இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் இன்று முதல் மூடப்படவுள்ளது. வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வே அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது |
-
31 ஜூலை, 2023
கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் இன்றுடன் மூடப்படுகிறது!
13ஐ நடைமுறைப்படுத்தினால் செய்ய வேண்டியதை செய்வோம்! - எச்சரிக்கிறார் எல்லே குணவங்ச
13 ஆவது திருத்த அமுலாக்க திட்டத்தை அரசாங்கம் கொண்டு வரட்டும், அதன் பின் செய்ய வேண்டியதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார். |
நிலம் பறிபோன பின் சமஷ்டி எதற்கு?
13வது திருத்தத்தை வேண்டாம் என எதிர்ப்பவர்கள், எமது நிலமும் பறிபோய் இனப் பரம்பலும் மாற்றப்பட்டதன் பின் சமஷ்டியைப் பெற்று என்ன பயன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார் |
ஓமந்தையில் தரித்து நின்ற வாகனங்களை மோதிய லொறி! - ஒருவர் பலி.
வவுனியா- ஓமந்தை பிரதேசத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
30 ஜூலை, 2023
ஷாய் ஹோப் அபாரம்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி
ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் தமிழில் நிகழ்த்திய உரை வெளியானது!
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான், தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழில் உரையாற்றியதாகக் கூறப்படும் காணொலி ஒன்றை, கலாநிதி றொஹான் குணரட்ன வெளியிட்டுள்ளார். |
29 ஜூலை, 2023
இனப்படுகொலையாளிகள் சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்!
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விசாரணை சர்வதேச மட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு இனப்படுகொலையினைச் செய்திருக்கக்கூடிய இனப்படுகொலையாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிலே நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்படவேண்டும் என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார் |
கொழும்பு வந்த பிரான்ஸ் ஜனாதிபதி! - ரணிலுடன் சந்திப்பு.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தனது தென் பசுபிக் பிராந்தியத்திற்கான விஜயத்தின் பின்னர் நேற்றுஇலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பிரான்ஸ் ஜனாதிபதியொருவர் இந்நாட்டுக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும். |
28 ஜூலை, 2023
Welcome ஒரே இரவில் 7 மாதா சொரூபங்களை சேதப்படுத்திய விசமிகள்!- ஆனைக்கோட்டை மக்கள் அதிர்ச்சி.
ஆனைக்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை இரவு ஏழு மாதா சொரூபங்கள் இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளன. |
கொக்குத்தொடுவாய் புதைகுழிக்கு நீதி கோரி முல்லைத்தீவில் பாரிய பேரணி
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. |
தமிழ் பொலிஸ் தேவை இல்லை என்கிறார் சுரேன் ராகவன்!
சர்வகட்சி மாநாட்டில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார் |
முல்லைத்தீவில் நாளை தனியார் பேருந்து சேவை முடங்கும்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை இடம்பெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது |
தேர்தல் குறித்து பேச்சு எடுத்ததும் எழுந்து ஓடினார் ஜனாதிபதி!
நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டின் போது மாகாணசபைத் தேர்தலை நடாத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்த போது அவர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார் |
போரணி
27 ஜூலை, 2023
பிக்போஸ் 7 இல் பங்குபற்றும் நபர்கள் இவர்கள் தான்
பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த மருத்துவர்கள்
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 21.05.2023 அன்று சத்திரசிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்த கருநாட்டுக்கேணியைச் சேர்ந்த 34 வயது பெண்ணின் வயிற்றி துணியை வைத்து தைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. |
13 ஆவது திருத்தம் குறித்து அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாட வேண்டும்
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் |
ஹர்த்தாலுக்கு தமிழ் அரசுக் கட்சி ஆதரவு!
