புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஆக., 2019

முருங்கன் விபத்தில் இரு இளைஞர்கள் பலி

மன்னார் - முருங்கன் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அளவக்கையில் இருந்து முருங்கன் நோக்கி சென்றபோது வேக கட்டுப்பாட்டினை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் குறித்த இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்தில்

சஜித்தை பிரதமராக்கும் முயற்சி தோல்வி

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசாவை பிரதமராக நியமிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சஜித் பிரேமதாசாவை பிரதமராக்கி புதிய அமைச்சரவையை

சிறுமி துஸ்பிரயோகம் - தாத்தா கைது

மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் ஆறு வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட முதியவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உலகெங்கும் பறந்து வாழும் புங்குடுதீவு உறவுகளுக்கு பெருமை சேர்க்கும் ஒரு உன்னதம் 
என் நீண்ட கால ஆருயிர் நண்பன்  தியாகலிங்கம் அவர்களின்   புத்திரனின் சாதனையை  ஒரு முறை  இதயபூர்வமாக பாராட்டி  மகிழ்வோம் உலகெங்கும் பறந்து வாழும் புங்குடுதீவு உறவுகளுக்கு பெருமை சேர்க்கும் ஒரு உன்னதம் 
-----------------------------------------------------------------------------
என் நீண்ட கால ஆருயிர் நண்பன் தியாகலிங்கம் அவர்களின் புத்திரனின் சாதனையை ஒரு முறை இதயபூர்வமாக பாராட்டி மகிழ்வோம் டோஸ்ட் 2 வெற்றி நிகழ்வின் வேகத்தை உருவாக்கி, எங்கள் தொழில்முறை சிறப்பான விருதுகளின் வெற்றியாளர்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். முதலில் எங்கள் வளர்ந்து வரும் தொழில்முறை விருது பெற்றவர், ஷானோஜன் தியாகலிங்கம்.
டொராண்டோவில் பிறந்து வளர்ந்த ஷானோஜன் தனது கல்வி வாழ்க்கையை வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் தொடங்கினார்.

24 ஆக., 2019

தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காமல் சிங்களவர்களுக்கு சுதந்திரம் கிடைக்காது

வடக்கு- கிழக்கு தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும் வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு முழுமையான சுதந்திரமும், ஜனநாயகமும் கிடைக்காது என்று ஐக்கிய சோஷலிச கட்சித் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்

வெளிநாட்டுத்தமிழர் நடத்தும் இணையத்தளங்கள் முடக்கப்பட சிஐடியிடம் முறைப்பாடு-செல்வம் அடைக்கலநாதன்

தாம், பல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டதாக ஆதாரமற்ற செய்தியை வெளியிட்டதாக சில இணையத்தளங்களுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்.

இணையத்தளங்கள் மீது சிஐடியிடம் முறைப்பாடு!

தாம், பல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டதாக ஆதாரமற்ற செய்தியை வெளியிட்டதாக சில இணையத்தளங்களுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்

மைத்திரிக்கு கோத்தா உத்தரவாதம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் இரகசியசந்திப்பு கொழும்பில் நடைபெற்றுள்ளது.

வாய்மூல உறுதிமொழிகளை ஏற்பதில்லை-கூட்டமைப்பு


ஜனாதிபதி தேர்தலின் போது வெறுமனே பேச்சளவில் உறுதிமொழிகளை வழங்கும் தரப்பினரை ஆதரிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போது வெறுமனே பேச்சளவில் உறுதிமொழிகளை வழங்கும் தரப்பினரை ஆதரிக்க முடியாது என்று தமிழ்த்

திருப்பி அனுப்பப்பட்ட தூக்கு காவடிகள்!


நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவில் இன்று கார்த்திகைத் திருவிழாவை முன்னிட்டு, தூக்கு காவடி எடுத்து வந்த பக்தர்கள் செட்டித் தெருச் சந்தியுடன் தடுத்து நிறுத்தப்பட்டனர். இம்முறை ஆலயத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுக்கமாக இருப்பதால் பொலிஸார் தூக்கு காவடிகளை ஆலயத்துக்கு அண்மையில் அனுமதிக்க மறுத்து வருகின்றனர்

ஸ்ரீலங்கன் விமான சேவையை லைக்கா நிறுவனத்திற்கு

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் சுதந்திரக் கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கத்தினர் ஊடக சந்திப்பொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தனர்.

கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ,ரிசாட்டின் கட்சிஆகியன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் முரண்பாடான நிலைமை இந்த வார இறுதிக்குள் தீர்க்கப்படும் என அமைச்சர் பி. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை சந்தித்த ததேகூ என்ன பேசியது? 28ல் முக்கிய பேச்சு!

தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எடுத்துரைத்துள்ளது.

