அக்., 2025
பாப் பாடகி கேத்தியுடன் அரை நிர்வாண கோலத்தில் ஜஸ்டின் ட்ரூடோ ; சமூக ஊடகங்களில் வைரல்

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணை' - உச்ச நீதிமன்ற உத்தரவு முழு விவரம்
'யாருமே யூகிக்க முடியாத கூட்டணி ஒன்று உருவாகும்' - டி.டி.வி தினகரன்! [Monday 2025-10-13 07:00]
![]() தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''நான் சொல்வதை நிறையப் பேர் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். ஏற்கனவே நான்கு கூட்டணிகள் அமைய வாய்ப்பு |
மோசடி விவகாரம்: மைத்திரிபால சிறிசேனவிடம் 5 மணி நேரம் விசாரணை
பாலஸ்தீனியக் கைதிகள் 1,966 பேரும் விடுவிக்கப்பட்டு பேருந்துகளில் ஏற்றப்பட்டனர்!
![]() |
| விடுதலையான பாலஸ்தீனியக் கைதிகளை பொறுப்பெடுக்கும் செஞ்சிலுவைச் சங்கம் |
ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக திங்கட்கிழமை விடுவிக்கப்படவிருந்த 1,966 பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேலிய சிறைகளில் பேருந்துகளில் ஏறிச் சென்றதாக, இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இவர்களில், காசாவைச் சேர்ந்த 1,716 பேர் காசாவின் நாசர் மருத்துவமனையில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இடமாற்றத்தில் முறைகேடு - வடக்கில் ஆசிரியர்கள் போராட்டம்! [Monday 2025-10-13 16:00]
![]() ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறு, தற்போது உள்ள ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் பாகுபாடு மற்றும் பழிவாங்கல் காணப்படுவதுடன் தற்போது உள்ள அரசாங்கத்தின் கீழ் சில அதிகாரிகள் அவர்களின் சுயலாபத்துக்காகவும் அரசாங்கத்தினுடைய ஆசிரியர் தொழிற்சங்கத்தின் நன்கிழுக்காகவும் செயல்பட்டு கொண்டு உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர் |
வட மாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்! [Monday 2025-10-13 16:00]
![]() வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி இன்று (13) காலையில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர் |
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் முக்கிய அரசியல் தலைவர் விரைவில் கைது! [Monday 2025-10-13 16:00]
![]() ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கைது வரும் நாட்களில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவர் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் இந்த அரசியல்வாதி கைது செய்யப்படுவார் என்பது அறியப்படுகிறது |
வடக்குக்கு முதலமைச்சர் வேட்பாளரை தேடும் அமைச்சர்கள்
மாகாணசபைத் தேர்தலுக்குரிய ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளை தென்னிலங்கைப் பிரதான கட்சிகள் உள்ளகரீதியில் முன்னெடுத்துள்ளன.
ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி, வடக்கு - கிழக்கில் களமிறங்கவுள்ள தமது கட்சியின் முதல்வர் வேட்பாளர்கள் பற்றி அவதானம் செலுத்தியுள்ளது.
குறிப்பாக வடக்கு முதல்வர் வேட்பாளரைத் தெரிவுசெய்யும் பொறுப்பு அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிமல் ரத்நாயக்க அண்மையில் யாழ். வந்தபோது கூட இது சம்பந்தமாக இராமலிங்கம் சந்திரசேகரிடம் கலந்துரையாடியுள்ளார் என அறியமுடிகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக்கட்சியின் முன்னாள் எம். பி.க்கள் பலர், மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவதற்குத் திட்டமிட்டுள்ளனர். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபைத் தேர்தல்களில் களமிறங்குவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி மாகாணசபை முதல்வர் வேட்பாளராகக் களமிறங்கத் திட்டமிட்டுள்ளனர் . இதுபற்றிக் கட்சித் தலைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர் என அறியமுடிகின்றது.