இலங்கையில் மனிதப் புதைகுழிகளுக்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் ஆதரவு வழங்குகிறோம் என அறிவித்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அனைத்து அமைப்புகளும் ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது |
உக்கரைன் தவறான வழியில் செல்கிறதா உதவும் நாடுகளின் வழிநடத்தல
தீவிரமடையும் உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதல்! ரஷ்யா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
கனடாவின் அமைச்சராக கரி ஆனந்தசங்கரிநியமிக்கப்பட்டுள்ளார்
ஈழத் தமிழர் சரித்திரத்தில் அதி உச்ச வரலாற்றுப் பதிவு
-----------------------------------------------------------------------
இலங்கை தமிழன் வெளிநாடு ஒன்றில் அமைச்சராக பதவி ஏற்கும் முதலாவது வரலாறு இதுவாகும் எந்தவித விருப்பு வெறுப்பு இன்றி ஹரியை பாராட்டி வாழ்த்துவோமாக கனடாவின் பழங்குடியின உறவுகள் அமைச்சராக முதல் தடவையாக
26 ஜூலை, 2023
செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!
கொழும்பில் பதற்றம்: அனைத்து பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்
24 புள்ளிகளை பெற்றால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இ
போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளி செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
omவவுனியா தோணிக்கல் சம்பவம் ; கணவனும் உயிரிழப்பு
வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த காடையர்கள் ஆடிய வெறியாட்டத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர்
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் ட்ரோன்கள்!
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உக்ரேனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் திங்களன்று உக்ரேனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அவற்றில் சில சிதைவுகள் நகர மையத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகத்திற்கு அருகில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது |
கனடாவின் அமைச்சரவையில் மாற்றம்?
கனடாவின் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தில் இவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. |
யாழ்ப்பாணத்தில் உருவெடுத்த மத துவேசம் - மாணவர்கள் வீதிக்கிறங்கி பெரும் குழப்பம்
13இன் பொலிஸ் அதிகாரங்களை பறிக்க வருகிறது 22ஆவது திருத்தம்! [Tuesday 2023-07-25 03:00]
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் 22ஆவது திருத்தச்சட்டத்தை அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது |
சர்வகட்சிக் கூட்டம் - புறக்கணிக்கும் ஜேவிபி!
ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள சர்வ கட்சி கூட்டத்தை தேசிய மக்கள் சக்தி புறக்கணிப்பதாக அதன் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். |
9 மாத குழந்தையின் சடலத்துடன் தாயை அலைக்கழித்த வைத்தியசாலை நிர்வாகம்!
உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் அம்பியூலன்ஸ் வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது |
கறுப்பு ஜூலையின் 40 ஆம் ஆண்டை நினைவுகூர்ந்து கனடியப் பிரதமர் வெளியிட்ட அறிக்கை!
“நாற்பது வருடங்களுக்கு முன்பு, 1983 ஆம் ஆண்டு ஜூலையில், இலங்கையெங்கும் தமிழர்களுக்கு எதிராகக் கொடூரமான படுகொலைகள் புரியப்பட்டன. இவற்றில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து, பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்தார்கள், இடம்பெயர்க்கப்பட்டார்கள், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள் |
நாளை சர்வகட்சி மாநாடு!
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. |
24 ஜூலை, 2023
இந்தியா காலூன்றினால் வடக்கு –கிழக்கு இலங்கையில் இருந்து துண்டாடப்படும்!
இலங்கையில் இந்தியா காலூன்ற நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருக்கும் எவரும் கை உயர்த்தக் கூடாது. அது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார் |
13 குறித்து ஆராய அனைத்துக் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு
13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கூட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். நாளை மறுதினம் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. |
அனைத்து மீறல்களுக்கும் இலங்கை பொறுப்புக்கூற வேண்டும்!
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம் மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார் |
23 ஜூலை, 2023
கொழும்பில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்- பொலிசாரும் இனவாதிகளும் குழப்பம் விளைவிப்பு! Top News [Sunday 2023-07-23 19:00]
கொழும்பில் இன்று கறுப்பு ஜூலையை குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வை சிங்கள பேரினவாதிகளும் பொலிஸாரும் குழப்ப முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது |
புலிகளின் கொள்கையுடையவர டெலிகொம்மை கைப்பற்றுவார்!
டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் கைப்பற்றுவார். டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர சமர்ப்பித்த அறிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான நாலக கொடஹேவா தெரிவித்தார் |
சர்வதேச தலையீடுகள் இல்லாத பொறிமுறைகளால் பயனில்லை!
நிலைமாறுகால நீதியை முன்னிறுத்தி அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் எந்தவொரு பொறிமுறையும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீடின்றி பயனுடைய மற்றும் செயற்திறனான பொறிமுறையாக அமையாது என்று வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு சுட்டிக்காட்டியுள்ளது |
கறுப்பு ஜூலையில் உயிர் பிழைத்தவர்களுடன் கனேடியப் பிரதமர்!
இலங்கையில் கறுப்பு ஜூலையில் உயிர்பிழைத்தவர்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்துள்ளார் |
20 ஜூலை, 2023
பிரான்ஸ் ஜனாதிபதி சுவிட்சர்லாந்துக்கு விஜயம் July 18, 2023
பிரான்சின் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளார்.
சுவிசின் இந்த நதிகளில் நீராடுவது குறித்து எச்சரிக்கை July 19, 2023
விட்சர்லாந்தில் சில நதிகளில் நீராடுவது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்த விரும்புவதாக சுவிஸ் அறிவிப்பு
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
19 ஜூலை, 2023
சாக்லேட்டில் நோய்க்கிருமிகள்: சுவிஸில் 49 குழந்தைகள் பாதிப்பு!
சுவிட்சர்லாந்தில் ஒரு குறிப்பிட்ட சாக்லேட்டை சாப்பிட்ட பிள்ளைகளில் 49 பேர் கடந்த ஆண்டில் நோய்க்கிருமி ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கிண்டர் சாக்லேட் என்னும் சாக்லேட்டுகளில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி பாதிப்பு இருந்ததால், அவற்றை சாப்பிட்ட 49 பிள்ளைகள் கடந்த ஆண்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் |
வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகளை நடத்தவும் தடை!
யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளி ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரத்தியேக வகுப்புகள் இடம் பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன அவர்களும் இந்த விதிமுறைகளுக்கமைய செயற்பட வேண்டும் தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை |
பொலிஸ் அதிகாரம் இல்லாத 13 ஆவது திருத்தம்!- ஜனாதிபதியின் யோசனையை நிராகரித்த கூட்டமைப்பு.
பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதை தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது. அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்விற்கான ஜனாதிபதியின் முன்மொழிவை மற்றுமொரு வெற்று வாக்குறுதி எனவும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது |
பாதையில் குவிக்கப்பட்ட சடலங்கள்! வாக்னர் படையினரின் கொடூர செயல் அம்பலம்
வாக்னர் கூலிப்படையினர் தமது சொந்த வீரர்களை படுகொலை செய்வதாக
13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்!
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த பிரேரணையை தாம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தமிழ் கட்சிகளின் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் |
கொழும்பில் ஹோட்டலில் யுவதி பாலியல் வன்புணர்வு -கோடீஸ்வர வர்த்தகர் கைது
கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் யுவதியை பாலியல்
18 ஜூலை, 2023
அரசியல் தீர்வு குறித்து தமிழ் எம்.பிக்களுடனான சந்திப்பில் வாய் திறக்காத ஜனாதிபதி!
புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டத்தை உரிய திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் உறுதியளித்துள்ளார். |
இலங்கை அணியினை சரிவில் இருந்து மீட்ட மெதிவ்ஸ் – தனன்ஞய ஜோடி
சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணியானது தனன்ஞய டி சில்வா –
கருங்கடல் தானிய ஒப்பந்த ஏற்றுமதியை நிறுத்தியது ரஷ்யா!! பொருட்களின் விலை அதிகரிக்குமா?