சவேந்திர சில்வாவிற்கு எதிரான சர்வதேச குற்றங்களின் சாட்சியங்கள்- நேரு குணரட்ணம்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற போர் குற்றங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானக் குற்றங்களின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்படுவது இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பரிகாரநீதி மட்டுமன்றி சர்வதேச உலகில் மேலும் மக்கள் இவ்வாறான குற்றங்களுக்கு
சுவிஸ் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம் தனது  அனுசரணையுடன்  முல்லைத்தீவு   மாவட்டத்தில் நான்கு பாடசாலைகளுக்கான இன்னிங்ஸ் முறையிலான  கடினப்பந்து துடுப்பாட்ட சுற்று போட்டியொன்றை நடத்துகின்றது தமிழ் கிரிக்கெட் வீரர்களை வளர்த்தெடுத்து  இலங்கை தேசியய அணியில் இடம்பிடிக்க ஊக்குவிக்குமுகமாக இந்த சுற்றினை  சம்மேளனம்  நடத்துகின்றது 

எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு முனைவர் பட்டம்! மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தமிழக ஆளுநர் வழங்கினார்!


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் முனைவர் பட்டம் (Doctorat

இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா இராணுவத் தலைமைத் தளபதியாக நியமனம் சிறிலங்காவில் மனிதம் மருணித்துவிட்டது என்பதை உறுதிசெய்கிறது. – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இனப்படுகொலையாளி சவேந்திரா சில்வா நியமிக்கபட்டமைக்கு சர்வதேசமே கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள் நிலையில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையும் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதோடு இந்த நியமனத்தை முன்னிட்டு ஆச்சரியப்படவில்லை, ஏனெனில்

23 ஆக., 2019

ஜனாதிபதியை சந்திக்கிறது கூட்டமைப்பு

வடக்கு மற்றும் கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளது. காணி விடுவிப்புடன் தொடர்புடைய விடயங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சின் கீழ் உள்ளடங்குகின்றன.

நீதியரசர் நீதிமன்றில் தோல்வி கண்டா வரலாறு உண்டே சாதாரண டெனிஸிடம் தோற்றுமாநாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவு படிப்பும் சிறந்த பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்-விக்னேஸ்வரன்


 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரளவு படிப்பும் சிறந்த பண்பும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்

மண்டையன் குழுவும் சிங்களசம்மந்தியும் நடத்தும் கோமாளிகள் கூடாரப்பிரசார யுக்தி தொடங்கியது 'எழுக தமிழ்' பிரசாரம்

பொங்குதமிழ் பாணியில் எழுகதமிழ் எடுத்தால் நெருங்கும் தேர்தலில் வெளுத்துக்கட்டலாம் என்ற நினைப்பில் இவர்களின் கூத்து எத் தனை நாளைக்கு தமிழ் இனத்தின் ஏகோபித்த அரசியல் ஓடத்தை மூன்றாக பிளக்கும் ராசதந்திரத்துக்கு விலைபோன விக்கியரும் மண்டையனும்

முடிவுக்கு வந்தது அவசரகாலச் சட்டம்

ஏப்ரல் 22ஆம் திகதி தொடக்கம் கடந்த நான்கு மாதங்களாக நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டம் நேற்றுடன் காலாவதியாகியுள்ளது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது

யார் அவர், யார் அவர், யார் அவர்”? மனோ கணேசன்

எங்கள் வேட்பாளரை இன்று முழு நாடும் “யார் அவர், யார் அவர், யார் அவர்” என தேடுகிறது. இதுவே எங்கள் வெற்றிக்கரமான ராஜதந்திரம். இன்று கோட்டா பழைய கஞ்சி. அனுர பழைய சாதம். முழு நாட்டின் அவதானத்தையும் எம் பக்கம் நாம் இன்று திருப்பி உள்ளோம். உரிய வேளையில் எமது

பிரான்ஸ் செல்ல முற்றபட்டஇன்டர்போலின் சிவப்பு தரவு பட்டியலில் உள்ள இருவர் கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி சிறிலங்கா வழியாக பிரான்ஸிற்கு பயணம் மேற்கொள்ள முயற்சித்த ஈரானிய பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

22 ஆக., 2019

காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்

ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிஐ வக்கீல் மற்றும் ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

ஐஎன்எஸ் மீடியா வழக்கில், சுவர் ஏறி குதித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது

விக்கியரை சந்திக்கப் போகிறார் ஆறுமுகம்

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று நடை பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 முக்கிய விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் கையளிப்பு

ஆறு முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை பதில் காவல் துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை,

சு.க.வில் இணையுமாறு கோட்டாவுக்கு அழைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்புரிமை பெற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் சங்கமித்தார் அனந்தி சசிதரன்

ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட முன் ராஜபக்ச அரசு குறித்து ஊடகவியலாளர் எழுதிய மரண சாசனம்!

இலங்கையிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் என்ற ஆங்கில வாரப்பத்திரிகையின் முதன்மை ஆசிரியராக பணியாற்றிய லசந்த விக்ரமதுங்க 11-01-2009 வெளியாக வேண்டிய

HIT NEWS
--------------
டெல்லியில் பெரும் பரபரப்பு! சுவர் ஏறி குதித்து வீடு புகுந்த சி.பி.ஐ! ப. சிதம்பரம் அதிரடி கைது

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் எகிறி குதித்தது அவரை கைது செய்தனர்.

சுவிஸ் பேர்ண் நகரில் சைவ மக்களுக்கான சுடுகாடு

சுவிஸ் பேர்ண் நகரில் உள்ள பிறேம்கார்டன் திருவடிப்பேறு நடைபெறும் திடலில் (Bremgartenfriedhof. Murtenstrasse 51. 3008 Bern) வைரவர் காளியம்மன் திருக்கோவிலுக்கான காற்கோள்விழா ‘அடிக்கல் நாட்டல்’ இன்று 10. 08. 2019 சனிக்கிழமை முற்பகல் நடைபெற்றது.