கடந்த பொதுத்தேர்தலில் பெருமளவான எம்.பி.க்கள் தோற்கடிக்கப்பட்டதால் மாகாணசபைத் தேர்தலில் அதிகளவான முன்னாள் எம்.பி.க்கள் போட்டியிடக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது
12 அக்., 2025
ஜெனிவாவில் அர்ச்சுனாவின் செயற்பாடு- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்டனம்! [Sunday 2025-10-12 17:00]
![]() ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாடுகளை கடுமையாக கண்டிப்பதாக வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாகப் போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். |
5வது கட்ட நிதியை வழங்க ஐஎம்எவ் நிபந்தனை! [Sunday 2025-10-12 17:00]
![]() சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ், ஐந்தாவது ஆய்வை நிறைவு செய்து நிதியை விடுவிக்க இலங்கை இரண்டு முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. அதாவது, ஐந்தாவது தவணையாக 347 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியைப் பெறுவதற்கு, அரசாங்கம் பின்வரும் இரண்டு முக்கிய நடவடிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். |
ஐ.நா பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு 3.8 மில்லியன் அமெரிக்க டொலர் தேவை! [Sunday 2025-10-12 17:00]
![]() ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, 2025 ஒக்டோபர் முதல் 2027 செப்டம்பர் வரையிலான இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு நிதியளிக்க, 3.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை, அதாவது இலங்கை ரூபாயில் 1.1 பில்லியன்களை கோரியுள்ளது. |
மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் முடிவு! [Sunday 2025-10-12 17:00]
![]() பல ஆண்டுகளாகத் தாமதமாகி வந்த மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழல்கள், குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் ஆகியவற்றின் பின்னணியில், இந்தத் தேர்தல்களை விரைவாக நடத்தி முடிப்பதற்கான நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. |
இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்: இருளில் மூழ்கிய உக்ரைன்! [Sunday 2025-10-12 07:00]
![]() உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் பரவலான மின்தடை ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா இரவோடு இரவாக நடத்திய வான்வழி ஏவுகணை தாக்குதலில் தலைநகர் கீவ் மற்றும் எட்டுக்கும் மேற்பட்ட நகரங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5,40,000 பொதுமக்கள் இந்த மின்தடை காரணமாக இருளில் மூழ்கியுள்ளனர். |
நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
Entr
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நாட்டில் எந்தச் சட்டமும் இல்லை! [Saturday 2025-10-11 15:00]
![]() மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நாட்டில் எந்தச் சட்டமும் இல்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார் |
11 அக்., 2025
இமயமலை உச்சியில் சூப்பர்ஸ்டார்! மகாவதார் பாபாஜி குகையில் ஆழ்ந்த தியானம்! ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து அசத்தல்!

உலகெங்கும் உள்ள கோடான கோடி ரசிகர்களின்
அதிகளவு மாத்திரைகளை உட்கொண்ட பெண் மரணம்! [Saturday 2025-10-11 06:00]
![]() யாழ்ப்பாணத்தில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்ட வயோதிபப் பெண் ஒருவர் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். மானிப்பாய் - சாத்தாவத்தை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் சிந்தாத்துரைமேரி (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் |
கிளிநொச்சியில் தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்,2ஆம் லெப்டினன்ட் மாலதி நினைவேந்தல் நிகழ்வு! [Saturday 2025-10-11 06:00]
![]() தமிழீழ பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப்டினன்ட் மாலதி அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் சிறப்பாக நினைவுகூரப்பட்டது |
ஏக்ய ராஜ்யவுக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சி வாக்களிக்கும்! [Saturday 2025-10-11 06:00]
![]() சமஷ்டியை நாங்கள் விட்டுக்கொடுக்கவில்லை. தமிழ் அரசுக் கட்சியை மலினப்படுத்தி அழித்து விடலாம் என்பது பகல் கனவே என தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார் |
அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை-கடை உரிமையாளருக்கு 6 இலட்சம் ரூபா அபராதம்! [Saturday 2025-10-11 06:00]
![]() தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 6 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (09) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றின் உரிமையாளர் 70 ரூபாவுக்கு விற்கப்படும் தண்ணீர் போத்தலை 90 ரூபாவுக்கு விற்பனை செய்து வந்துள்ளார் |
இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது |
10 அக்., 2025
இன்னும் இரண்டு நாட்களில்... சுவிட்சர்லாந்துக்கு பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி
ஞாயிற்றுக்கிழமை, அதாவது, அக்டோபர் மாதம் 12ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் Entry/Exit System (EES) திட்டம் அமுலுக்கு வருவதால், சுவிட்சர்லாந்து செல்லும் மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இனி மின்னணு முறையில் முன்பதிவு செய்யவேண்டியிருக்கும்.
விமானத்தில் அசைவ உணவு வழங்கியதால் உயிரிழந்த இலங்கையர்! [Friday 2025-10-10 16:00]
![]() கத்தார் ஏர்வேஸ் விமானத்தில், சைவ உணவு கேட்ட இலங்கையர் ஒருவருக்கு அசைவ உணவு சாப்பிட்டதால் மரணம் சம்பவைத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவு வழங்கப்பட்டதால், அதை சாப்பிட்ட ஓய்வுபெற்ற இருதய நிபுணர் அசோகா ஜெயவீரா மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது |

