சிறீதரன் எம்.பியுடன் கனேடிய தூதுவர் சந்திப்பு!
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்கு இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்றுள்ளது |
மட்டக்களப்பு போராட்டத்தில் சாணக்கியனை தாக்க பிள்ளையான் கட்சி உறுப்பினர்கள் முயற்சி! Top News [Monday 2023-07-17 16:00]
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மீது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆரையம்பதி வட்டார தலைவர் ஒருவர் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார் |
ஐந்து தமிழ்க் கட்சித் தலைவர்களுடன் அமெரிக்க தூதுவர் ஆலோசனை!
வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் பாராளுமுன்ற உறுப்பினர்கள் ஐவருடன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இன்று முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சி.வி.விக்னேஸ்வரன், சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர். |
17 ஜூலை, 2023
அமலாக்கத்துறை சோதனை: அமைச்சர் பொன்முடி தூத்துக்குடி வருகை ரத்து
ஒரு மாதத்தில் 29,578 பேர் இணைய வழியில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம்
இணையவழியில் கடந்த ஒரு மாதத்தில் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 24 ஆயிரத்து 285 பேர் சாதாரண முறைமையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். |
16 ஜூலை, 2023
அரசிற்குள் ஆழமாக வேரூன்றியுள்ள சிங்கள பௌத்த தேசியவாதம்! - பேர்ள் அமைப்பு குற்றச்சாட்டு.
குருந்தூர்மலை பொங்கலை குழப்ப முயன்றவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்த தவறியுள்ளமை அரசிற்குள் சிங்கள பௌத்த தேசியவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளதை புலப்படுத்துகின்றது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான அமைப்பு பேர்ள் தெரிவித்துள்ளது |
ஊர்காவற்றுறையில் மாணவியை தாக்கியதாக பாடசாலை அதிபர் கைது!
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் குறித்த பாடசாலை அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர் |
25 வருட ஆசிய தடகள சாதனையை முறியடித்த இலங்கை வீராங்கனை!
தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன 25 வருட சம்பியன்ஷிப் சாதனையை முறியடித்து தங்கம் வென்றுள்ளார். இந்த போட்டியில் கயந்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். |
ரணிலின் இந்தியப் பயணத்தின் போது 5 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகும
எதிர்வரும் ஜூலை 20-21 வரையிலான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் முக்கியமான ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள் |
யாழ்ப்பாணத்தில் அரசியல் கலந்துரையாடல் - ஆட்களை விட ஆசனங்களே அதிகம்! Top News [Sunday 2023-07-16 07:00]
அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் - இந்தியாவின் வகிபாகமும் பற்றிய கலந்துரையாடல் நேற்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. |
15 ஜூலை, 2023
தமிழ்மக்களின் மத வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது!
குருந்தூர் மலையில் பொங்கல் பொங்கி வழிபாட்டில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்த போதிலும், பொலிஸார் மற்றும் சிங்கள பிக்குகள் இணைந்து அதனைத் தடுத்திருப்பதன் மூலம் தமிழ்மக்களின் மத வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது' என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கஜேந்திரன்,தெரிவித்துள்ளார் |
7 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!- தந்தையும் மாமனும் கைது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை மற்றும் மாமனார் ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் |
14 ஜூலை, 2023
சர்வதேச நியமங்களுக்கு அமைய கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வு! - நேற்றைய கூட்டத்தில் தீர்மானம்.
முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06,2023 அன்று விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற சீருடைகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான அகழ்வு பணிகள் கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன |
மாணவிகள் துஷ்பிரயோகம் - யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் கைது!
யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த இலவச வகுப்பு நடத்தி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். |
13 ஜூலை, 2023
கனேடிய எம்.பி. ஹரி ஆனந்தசங்கரிக்கு விசா வழங்க மறுத்தது இலங்கை அரசு!
கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு, அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. ஹரிஆனந்தசங்கரி தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார் |