21 ஆக., 2019

முழு நாட்டுக்கும் கேடாகும்ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி யசூசி அகாசி நேற்று இரா.சம்பந்தனை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வது சர்வதேச சமூகத்தின் கடமை என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பங்களிப்புடன் தீர்ப்பாயம்-மனித உரிமைகள் கண்காணிப்பகம்

சர்வதேசத்தின் பங்களிப்புடன் உடனடியாக நீதி வழங்கலுக்கான தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியிருக்கிறது. லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமையை அடுத்து, மனித

சிறிதரன் வீடு படையினரால் சோதனை

கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டை இராணுவத்தினரும் பொலிஸாரும் சோதனையிட்டு வருகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சிறிதரன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சில்வா நியமனத்தால் பயங்கரமான சூழல்

சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக ஜனாதிபதி நியமித்துள்ளதன் மூலம் மிகவும் பயங்கரமானதொரு சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக

ஷவேந்திர சில்வா நியமனம்! உறுதிமொழிகள் மீறப்பட்டுள்ளன! ஐ.நா அதிருப்தி

இராணுவத் தளபதியாக லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பெட்ச்லெட் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அரசியல் கைதி தேவதசானை சந்தித்தார் வேலுகுமார்

அரசியல் கைதியான கனகசபை தேவதாசனை, புதிய மெகசின் சிறைச்சாலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், இன்று சந்தித்துள்ளார்.

ஒட்டுமொத்த அழிவுகளுக்கும் கோத்தாவே காரணம்இரா. துரைரெட்ணம்

வடக்கு, கிழக்கில் ஏற்பட்ட ஒட்டுமொத்தமான அழிவுகளுக்கும் காரண கர்த்தாவாக இருப்பது கோத்தாபய என்பதே உண்மை என முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் இரா. துரைரெட்ணம் தெரிவித்துள்ளார் . இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அனந்திக்கு எதிராக அவதூறு வழக்கு

தன் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அவதூறு ஏற்படுத்தினார் என வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார், வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன். முன்னாள் முதலமைச்சர்

எல்லையை மீறுகிறது அமெரிக்கா- விமல் வீரவன்ச

இராஜதந்திர எல்லைகளை மீறி அமெரிக்கா இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டது குறித்து அமெரிக்க வெளியிட்ட

வெளியார் தலையிட முடியாது-இலங்கை வெளிவிவகார அமைச்சு

இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை நாட்டின் இறையாண்மையுடன் தொடர்புடைய விவகாரம், அதில் வெளிச்சக்திகள் தலையிடக் கூடாது என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இராணுவத் தளபதியாக லெப். ஜெனரல் சவேந்திர

பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை பாதிக்கும்-கனேடிய தூதரகம்

இலங்கையின் புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதானது, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளைப் பாதிக்கும் என, கனடா தெரிவித்துள்ளது. சவேந்திர சில்வா நியமனம் குறித்து இன்று கனேடிய தூதரகம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

10 வருடங்களாக கதிர்காம பாதையை தனிவழியாக மாற்றியிருக்கும் புத்தளை யானை



பத்து வருடங்களாக புத்தளை வழியாக கதிர்காமம் செல்லும் பிரதான பாதை தனிவழி பாதையாக மாற்றியிருப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த யானை சுமார் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக புத்தளைக்கும் செல்லகதிர் காமத்திற்கும் இடையில் பிரதான பாதையினை மறைத்து நிற்பதாகவும் இந்த யானைக்கு சாப்பிடுவதற்கு எதனையாவது தந்த பின் வழிவிடுவதாகவும் இதனை பொது மக்கள் தங்கள் பயணத்தினை மேற்கொள்வதற்கு தொடர்ந்த இந்த பணியினை மேற்கொள்வதனால் அது தற்போது வழமைக்கு வந்துள்ளதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
பத்து வருடங்களாக புத்தளை வழியாக கதிர்காமம் செல்லும் பிரதான பாதை தனிவழி பாதையாக மாற்றியிருப்பதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த யானை சுமார் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக புத்தளைக்கும் செல்லகதிர் காமத்திற்கும் இடையில் பிரதான பாதையினை மறைத்து நிற்பதாகவும் இந்த யானைக்கு சாப்பிடுவதற்கு எதனையாவது தந்த பின் வழிவிடுவதாகவும் இதனை பொது மக்கள் தங்கள் பயணத்தினை மேற்கொள்வதற்கு தொடர்ந்த இந்த பணியினை மேற்கொள்வதனால் அது தற்போது வழமைக்கு வந்துள்ளதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்
இவ்வாறான கையூட்டல்கள் பெறுவதை இதற்கு முன் மனிதர்களே பெற்றுகொண்டு வாகனங்களை அனுப்புவதாகவும் தற்போது இவ்வாறு ஒரு யானை தனது வயிற்று பிழைப்புக்கு கையூட்டல்களை பெற்றுக்கொள்வதாக பொது மக்கள் கேலியாக தெரிவிக்கின்றனர். எது எவ்வாறான போதிலும் குறித்த யானை காட்டில் அலைந்து திரிந்து சாப்பிடாமல் ஒரே இடத்தில் இருந்து தனது உணவினை தேடிக்கொள்வதனால் இதன் ஆயுள் காலம் குறைந்து விடும் என பலர் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் கவனமெடுக்க வேண்டுமெனவும் பலர் கோரிக்கை விடுக்கின்றனர்.
இலங்கை மண்ணின் மைந்தன் பிக்போஸ் தர்சனை ஆதரிப்போம்  வாருங்கள்தர்சன் தியாகராசா -(ஆக்கம் சிவ-சந்திரபாலன் )
------------------------------
பெயர் -தர்சன் தியாகராசா
பிறந்த திகதி -17.09.1990
பிறந்த இடம் -யாழ்ப்பாணம்
வாழும் இடம் -தின்னவேலி .யாழ்ப்பாணம்
தந்தை பெயர் -தம்பு தியாகராசா
தாயின் பெயர் - தியாகராசா சியாமளா (நல்லையா )
உயரம் -6 அடி 1 அங்குலம் 180 cm 
நிறை 80 Kg
கண்கள் நிறம் -கறுப்பு
முடியின் நிறம்-கருப்பு 
சமயம் -சைவம் 
கல்வி -சென் ஜோன்ஸ் கல்லூரி 
லெளகீகம்- மணமாகாதவர் 
பிடித்த நடிகர்-விஜய் 
பிடித்த நடிகை . சனம் ரெட்டி 
வெற்றியாளர் -Mister Srilanka for Mister International 2016 and won the title.
கொரிய ஆணழகன் போட்டியின் வேட்பாளர் பங்குதாரர் தேசிய மட்டத்தில் Hurdles போட்டியில் இரண்டாம் இடம் பிடித்ததற்காக பரி யோவான் கல்லூரியின் அதியுயர் விருதான Johnian Eagle பதக்கத்தை வென்றவர
இந்த அரிய விருது  இருவருக்கே வழங்கப்பட்டிருத்தது. ஒருவர் 1972ல் இலங்கையின் U19 உதைபந்தாட்ட அணியில் இடம்பிடித்த அன்டனிப்பிள்ளை மாஸ்டர், மற்றவர் 1983ல் தேசிய U19 Cricket அணியில் ஆடிய திருக்குமார்.

தேசிய மட்டத்தில் Hurdles போட்டியில் இரண்டாம் இடம் பிடித்ததற்காக Johnian Eagle பதக்கத்தை வென்றவர 
தந்தை குடும்பம் ,வரலாறு .இலங்கைத் தீவின் பெருமைமிகு தீவகத்தில் புங்குடுதீவு மடத்துவெளியில் பிறந்த கே வி தம்பு அவர்கள் புங்குடுதீவு பத்தாம் வடடாரத்தில் பெண்ணெடுத்து குடும்பத்தோடு யாழ்ப்பாணம் சென்று வெலிங்டன் தியேட்டர் சந்தி ,இல.31 மணிக்கூண்டு வீதியில் அமைந்துள்ள முனீஸ்வரகபே என்ற பெருமைக்குரிய சைவ ஆசார உணவகத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தார் . உணவகத்தின் பின்பகுதியிலேயே இல்லம் அமைத்து வாழ்ந்து வந்த தம்பு அவர்களுக்கு பிறந்த தியாகராசா மூன்றாவதும் ஒரே ஒரு ஆண்மகனுமாவார் .இரண்டு மூத்த சகோதரிகளையும் சாந்தி என்ற ஒரு தங்கையையும் கொண்டவர் .கே வி தம்பு அவர்கள் முறைப்படி சங்கீத வாய்ப்பாடடை கற்று பிரபலமான சங்கீத வித்துவானாக திகழ்ந்துள்ளார் அடிக்கடி இலங்கை வானொலியில் இவரது நிகழ்ச்சி ஒலி பரப்பாகி வந்தது . அதோடு இசைக்கலைக்கு ஊக்கமளிக்கும் வகையில் அருகாமையிலேயே இளம்கலைஞர் மன்றத்தினை அமைக்க முன்னோடியாக செயல்படடார் தனது இசைத்துறையிலேயே தனது ஒரே மகனை ஈடுபடுத்தி தியாகராசாவை இந்தியாவுக்கு அனுப்பி சிறந்த வயலின் வித்துவானாக்கி மகிழ்ந்தார் . தினமும் காலை ஏழு மணிக்கே இவரது இல்லத்தில் இசைப்பயிச்சி ஆரவாரமாக நடக்கும் தந்தைபாட தியாகராசா வயலின் வாசிக்க சுமார் ஒரு மணிநேரம் இசைப்பிரவாகம் தான் . தனது உணவகத்தை உயிராக மதித்து பக்கத்திலேயே இருந்து கவனித்து வந்த தம்பு அவர்கள் 1991 இடப்பெயர்வில் பிரிய மனமில்லாது வெளியேற வேண்டிய சூழலில் தன்னுயிரையும் துறந்து விடடார் . பின்வந்த காலத்தில் தியாகராசா இந்த் நிறுவனத்தை இன்றுவரை திறம்பட நடத்தி வருகிறார் .தியாகராசாவின் சகோதர்களும் மனைவியின் சகோதரர்களும் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் இவர் மட்டும் இங்கேயே ஒருவித பிடிப்புடன் இருந்துவிடடார்
தாயாரின் குடும்பம் , வரலாறு .
புங்குடுதீவு மடத்துவெளி நல்லையா லடசுமி தம்பதியின் மூன்றாவது மகவு சியாமளா . தர்மபாலன்(கனடா )மாமா ,அமரர் மஞசுளா(கனடா )பெரியம்மா ,சியாமளா ,கிருஷ்ணபாலன்(சுவிட்சர்லாந்து) மாமா ,பிரேமிளா(யாழ்ப்பாணம் )சிறிய தாயார் என சகோதரர் வரிசை கொண்டவர் .இதில் தர்மபாலன் பி.காம் யாழ் பல்கலைகழக படடதாரி புங்குடுதீவு மகா வித்தியாலய அதிபராக பணியாற்றி இப்போது கனடாவில் வாழ்கிறார் .சிறந்த சமூக, ஆன்மீக பணியாளர் . இவர் கூட மடத்துவெளி சனசமூக நிலையத்தின் மலர்விழி நாடக மன்றத்தின் பல நாடகங்களில் நடித்துள்ள ஒரு சிறந்த நடிகர் அண்மைக்காலத்தில் காலமாகி விடட தர்சனின் பெரியம்மா திருமதி மஞ்சுளா நினைவாகவே அவரது கணவர் புங்குடுதீவு இரட்டை சந்தி அருகே கட்டி கொடுத்துள்ள பெருமைமிகு சிற்பக்கலை தரிசனமாக திகழும் கண்ணகி அம்மன் நுழைவாயில் அமைந்துள்ளது .
தர்சனின் வரலாறு
யாழ்ப்பாணத்தில் தனது ஆரம்ப கல்வியை கற்று தேறிய  பின் தர்சன் தொடர்ந்து தலைநகர் கொழும்பில் உள்ள Asia Pasific Institute of Informatuion Technology (APIIT ) நிறுவனத்தில் B,Tech software Engneering படிப்பை முடித்துள்ள இவர் மாடலிங் துறையில் ஈடுபாடாகி 2016 இல் இலங்கை மண்ணில் நடந்த  ஆணழகன் போட்டியில் வென்று மிஸ்டர் ஸ்ரீலங்கா விருதை வென்றார் அதன் நிமித்தம் கொரியாவில் நடந்த ஆணழகன் போட்டியிலும் பங்கு பற்றி  சிறப்பித்தார்
தர்சன்
அமெரிக்க கம்பெனியான Virtusa இல் பணியாற்றி அவுஸ்திரேலியாவுக்குமாற்றலாகி பின்னர் வேலையை துறந்து இந்தியா சென்று தன் முழுநேர கவனத்தையும் மாடலிங் நடிப்பு துறையில் செலுத்தினார் வேறென்ன வேண்டும் என்ற திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்துள்ள தர்சன் இந்தியாவில் தங்கி இருந்து மேலும் தகுதியை வளர்த்து கொண்டார் அந்த காலங்களில் பல பிரபலமான நிறுவனகளுக்கு மாடலிங் செய்து விளம்பரங்கள் தயாரிப்பில் ஈடுபடுத்தி கொண்டார் அவற்றில் போத்தீஸ் ,நண்டு மார்க் லுங்கி. குமரன் சில்க்ஸ் என்பன முக்கியமானவை .தற்போது பிரபலமான விஜய் டி வி இந்த பைக் போஸ் நிகழ்ச்சியின் போட்டியாளாராகி ஏகோபித்த ரசிகர்களின் விருப்பத்துக்குரிய எதிர்பார்ப்புக்குரிய வேட்ப்பாளராக திகழ்கிறார் . வழமைக்கு மாறாக இந்த மூன்றாவது சீசன் பிக்போஸ் தொடரில் மலேசியாவை சேர்ந்த முகின் ,இலங்கையை சேர்ந்த லூசியாவுடன் ஐவரும் பங்கு கொள்வது விறுவிறுப்பை கூட்டி உள்ளது முக்கியமாக உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழரிடையே தர்சன் மீதான நம்பிக்கை மகிழ்ச்சியை தருகிறது இலங்கை மண்ணின் புகழ் சேர்க்கும் தர்சனை வெற்றிபெற வைக்க எங்களால் முடிந்த ஆதரவை வழங்கி வைப்போம்

20 ஆக., 2019

வரதர் தனது காட்டி ,கூட்டி கொடுத்த வரலாற்றை சொல்லட்டும்?

தமிழ் மக்களுடைய விடுதலைக்காக தாங்கள் எல்லாம் போராடியவர்கள் என்று கூறுகின்ற வடகிழக்கு முன்னாள் முதலமைச்சராக இருந்த வரதராஐப் பெருமாள் அந்த விடுதலைப் போராட்டத்தை தாங்கள் எல்லாம் தான் காட்டிக் கொடுத்தவர்கள் என்ற வார்த்தையைச் சொல்ல மறந்துவிட்டார் எனக் கடுமையாக வரதராஐப் பெருமாளைச் சாடியுள்ள தமிழ்த் தேசிய மக்கள்

காலி மைதானத்தில் இலங்கை அணிக்கு வரலாற்று வெற்றி

நியூசிலாந்து அணிக்கு எதிராக காலி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 06 விக்கட்டுக்களினால் வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ளது.

தமிழ் மக்களுக்கு விழுந்துள்ள உதை-சுமந்திரன்

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை

லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளர், இது ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காவின் பங்கெடுப்பை பாதிக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மஹிந்த எதிர்க்கட்சி தலைவர் பதவிவகிக்க தகுதியில்லை - வெடிக்கும் சர்ச்சை

பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ளது. பொதுஜன பெரமுனவின் புதிய தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ கடந்த வாரம் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும், எம்.பி பதவியையும்

19 ஆக., 2019

வல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்! சட்டத்தரணி சயந்தன்

மரபுரிமைக்குரிய விளையாட்டு,மொழி, கலை, சமயம் பண்பாடு,கலாசாரம் போன்ற தனித்துவமான ஓர் அடையாளத்தை கொண்ட இனமாக தமிழினம் இருக்கின்றது. இவ்வாறு தனித்துவமான ஒரு இனமாக தமிழினம் தொடர்ந்தும் இருந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் குறி வைத்து

சவேந்திர சில்வாவின் நியமனம் தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அவமரியாதை

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமை தமிழ் மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அவமரியாதை எனவும் அதேவேளை, அவரின் நியமனத்தினால் மிகுந்த கலக்கமடைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.

மட்டு. பல்கலைக்கு எதிராக போராட்டம்

.

விடுதி மீது குண்டுவீச்சு, வாள்வெட்டு

யாழ்ப்பாணம், கொக்குவில்– ஆடியபாதம் வீதியில் உள்ள விடுதி ஒன்றுக்குள் புகுந்த சிலர், பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்தவர்களை வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளனர். புதிதாக திறக்கப்பட்ட குறித்த விடுதியில் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ?

சிறிலங்கா அதிபர் தேர்தல் களத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவை மட்டும் நாம் குற்றவாளியாகப் பார்க்கவில்லை. இனப்படுகொலைக் குற்றவாளியாக சிறிலங்கா அரசினையே(state) நாம் பார்க்கின்றோம். இனப்படுகொலை அரசின் முகமாக ஆட்சிபுரிந்தவர்கள்

இராணுவ தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா-அமெரிக்கா ஆழ்ந்த கவலை

இலங்கை இராணுவ தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பாக, ஆழ்ந்த கவலையடைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. புதிய இராணுவ தளபதியின் நியமனம் தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில்

இது போன்ற கீழ்தரமான போராட்டத்தை பார்த்தில்லை!’ - இந்திய கொடியை மீட்ட பெண்ணுக்கு குவியும் பாராட்டு

காஷ்மீர் விவகாரத்தை முன்வைத்து லண்டனில் பாகிஸ்தானியர்கள் நடத்திய போராட்டத்தில், அவமதிக்கப்பட்ட தேசிய கொடியை கூட்டத்துக்குள் புகுந்து பறிமுதல்செய்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

கோத்தபய மற்றும் டக்ளஸ் கருணா உயிருக்கு அச்சுறுத்தல் - சிறிசேனாவிடம் முறையிட்டார்கோத்தபய ராஜபக்சே

கோத்தபய மற்றும் டக்ளஸ் கருணா உயிருக்கு அச்சுறுத்தல் - சிறிசேனாவிடம் முறையிட்டார்கோத்தபய ராஜபக்சே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அதிபர் சிறிசேனாவிடம் முறையிட்டார்.

தொடங்கியது ரணில் ஆட்டம்:கைதாகலாம் கோத்தா?

மகிந்த குடும்பத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஆறு முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

விடுதலைப்புலிகளது மீள் எழுச்சி தொடர்பில் உருவாக்கப்பட்டுவரும் அரசியல் பூதாகரப்படுத்தலின் தொடர்ச்சியாக பளையில் வைத்தியர் சிவரூபன் கைது?

பளை வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி .சிவரூபன் நேற்றிரவு கைதாகியுள்ளார்.அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்றிரவு பளை வைத்தியசாலையில் வைத்து கைதாகியுள்ளார்.

சித்தார்த்தன் தந்தையினை சுட செல்வம் உத்தரவிட்டாரா?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆலாலசுந்தரம் மற்றும் தர்மலிங்கத்தை கொலை செய்ய செல்வம் அடைக்கலநாதன் உத்தரவிட்டதாக டெலோ அமைப்பின் முன்னாள் மூத்த போராளியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதனை அக்கொலைகளை அரங்கேற்றுவதில்

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று அலரி மாளிகையில்

குறித்த கூட்டத்தில் ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும், ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து அமைக்கவுள்ள கூட்டணி தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளன.அதேவேளை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் தொடர்பிலும் இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

கனடாவில் அதிகரித்து வரும் கரடிகள் அட்டகாசம்

பிரிட்டிஷ் கொலம்பியாவில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை, கரடியொன்று உடைத்துள்ளது. வன்கூவரிலுள்ள பெண்ணொருவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதையடுத்து அவர் மனிதனொருவரால் உடைக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பத்தில்

வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்

வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின் உள்மாவட்டங்களில் ஒன்றான மிர்பூரில் சலந்திகா என்னும் இடத்தில் ஒன்றோடு ஒன்று ஒட்டியவாறு 1500-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இருந்தன. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அங்கிருந்த குடிசை வீடுகளில் திடீரென தீப்பற்றியது. பல

ஓடிப்போன கோத்தா போட்டியிட முடியாது

நாட்டை விட்டு ஓடிப்போனவருக்கு நாட்டின் மீது பற்று இருக்கமுடியாது.வேறுநாடொன்றின் பிரஜையான ஒருவர் நாட்டில் நடைமுறை அரசியலமைப்புக்கிணங்க தேர்தலில் நிற்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

பொறுப்புக்கூறி விட்டு போட்டியிடட்டும்நா- உ .சி.சிவமோகன்

இறுதிப் போரில் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்து விட்டு கோத்தாபய தேர்தலில் போட்டியிடட்டும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோத்தா குறித்து இன்று விசாரணை

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு குறித்து ஆணைக்குழு இன்று ஆராயவுள்ளது.கோத்தாபய ராஜபக்‌ஷவின் கடவுச்சீட்டின் உண்மைத் தன்மை மற்றும் இலங்கை பிரஜாவுரிமை குறித்து ஆணைக்குழு ஆராயவுள்ளது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி

18 ஆக., 2019

கோத்தாவை ஆதரிக்கமாட்டேன் – மைத்திரி

சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக போட்டியிடும் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இம்முறை போட்டியிடுவது உறுதி-சஜித் பிரேமதாஸ

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடுவேன் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அம்பலாந்தொட்ட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மெக்சிகோவில் சிக்கிய இலங்கையர்கள்

சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் உட்பட 67 பேர் மெக்சிக்கோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்கள் மெக்சிக்கோ கரையோர அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

கோத்தாவுக்கு வாக்குகள் கிடைப்பது கடினம்- சித்தார்தன்

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு, தமிழ் மக்களின் வாக்குகள் கிடைப்பது மிகக் கடினம் என தான் கோத்தாவிடம் தெளிவாக எடுத்து கூறியுள்ளதாக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்தன் கடந்த வாரம், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்

ரணிலை சந்தித்த தமிழ்க்கட்சி தலைவர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்காவுக்கும், தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் தலைவருக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றுமுன்தினம் இரவு இந்த சந்திப்புஇடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

17 ஆக., 2019

ஐதேமுவின் முக்கிய கலந்துரையாடல் தோல்வி

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் இன்று (17) காலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் தீர்மானம் இன்றி நிறைவுற்றது.

மகள் வருவதில் தாமதம் பரோலை நீட்டிக்கக்கோரி உள்துறை செயலாளருக்கு நளினி

மகள் வருவதில் தாமதம் பரோலை நீட்டிக்கக்கோரி உள்துறை செயலாளருக்கு நளினி மனுமகள் வருவதில் தாமதம் ஆவதால் மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கக்கோரி உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவருக்கு நளினி மனு அனுப்பி உள்ளார்

யாழ் அபிவிருத்தி தொடர்பில் ரணில் தலமையில் கூட்டம்

யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திக்கான முன்மொழிவுகள் தொடர்பான கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலமையில் யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

ஐதேக கூட்டணி பங்காளிகளின் முக்கிய கூட்டம் இன்று

புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் இன்று காலை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோத்தாவுக்கு வாக்களிக்கக் கூடாது

தமிழர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தவித நன்மையும் கிடைக்க போவதில்லை எனத் தெரிவித்துள்ள, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எந்த ஒரு தமிழனும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவசரமாக அமெரிக்கா பறக்கிறார் கோத்தா!

ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோத்தபாய ராஜபக்ஷ அவசரமாக அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலை இலக்கு வைத்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வரும் கோத்தபாய ராஜபக்ஷ, அமெரிக்கா செல்ல தயாராகி வருகிறார்

16 ஆக., 2019

விக்கியை போட்டிக்கு அழைக்கும் சுதந்திரக் கட்சி

ஜனாதிபதி தேர்தலில் தம்மை போட்டியிடுமாறு சிறிலங்கா சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜேவிபி வேட்பாளராக அநுரகுமார!

ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபியின் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க களமிறக்கப்படுவார் என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபியின் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க களமிறக்கப்படுவார் என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோத்தாவின் கடவுச்சீட்டு- தொடங்கியது விசாரணை

முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாபய ராஜபக்‌ஷ, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திலிருந்து கடவுச்சீட்டை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பலாலியில் இருந்து ஒக்ரோபரில் விமான சேவை

பலாலி விமான நிலையம் தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது.
பலாலி விமான நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பலாலியிலிருந்து சர்வதேச விமான சேவையை ஆரம்பிப்பது

பலாலி ஓடுபாதைக்கு காணிகளை சுவீகரிக்க முயற்சி?

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை விஸ்தரிப்பின் போது மேலதிக காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கோத்தாவை கைது செய்ய முயற்சி

பொதுஜன பெரமுன கட்சிவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் கோத்தாபாய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டத்தரணி அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

15 ஆக., 2019

அமெரிக்க குடியுரிமை துறப்பு பட்டியலில் கோத்தாவின் பெயர் இல்லை

அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்வின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எழுவர் விடுதலையை தங்கள் உரிமையாக கருதக் கூடாது; தமிழக அரசு பதில்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் தற்போது 28 வருடங்களுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இதில் தண்டனை பெற்று வரும் நளினி தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மயிலிட்டி துறைமுகம் மக்களிடம் கையளிப்பு

நீண்டகாலத்தின் பின் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் - மயிலிட்டி துறைமுகம் இன்று (15) காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

10 வயது சிறுவனை முதலை தின்றது

பிலிப்பைன்ஸ் தீவுகளில் ஒன்றான பலவான் தீவு இயற்கை வளங்கள் நிறைந்தது. எனினும், அச்சுறுத்தல் நிறைந்த பகுதியாகவும் உள்ளது.
இங்குள்ள பாலபக் பகுதியில் நீர்நிலைகளில் உப்புநீர் வகையை சேர்ந்த முதலைகள் வசித்து வருகின்றன.

காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார் ஆகிறது!

பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார் ஆகிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், தங்கள் தரப்புக்கு ஆதரவாக

காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார் ஆகிறது

பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார் ஆகிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், தங்கள் தரப்புக்கு ஆதரவாக உலக

14 ஆக., 2019

நாம் எவருக்கும் முட்டுக்கொடுக்கவில்லை; ஒற்றுமை, சர்வதேச ஆதரவே எமது பலம் சுமந்திரன் உறுதி

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எவ­ருக்கும் முட்டுக்கொடுக்­க­வில்லை. ஓர்­மை­யுடன் குரல் கொடுத்து தன்­மா­னத்­துடன் தலை­நி­மிர்ந்து வாழ அடித்­த­ள­மிட்டு வரு­கின்­றது என்று தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் ஊடக பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

ரூ.154 கோடி மதிப்பிலான 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பாக, இரண்டு கட்டங்களாக, 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,000 புதிய பேருந்துகளை வாங்க, அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. கடந்த இரண்டரை ஆண்டு காலகட்டங்களில் 1,160 கோடி ரூபாய் செலவில் 3,881 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஹாங்காங்கில் நுழைய முனைந்த அமெரிக்கா! தடுத்து நிறுத்திய சீனா

ஹாங்காங்கில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் மசோதாவால் நகரத்தில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ந்து வருவதால்,aஅங்கு வானூர்தி நிலையம் முதல் அனைத்து இடங்களும் முடங்கியிருக்கும் நிலையில்.

தளபதி முன்னே:ரணில் பின்னே யாழ்.வந்தனர்?

யாழ்ப்பாணத்திற்கு விஐயம் ஒன்றினை சத்தம் சந்தடியின்றி மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரியகுளம் நாகவிகாரையில் வழிபாட்டில் இன்று மாலை ஈடுபட்டார்.பின்னர் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களை சந்தித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல்- உயர்நீதிமன்றத்தை நாடிய மைத்திரி

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றிடம் வியாக்கியானம் கோரியுள்ளார்.ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதா என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர்நீதிமன்றிடம்

புலிகளின் காலத்துப் பலம் ஒன்றை இழந்து விட்டோம் - கலங்கிய சேனாதி

போர்க் காலத்தில் அரச இராணுவம் தேமாவரி குண்டுகள், பொஸ்பரிங் காஸ் குண்டுகளை பயன்படுத்தியது என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.இன்று (14) வல்லிபுனத்தில் இடம்பெற்ற செஞ்சோலை படுகொலையின் 13ம் ஆண்டு நினைவேந்தலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

யாருடனும் பேசவில்லை, எவருடனும் பேசத் தயார்

தமிழர்களுக்கான தீர்வுத் திட்டங்கள் தொடர்பாக, எந்த தரப்பினருடனும் பேச்சு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற

பரோலில் வந்த நளினி சிறையில் முருகனுடன் சந்திப்பு!

பரோலில் வந்த நளினி வேலூர் ஜெயிலில் முருகனை இன்று சந்தித்து பேசினார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, மகளின் திருமணத்துக்காக, ஒரு மாதம் பரோலில் வெளியே வந்து,

12 ஆக., 2019

மீண்டும் வலுப்பெறும் ராஜபக்ச குடும்ப ஆதிக்கம் – ஷிரந்தி மாற்று வேட்பாளரா?

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேசிய மாநாட்டில், ராஜபக்ச குடும்பத்தினருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டமை, குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஜனாதிபதி தேர்தலை விடவும் புதிய அரசியல் யாப்பே நாட்டுக்கு அவசியம் -ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் சம்பந்தன் தெரிவிப்பு

தற்போது நாட்டுக்கு முக்கிய தேவையாக உள்ளது ஒரு ஜனாதிபதி தேர்தல் அல்ல மாறாக ஒரு புதிய அரசியல் யாப்பே என ஐரோப்பிய ஒன்றிய குழுவினரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கோயில் கும்பிட யாழ்.வரும் கோத்தா?

பொதுஜன பெரமுனக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று அநுராதபுரத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இன்று இரவு 7 மணிக்கு ருவன்வெலி மஹா விகாரையில் இடம்பெறும் ஆசிர்வாத பூஜையில், கோட்டாபய ராஜபக்ஷ,

ad

ad